கர்த்தருக்குள்
பிரியமானவர்களே,
தேவன் ஆபிரகாமை
மோரியா தேசத்திற்குப் போ என்று சொல்லி, ஈசாக்கை
பலியிடும் படி செய்து, அவனை சோதிக்கிறார்.
அவனைச் சோதித்தப் பிறகு அவனை ஆசீர்வதிக்கிறதைப்
பார்க்கிறோம். பின்பு சோதனையில் ஜெயம் எடுத்த
ஆபிரகாம் தேவனிடத்தில் உள்ள வாக்குத்தத்த சந்ததியை சுதந்தரித்துக் கொள்கிறான். பின்பு
அவன் மனைவியாகிய சாராள் மரிக்கிறாள். அவளை மக்பேலா என்னும் குகையை சொந்த கல்லறை பூமியாக
விலைக்கு வாங்கி, அங்கு அடக்கம் பண்ணுகிறான். இந்த மக்பேலா குகை கானான் தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிராக இருக்கிறது.
அதன் பின்பு
ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானபோது கர்த்தர் ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்.
ஆபிரகாம்,
தனக்கு உண்டான எல்லாவற்றிற்க்கும் அதிகாரியான தன் ஊழியக்காரனை நோக்கி,
ஆதியாகமம் 24:3, 4
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில்
நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும்
போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத்
தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ்
வை என்றான்.
அதற்கு ஊழியக்காரன் ஆபிரகாமிடத்தில் அவ்விடத்து
பெண் என் பின்னே வர மனதில்லாதிருந்தால், நீர்
விட்டு வந்த தேசத்திற்கு உன்னுடைய குமாரனை மறுபடியும் அழைத்துக் கொண்டு போக வேண்டுமோ என்றான்.
அதற்கு ஆபிரகாம் என் குமாரனை நான் விட்டு
வந்த தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாயிரு.
ஆதியாகமம் 24:7
என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என்
இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத்
தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ
அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு
முன்பாக அனுப்புவார்.
ஆபிரகாம் சொன்னது போல் அந்த ஊழியக்காரன்
ஆணையிட்டுக் கொடுக்கிறான்.
இதிலிருந்து நமக்குத் தெரியப்படுத்துகிற காரியம் என்னவென்றால்,
நாம் பாரம்பரிய வாழ்க்கை, பாரம்பரிய வழிபாடு
பாரம்பரிய சிந்தைகள், பாரம்பரிய கலாச்சாரங்கள்
என்பவைகளாகிய கல்தேயருடைய கிரியைகளை விட்டு தேவன் நம்மை கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்த
பிறகு நம் மனது எந்த விதத்திலும் அங்கு பழைய
கிரியைகளுக்கும், பழைய வழிபாட்டு ஸ்தலங்களுக்கும், பழைய கலாச்சாரத்திற்கும், பழைய ஆடம்பர வாழ்க்கைக்கும் போகக்கூடாது, நம்முடைய உறவு புதிய உறவாக கிறிஸ்துவோடு கூட இருக்க வேண்டும் என்பதற்காக, பழையவைகள்
யாவையும் களைந்து போட்டு புதியதை தரிக்க
வேண்டும் என்பதற்காகவும் தேவன் ஆபிரகாமை வைத்து நம்மை திரிஷ்டாந்தப்படுத்தி கிறிஸ்துவோடு மணவாட்டியானவராகிய
பரிசுத்த ஆவியானவராலே நாம் உறவு வைத்து வாழ
வேண்டும் என்பதற்காக இவ்விதம் தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.
அதைத்தான்
ஆதியாகமம் 24:8
பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில்,
அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய். அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும்
அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
நாம் எப்படியும் மணவாட்டி கண்டெத்த வேண்டும் என்பதையும் அதை கண்டெத்தாவிட்டால் தேவனுடைய ஆணைக்கு நீங்கலாயிருக்கிறோம் என்பதையும், மேலும் நம்முடைய ஆத்துமா வேறு எந்த இடத்திற்கும்
போகக்கூடாது என்றும், நம்முடைய ஆத்துமா கிறிஸ்து
மூலம் நம்மை தேவன் மீண்டெடுப்பதையும் மீட்டெடுக்கப்பட்ட நம்முடைய ஆத்துமா உலக இன்பங்களுக்குள்
சிக்க கூடாது என்பதையும் மணவாட்டி ஆகிய பரிசுத்த ஆவியானவரை நாம் முயற்சி செய்து பெற்றுக்
கொள்ள வேண்டும் என்பதால், ஆபிரகாம் சொல்கிறான்
அங்கே மாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போக வேண்டாம் என்றான்.
