கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே,
ஆபிராமுடைய
மனைவி சாராய் அவளுக்கு பிள்ளையில்லாதிருந்தது. ஆபிராம் கர்த்தரிடத்தில் தேவரீர் எனக்கு
புத்திர சந்தானம் அருளப்படவில்லை என்று சொன்னபோது கர்த்தர்,
ஆதியாகமம் 15:5-6
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை
அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி;
பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர்
அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆனால் அதை
எப்படி அறிவேன் என்று கர்த்தரிடத்தில் கேட்டபொழுது
ஆதியாகமம்
15: 9-12 அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும்,
மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும்,
ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில்
கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்.
பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின.
அவைகளை ஆபிராம் துரத்தினான்.
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த
நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது
ஆதியாகமம் 15 :13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார்
தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள்
என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
பின்பு மிகுந்த
பொருட்கள் உடனே புறப்பட்டு வருவார்கள் என்றார்.
ஆபிராம் தேவனுக்கு பலி செலுத்தியதில் தேவன் விரும்பின பிரகாரம் செலுத்தாத படியால் சந்ததியே நானூறு வருஷம் அடிமையாக ஒப்புக் கொடுக்கிறதை பார்க்கிறோம்.
ஆகையால்
நாம் தேவனுக்கு நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்காவிட்டால் நம்மையும் காரிருள் மூடும்
மற்றும் நாம் மாம்சத்திற்கு மற்றும் சத்துருக்களுக்கும் நம்மை அடிமையாக ஒப்புக்கொடுப்பார். அதனால் நம்மை தேவனுக்கு அடிமையாக முழுமையும் ஒப்புக் கொடுப்போமானால்
நம்மை தேவன் ஆசீர்வதிப்பார்.
தேவன் ஆபிரகாமுக்கு
வாக்குத்தத்தம் கொடுத்தபிறகு சாராய் தன் பொறுமையை இழந்தவளாக இருந்ததால் அவளுடைய அடிமைப்
பெண்ணாகிய ஆகாரை மறுமனையாட்டியாக ஆபிரகாமுக்கு
கொடுக்கிற படியால் ஆபிராம் தன் மறுமனையாட்டியாகிய ஆகாருக்கு ஒரு இஸ்மவேல் பிறப்பதற்கு காரணமாயிருக்கிறான்.
ஆகார் கர்ப்பவதியாயிருக்கும்
போது தன் நாச்சியாராகிய சாராயை அற்பமாக எண்ணுகிறாள். அதனால் சாராய் ஆகாரை கடினமாக நடத்துகிறதை
நாம் தேவ வசனத்தில் கூட வாசிக்க முடிகிறது. அதனால் ஆகார் அவளை (சாராயை) விட்டு ஓடிப்
போகிறாள்.
ஆனால் கர்த்தருடைய
தூதனானவர் ஆகாரை கூப்பிட்டு, ஆகாரை, நீ எங்கே இருந்து வருகிறாய், எங்கே போகிறாய் என்று
கேட்டதற்கு ஆகார் என் நாச்சியாராகிய சாராயை விட்டு ஓடி போகிறேன் என்றாள்.
அப்பொழுது
கர்த்தருடைய தூதன் நீ உன் நாச்சியாரண்டைக்கு திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு
என்று சொல்லுகிறார்.
ஆதியாகமம் 16: 10-12
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை
நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும்
என்றார்.
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ
கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால்,
அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
அந்த இடத்தில் ஆகார் என்னைக்
காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் என்று சொல்லி நீர் என்னைக் காண்கிற தேவன் என்று
பெயரிட்டாள்.
ஆகையால் அந்தத்
துறவு பெயர் லகாய்ரோயீ எனப்பட்டது கர்த்தர் இந்த காரியத்தை ஆபிரகாம் மூலம் நமக்கு விளக்கிக்
காட்டி ஆகார் நீர் என்னைக் காண்கிற தேவன் என்றும் அந்த இடத்தில் ஒரு துறவு லகாய்ரோயீ
எனப்படுகிறது எது என்பதையும் ஆவிக்குரிய அர்த்தத்தில் நம்முடைய விசுவாசத்தின் அடிச்சுவடு
களில் நடக்கிறவர்களுமாயிருக்கிறவர்களுக்கும் ஒரு தகப்பனாய் இருக்கும்படி தேவன் ஆபிரகாமை
அடையாளமாக வைக்கிறார்.
என்னவென்றால்
ஆபிராமின் மறுமனையாட்டி ஆகார் என்பவளை தேவன் நமக்கு காண்பிப்பது நம்முடைய தேவனை பின்பற்றியும்
மாம்சத்தின் கிரியைகளை நாம் செய்வோமானால் நம்முடைய குமாரன் இஸ்மவேல் என்றும் அதே வீட்டுக்குள்
ஆபிராமின் மனைவி சாராய் என்பது சுயாதீனம் உள்ளவள் என்று நமக்கு காட்டுவது மேலான எருசலேம்
என்றும் இந்த இரண்டு கிரியைகளும் துவக்கத்தில் ஒரு மனுஷனுக்கு உலக வெளிப்படும்போது
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவிக்கு விரோதமாகவும் போராடுகிறது.
என்னவென்றால்
மேலான எருசலேம் சுயாதீனமுள்ளவள் பெற்றெடுத்த குமாரன் ஈசாக்கு தேவன் வாக்குத்தத்தம்
சந்ததியாக திருஷ்டாந்தபடுத்திக் காட்டுவது நமக்கு விளங்குகிறது.
அதைத்தான்
தேவ வசனத்தில் சாராய் அவளைக் கடினமாய் நடத்துகிறது பார்க்கிறோம் அதற்கு காரணம் ஆகார்
கர்ப்பவதியானதால்,சாராயை பரியாசம் பண்ணுகிறாள், அதனால் ஆபிராம் சாராயிடம் உன் விருப்ப
பிரகாரம் அவளுக்கு செய் என்று சொன்னதால் அவள் ஆகாரை கடினமாய் நடத்தி செல்கிறாள். ஆகார்
தன் நாச்சியாரை விட்டு ஓடிப் போகிறாள் இப்படிதான் தேவன் நம் இருதய சிந்தனையில் இருக்கிற
மாம்ச சிந்தனையை மாற்றுகிறார். ஆனால் அவர் ஓடி போகிறதே கண்ட தேவதூதன் திரும்பவும் அவள்
கர்ப்பவதியானதால் நீ போய் நாச்சியார் அண்டையில்
அடங்கியது என்று சொல்லி அனுப்புகிறதை பார்க்கிறோம். பின்பு அதே வீட்டுக்குள் தான் இஸ்மவேல்
பிறக்கிறான் இதுதான் நாம் எல்லாருடைய அனுதின ஜீவியத்தில் உள்ள ஆவிக்குரிய வாழ்க்கையில்
முதல் தோற்றம் இரண்டாம் தரம் அவளே வீட்டுக்குள் தேவதூதன் அனுப்பிவிட காரணம் என்னவென்றால்
இஸ்மவேல் முழுவளர்ச்சி அடைந்து ஆபிரகாமுடைய மகனாக விருத்தசேதனம் செய்து அடையாளம் காண்பித்து
காட்டுவது நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் இருக்கிற மாம்சம் விருத்தசேதனம் செய்து தேவ
கற்பனைக்குக் கீழ்படுத்தும் பொருட்டாக தேவன் விளக்கிக் காட்டுகிறார்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
-தொடர்ச்சி நாளை