கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே,
ஆபிரகாம்
தேவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து செய்த காரியங்களை குறித்து நாம் தியானித்தோம்.
அங்கு தேவநீதி வெளிப்படுகிறது. தேவன் ஆபிரகாமை
ஆசீர்வதிக்கிறார்.
ஆபிரகாம்
தன்னை தாழ்த்தி தேவனுக்கு கிழ்ப்படிந்ததினால்,
ஆதியாகமம் 22:15-18
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து
ஆபிரகாமைக் கூப்பிட்டு:
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன்
என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து,
உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
என்றும்,
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்,
உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில்
ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
கர்த்தர் ஆபிரகாமிடத்தில்
உன் சந்ததி என்று சொன்னது, அவன் தன்னை முழுமையும்
ஒப்புக் கொடுக்கிறது. மேலும் ஈசாக்கை ஏக சுதனாக திருஷ்டாந்தபடுத்தி, ஈசாக்கு ஆபிரகாமுக்கு சாராள் பெற்றெடுத்த வாக்குத்தத்தத்தின் சந்ததியாக, அதை பலியாக தேவனுக்கு செலுத்தப் போகும் போது, எந்த மனுஷனிடத்திலும்
ஆலோசனை கேட்காதபடி, தேவன் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தன் ஒரே குமாரன் என்று பாராதபடி முழுமையும் தன்னை தேவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும்படி
தன்னை தாழ்த்தினபோது, தேவன் ஆபிரகாமுக்கு ஒரு
சந்ததி (கிறிஸ்து) என்பதையும் அவர் எல்லா ஜனங்களுக்காக
பலியிடப்படுகிறார். என்பதற்காகப் புதரில் கொம்புகள் சிக்கிக் கிடந்த ஒரு ஆட்டுக்கடாவை
அங்கு காண்பிக்கிறார்.
தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்தம் நிறைவேற்றும் வகையிலும் பொறுமையோடு காத்திருந்து
அதை பெற்றுக்கொண்டான்.
அதைத் தான்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்,
யோவான் 8: 56 -58
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்;
கண்டு களிகூர்ந்தான் என்றார்.
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும்
ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு
முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இதிலிருந்து நாம் முழுமையும் அறிந்துகொள்ள
வேண்டிய காரியம் என்னவென்றால் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று
உண்டானதோன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1: 15 -18
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து:
எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர்
என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும்
கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின்
மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,
பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
அவர் எப்படி
பிதாவை வெளிப் படுத்துகிறார் என்றால் இயேசு சொல்லுகிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14 :7 -11
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும்
அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்
என்றார்.
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை
எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம்
நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;
அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
நான் பிதாவிலும்,
பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை
என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்
செய்துவருகிறார்.
நான் பிதாவிலும்
பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது
என்னை நம்புங்கள்.
இதிலிருந்து
நான் முழுமையும் ஒப்புக்கொடுத்தாரல் மாத்திரமே கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்தில்
ஒப்புரவாகி ஐக்கிய பட்டிருப்போம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு காட்டி இருக்கிற எல்லா வழிகளையும் பின்பற்றி அவர்
பாதையில் நடப்போமானால் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்தி
அந்த பாதையில் நாம் போகும்போது கிறிஸ்துவாகிய ஜீவனுக்குள் நாம் பிரவேசிப்போம் அங்குதான்
சமாதானமும் சந்தோஷமும் நிறைவான ஆறுதலும் உண்டாகும். ஜெபிப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை