கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

ஆபிரகாமுக்கு தேராகு போட்ட பெயர் ஆபிராம் . ஆபிராம் லோத்தை விட்டு பிரிந்த பிறகுதான் தேவன் அவனை ஆசீர்வதிக்கிறதை பார்க்கிறோம்.

ஏனென்றால்  லோத்தின் உள்ளத்தில் இருந்தது உலக ஆசை. அதனால் தான் கண்ணுக்கு விருப்பமான தேசத்தை தெரிந்தெடுக்கிறான் ஆனால்  ஆபிராமே அப்படியல்ல, கானான் தேசத்தை சுதந்தரிக்கிறான் கண்ணுக்கும் ஜீவனத்திற்கும் விருப்பமான காரியங்களை செய்பவர்கள் லோத் தெரிந்துகொண்ட சோதோம் கொமாரா பட்டணம் போல பாவம் நிறைந்ததாக இருக்கிறோம் சோதோம் கொமோரா பட்டணம் பாவம் நிறைந்து இருந்ததால் தேவ அந்தப் பட்டணத்தை அழிக்க அவர்  சித்தமுள்ளவராயிருக்கிறார். அந்தப் பட்டணம் தீயினால் அழிகிறதை நாம் பார்க்க முடிகிறது நாம் ஒருபோதும் சோதோம் கொமோரா போல் இருக்கிறதே தேவன் விரும்பவில்லை சோதோம் கொமாரா பட்டணத்திற்கு லோத்தும் , லோத்தின் குடும்பமும் குடியேறினார்கள். நாம்  தேவ வசனம் வாசிக்கும்போது தேவன் லோத்தையும் குடும்பத்தையும் அழிவிலிருந்து காத்து இரட்சித்து எடுக்கும்படியாக தேவன் சித்தம் வைத்திருக்கிறார். லோத் நீதிமான் என்று எழுதப்பட்டிருக்கிறது அவன் நீதிமானாக இருந்ததால் இரண்டு தூதர்களை தேவன் லோத்தினிடத்தில் அனுப்புகிறதை பார்க்கிறோம். ஆனால் லோத் புகுந்த பட்டணம்தான் சரியில்லாமல் இருந்தது இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் லோகத்தின் இருதயம் நீதியுள்ள இருதயம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவன் சோதோம் கொமோரா  பட்டணம் அவனுக்குள் ஒரு பூரண சமர்ப்பணம் வராததினால் தேவன் அவனை இந்த அழிவிலிருந்து விலக்கி இரட்சித்து மீட்டுக்கொள்ள தேவன் வழி ஒருக்குகிறதை பார்க்கிறோம் அதே போல் தான் நாமும் அறியாமல் இருக்கிற பாவ இச்சைகளை விட்டுவிலகி தேவனை சார்ந்து வாழும் படியாக பல வழிகளில் தேவன் நம்மோடு எச்சரித்தும் ,பேசியும், கடிந்தும் ,சிட்சித்தும், கொடிய நோய் ,வாதை ,துன்பம், கொள்ளைநோய் இவ்விதமான பல வழிகளில் நம்மை மீட்டெடுக்கும் படியாக தன்னுடைய ஒரேபேரான குமாரனை அனுப்பியும் நாம் உணராமல் இருக்கிறோம் அதை உணருகிறவர்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து இரட்சித்து பாதுகாத்து பரம ராஜ்யத்திற்கு நம்மை தகுதியாக்குகிறார். ஆனால் அனேகம் பேர் வழியில் விழுந்து விடுகிறோம் நம்முடைய விசுவாச ஓட்டத்தில் நாம் பரிசுத்தத்தை காத்து ஓட வேண்டும். ஆனால் லோத் தேவன் அவனே அழிவின் பட்டணத்தில் இருந்து தப்புவித்து வெளியே விட்ட பின்பு ,வழியில் விழுந்துவிடுகிறது பார்க்க முடிகிறது ஆனால் அனேகம் பேர் சோதோம் கொமோரா பட்டணம் ஆகவே இருந்து நித்திய அழிவில் மாண்டு போகிறார்கள்.

 

11 பேதுரு 2:6-10

சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாகிக் கவிழ்த்துப்போட்டு ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரம கிரியைகளே கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க

கத்தர் தேவபக்தி உள்ளவர்களை  சோதனையினின்று இரட்சிக்கவும் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

விசேஷமாக  அசுத்த இச்சையோடு மாம்சத்திற்ககேற்றபடி நடந்து கர்த்ததுவத்தை அசட்டை பண்ணுகிறவர்களை அப்படி செய்வார்.

இவர்கள்  துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

தேவன் லோத்தை எச்சரித்து துரிதப்படுத்தி கொண்டிருக்கும்போது, ஆதியாகமம் 19 : 16

அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

லோத்தையும் குடும்பத்தையும் வெளியே கொண்டுபோய் விட்டு பின்பு அவர் உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, எங்கும் நில்லாதே, நீ வழியில் அழியாதபடி மலைக்கு ஓடிப்போ என்று சொல்லும்போது மீண்டும் அவன் அப்படியல்ல ஆண்டவரே,

ஆதியாகமம் 19: 19         

 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

 

அவன் கர்த்தரிடத்தில் பக்கத்தில் ஒரு சின்ன ஊர் அதுகிட்ட இருக்கிறது என்று கேட்டுக்கொண்டான்.

அதற்குக் கர்த்தர் அவன் கேட்டுக்கொண்ட காரியத்திலும் அனுக்கிரகம் செய்கிறார்

ஆதியாகமம் 19: 22- 26

தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.

அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,

அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

ஆதியாகமம் 19 :30                                       

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.

பின்பு தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் தேவன் அழிவிலிருந்து தப்ப விட்ட பின்பும் தங்களுக்குள் இருந்த மாம்ச இச்சைகளில் நிமித்தமாக மோவாப்,அம்மோன் ஜாதிகள் பிறக்கலாயின.

இவ்விதமாக நீதிமானாக இருந்த லோத் அழிவில் விழுந்து விடுகிறான் இதை வாசிக்கிற தேவ ஜனமே நம்மை நாம் சோதித்துப் பார்க்க வேண்டிய நேரம். தேவன் நம்மை அழியாத இராஜ்யத்தை சுதந்தரிக்கும் படியாக தெரிந்துகொண்டார் பரிசுத்தமாகுவோம்.

நாம் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம் கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக

-தொடர்ச்சி நாளை