தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 12, 2020


ரிந்துக்  கொள்ள வேண்டியது நாம்,  நம்முடைய இருதயமே அந்த பலிபீடம்,  பலிபீடம்  பரிசுத்தப்பட்டால் மாத்திரமே,  நாம் எந்த காணிக்கை செலுத்தினாலும்  அது பரிசுத்தமாயிருக்கும் பரிசுத்தமுள்ளவைகைகள் மட்டுமே  தேவனுக்கு பிரியமாயிருக்கும்,  தேவ ராஜ்யத்துக்குள்  பிரவேசிக்க முடியும்.

வெளி 21:27    

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

நாம் பரிசுத்தப்பட வேண்டுமானால் நம்மையும்,  நமக்குள்ள சகலத்தையும் தேவனுக்கென்று அர்ப்பணிக்க வேண்டும். நம்மை நாம் தேவனுக்கென்று வெறுமையாக்கி கொடுப்போமானால் தேவன் நம்மை பரிசுத்தப்படுத்துவார். தேவனுடைய வசனம் நம்மை பரிசுத்தப்படுத்திக்  கொண்டிருக்கும் எடுத்துக்காட்டாக ஆபிரகாம் எப்படி தன்னை ஒப்புக் கொடுத்தான், நினைத்து பாருங்கள்.

ஆபிரகாமை தேவன் சோதிக்கிறார் எப்படியெனில் தேவன் ஆபிரகாமே என்றார்; அவன் இதோ அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22:2, 3

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

 

மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது தேவன் ஆபிரகாமிடத்தில் சொன்ன இடத்தை தூரத்திலே பார்க்கிறான். அந்த இடம் தான் மோரியா மலை.

ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை அழைத்துக்கொண்டு போகும்போது,  ஈசாக்கு தகப்பனிடத்தில்,  என் தகப்பனே என்றான்; அதற்கு அவன் என் மகனே,  இதோ இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன் இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது,  ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

அதற்கு தகப்பன் மகனை நோக்கி: தேவன் பார்த்துக்கொள்வார் என்றான். மகனை பலி  கொடுக்கும்படி ஆபிரகாம் வெட்டும்படி  கைகளை நீட்டும் போது

ஆதியாகமம் 22:11-14

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

முதலாவது நம்முடைய ஆத்துமா, ஆவி, சரீரம் முழுமையும்  தேவனுக்காக நாம் ஒப்புக் கொடுத்து நாம் பலியாகும் போது தேவன் நம்மை ஆட்டுக்குட்டியான வருடைய இரத்தத்தால் மீட்டெடுக்கும் படியாக,  ஒரு தெளிவான திருஷ்டாந்ததோடு கூட,  புதரில் தன் கொம்புகள் சிக்கிண்டிருந்த,  ஒரு ஆட்டுக்கடாவை அபிரகாமுடைய பார்வைக்கு  காட்டுகிறார். அதை கொண்டு வந்து தன் குமாரனுக்கு பதிலாக பலியிடுகிறான். இது நம்முடைய ஆத்துமா பாவநிவாரண பலியாக,  தகனபலியாக,  சமாதான பலியாக,  சர்வாங்க தகனபலியாக  ஒப்புக் கொடுப்பதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக கிருபாதார  பலியாகிறார். கிறிஸ்து நமக்காக உயிர்த் தெழுந்தார். அவர்தான் கர்த்தருடைய பரிசுத்த பர்வதம். நமக்காக எல்லாமே அவர் பார்த்துக் கொள்வார் இப்படிப்பட்ட விஸ்வாஸ்சம் நம் எல்லோர் உள்ளத்திலும் வளரவேண்டும். இதைத்தான்,  கலாத்தியர் 3:7  ஆகையால் விசுவாசமார்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

ரோமர் 3:20-24

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியை களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ங்களும் சாட்சியிடுகிறது.

அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,

இவ்விதமாக விசுவாசித்தால் கிறிஸ்து நமக்குள்ளும், நம்மேலும் அது பலிக்கிறது. அந்த பலியே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலாகிய அந்த தேவநீதி. இது விசுவாசிக்கிறவர்கள் மேல் அதை கிரியையில் வெளிப்படுகிறது. இவ்விதமாய் கர்த்தர் யாவரையும்  ஆசீர்வதிப்பாராக. ஜெபிப்போம்.

 

-தொடர்ச்சி நாளை