மேலும் ஆபிரகாம் கானானியருடைய தேசத்திலிருந்து
ஈசாக்குக்கு பெண் கொள்ள வேண்டாம் என்று சொன்னது, ஆபிரகாம் அங்கு அந்நியனும் பரதேசியாய்
இருக்கிறேன் என்று சொல்கிறதை பார்க்கிறோம்.
மேலும் நம் ஐக்கியதைகள் எல்லாம் புறஜாதிகளோடு கலந்து இருக்க கூடாது என்பதையும், கானான் தேசத்தில்
ஜாதிகள் தங்கியிருந்ததாகவும், அது ஜாதிகளுடைய
தேசமாகவும், அந்த தேசத்தை தேவன் நமக்கு சொந்தமாக்கும்
படியாக அங்குள்ள ஜாதிகளை நாம் விசுவாசத்தினால்
துரத்தும் படியாகவும், எல்லாவித ஜாதிகளும் அந்த தேசத்திலிருந்த மாற்றப்பட்டு இஸ்ரவேலுக்கு
உங்கள் சுதந்திரபாகமான கானான் தேசத்தை உங்களுக்கு சொந்தமாக தருவேன் என்றார். இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம்
சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய
உள்ளத்தில் இருக்கிற ஜாதிகளை (அதின் கிரியைகளை)
அகற்றிவிட வேண்டும் நம் ஐக்கியம் யாரோடு இருக்க வேண்டுமென்றால்,
I யோவான் 1: 3, 4
நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி,
நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம்
பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி
இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
மேலும் அந்நிய
சபைகளில் நாம் ஐக்கியப்பட்டு, அந்நிய சபை என்று
சொல்லும்போது தேவனுடைய சத்திய உபதேசம் அல்லாத உலகப்பிரகாரமான நடக்கையோடு நடக்கிற சபைகளில்
நாம் ஐக்கியப்படுவோமானால் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் உலகத்தின்
ஆவியாகிய அசுத்த ஆவியால் நடத்தப்படுவோம் என்பதை
நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் நம்முடைய தேவனாகிய கர்த்தர் சாராளை மேலான
எருசலேமாகவும், சுயாதினமுள்ளவளாகவும், ஆபிரகாமை
எஜமான் என்றும், நம்முடைய ஆத்துமாவை முழுமையும்
பலியாக கொடுக்கும்படியாக தேவன் ஈசாக்கை பலி கொடுக்கும்படியாகவும், அதற்கு ஒப்புக் கொடுக்கும்போது ஒரு வெள்ளாட்டுக்கடாவை
தேவன் காண்பிப்பதையும், நமக்குள்ளாக தேவ நீதியை
நிறைவேற்றும்படியாக கிறிஸ்து நமக்காக கிருபாதார
பலியாக பலியிடப்பட்டு, கிறிஸ்துவின் ஜீவன்
கிருபையாக தேவன் பொழிந்தருளுகிறார். அனுதினம்
வசனம் ஏற்றுக் கொண்டு நடக்கும் போது நம்மை கர்த்தர் கிருபையினால் நிரப்புகிறார். அது பரிபூரணமடைவதற்கு ஏதுவாயிருக்கிறது.
ஆபிரகாமின்
ஊழியக்காரன் அதற்காக தேவனிடத்தில் அந்த ஆசீர்வாதம் பெற்று கொள்ள வேண்டும் என்று ஜெபித்து
ஒரு தண்ணீர் துரவண்டையில் நிற்கிறான்.
ஆதியாகமம் 24:13-15
இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையில்
நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்கவேண்டும்
என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன்
என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும்,
என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே,
இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்தவேலுக்குப்
பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள்.
ஜெபிப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
-தொடர்ச்சி நாளை