முதிர்வயதிலும் கைவிடாத தேவன்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 17, 2020


கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

கர்த்தர் சொல்லியிருந்தபடி சாராள் பேரில் கடாட்சமானார் அதற்கு முன்பாக ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சமும் இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சமும் தன் வீட்டில் வளர்ந்த எல்லா ஆண்பிள்ளைகளின் மாம்சமும் விருத்தசேதனம் பண்ணினான்.

ஆபிரகாம் விருத்தசேதனம்     பண்ணப்பட்டது தொன்னுற்றொன்பது வயதும் இஸ்மவேலுக்கு விருத்த சேதனம் பண்ணும் போது பதின்மூன்று வயதாகவும் இருந்தது.

ஆபிரகாம் கர்த்தருக்காய் தன்னை விருத்தசேதனம் பண்ணி ஒப்புக்கொடுத்து பிறகு தேவன் ஆபிரகாமுக்கு கூடாரவாசலில் நிற்கும்போது தரிசனமாகிறார்.

மூன்று புருஷர்கள் நிற்கிறதை பார்த்தவுடனே ஆபிரகாம் அவர்களுக்கு எதிர் கொண்டு போய் தரைமட்டும் குனிந்து ஆண்டவரே உமது கண்களில் எனக்குத் தயவு கிடைத்தானால் என்னை விட்டு கடந்து போக வேண்டாம், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும் உங்கள் கால்களை கழுவி ,மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள்.

ஆதியாகமம் 17 :5

நீங்கள் உங்கள் இருதயங்களை திடப்படுத்த கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன் அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம் வரைக்கும் வந்தீர்கள் என்றான் அதற்கு அவர்கள் நீ சொன்னபடி செய் என்றான்.

( இவ்விதமான காரியத்தை தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் நாம் கால்களை கழுவி தான் அப்ப புசிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது)

உடனே ஆபிரகாம் சாராளிடத்தில் ஓடி சீக்கிரமாய் மூன்று படி மெல்லிய மாவு எடுத்து பிசைந்து அப்பம் சுட்டு என்றான்.

ஆபிரகாம் ஒரு நல்ல இளம் கன்றையும் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்து சீக்கிரத்தில் சமைத்து  பின் வெண்ணையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்து அவர்கள் அருகே மரத்தடியில் நிற்கும்போது அவர்கள் அதை புசித்தார்கள்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது காரியம் என்னவென்றால் ஆபிரகாமையும் சாராளையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.

 

தேவ தூதர்கள் ஆபிராகமிடம் உன் மனைவி சாராள் எங்கே என்று கேட்கும் போது அவள் கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.

ஆதியாகமம் 18: 10

அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

இருவரும் வயது சென்றவர்களாயிருந்தார்கள் அதனால் சாராள் இதைக் கேட்ட பொழுது நகைக்கிறாள்.

 ஆதியாகமம் 18 :13 -15

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

இதிலிருந்து நமக்கு தேவன் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் சாராள், நம்மெல்லாருக்கும் தாயானவள் என்று தேவன் எடுத்துகாட்டி அவளை சுயாதீனமுள்ளவள் அதற்கு மேலான எருசலேம் என்னும் ஒரு குமாரன் பிறப்பான் அவன் ஈசாக்கு வாக்குத்தத்தின் சந்ததியாகவும் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறதை தியானிக்க முடிகிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்மில் கிறிஸ்துவின் தோற்றம் எந்த வயதிலும் சம்பவிக்கும், தேவனே விசுவாசித்தால் நம் உள்ளத்தில் கிறிஸ்து உருவாகுகிறார் என்பது தெரியவருகிறது.

அதைத்தான்,

கலாத்தியர் 4 :19

என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.

அதை தான்,

ஆதியாகமம் 21:1-2

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

 

ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஆபிராகம் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டு,தேவன் கட்டளையிட்டபிரகாரம் எட்டாம் நாளிலே ஈசாக்கு விருத்தசேதனம் பண்ணிணான்.

ஆதியாகமம் 21:9- 12

பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.

தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள் என்று சொல்லுகிறார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருவது நம்முடைய மாம்சம் சிந்தை மாற்றப்பட்டு ஆவிக்கேற்ற சிந்தைகளை நாம் உருவாக்கி கொண்டிருக்க வேண்டும். மேலும் மேலான எருசலேம் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்  வார்த்தைகளுக்கு நாம் எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் .நம்முடைய முதிர் வயதிலும் அவர் நம்மை கைவிடாதிருப்பார்.

ஜெபிப்போம், கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்

 

-தொடர்ச்சி நாளை