தேவனுக்கே மகிமையுண்டாவதாக யோவான் 7:37, 38 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா
தினசரி அப்பம்
பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை பெற்றுக்கொள்ள திரிஷ்டாந்தம்:
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கு மகிமையுண்டாவதாக நீதிமொழிகள் 31:10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.
ஆவிக்குரிய நடத்தைகளாக நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் (திருஷ்டாந்தத்தோடு)
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக எபிரெயர் 11:15-19 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமென்.
மாம்ச கிரியைகளை அகற்றுதல்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கு மகிமையுண்டாவதாக ரோமர் 8:5-8 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா,
முதிர்வயதிலும் கைவிடாத தேவன்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கு மகிமையுண்டாவதாக கலாத்தியர்4 :28- 31 சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா
நித்தியசுதந்திரம் பெற்றுக்கொள்ள தேவன் திருஷ்டாந்தபடுத்துவது
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆதியாகமம் 17 :9 -11 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். சகோதரரே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவருடன் கூட இருப்பதாக. ஆமென்.
தேவனுக்கு அடிமையாகுதல்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக எசேக்கியேல் 44:9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை. சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகல விதத்திலும் உங்களுக்கு சமாதானத்தை தந்தருள்வாராக கர்த்தர் உங்கள் அனைவரோடும் கூட இருப்பாராக .ஆமென் அல்லேலூயா
சோதோம் கொமோரா பட்டணம் போல் ஆகாமல் நாம் நம்மை நித்திய அழிவிலிருந்து காத்து கொள்ளுதல்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக உபாகமம் 30 :19 -20 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றார் கிருபையானது உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக ஆமென். அல்லேலூயா.
கிறிஸ்து நமக்காக பலியானதால் அவருடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படுதல்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக ரோமர் 4:13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. நியாயப்பிரமாணத்தை சார்ந்தவர்கள் சுதந்திரவாதிகளானால் விசுவாசம் வீணாய் போம், வாக்குதத்தமும் அவமாகும். மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. ஆதலால், சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும் படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லா சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. கிருபையானது உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.
தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல்
சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கு மகிமையுண்டாவதாக I யோவான் 2:1, 2 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தை தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.