கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
முந்தின நாளில் நாம் தியானித்த பகுதியில் ஆபிரகாமின் ஊழியக்காரன் கொண்டுவந்த
ஒட்டகங்கள் சபையின் ஜனங்களாகவும், ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கு தேவன் ஆயத்தப்படுத்துகிற மனைவி ரெபெக்காள் துரவில் தண்ணீர் எடுக்கும் படி வந்த காரியம், கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சபையை நடத்தி வரும்
படி தேவன் தெரிந்தெடுத்த ஊழியக்காரர்கள் விண்ணப்பிக்கும்போது தேவ சித்தம் நிறைவேறுவதாகவும், இவ்வுலக காரியமானாலும் பரலோக காரியங்களானாலும் எல்லாம் தேவசித்தம் நிறைவேற்றுகிறதாகவும்,
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஜெபிக்கிற காரியத்திருக்கு தேவன் பதில் கொடுக்கிறவராக, ஆபிரகாமின் ஊழியக்காரன் அடையாளமாக வைத்து ஜெபித்த
எல்லா காரியங்களையும் தேவன் கேட்டு ஆபிரகாம்
சொல்லி அனுப்பினது போல், ஆபிரகாமின் தேசமும், ஆபிரகாமின் இனத்தாளுமாகிய ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வருகிறதையும் ஈசாக்குக்கு தகுந்த மனைவியை தேவன் ஊழியக்காரன்
மூலம் காட்டி கொடுக்கிறதையும் அவள் வந்து இறங்கின துரவு கிறிஸ்துவின் சத்திய சபையாக திரிஷ்டாந்தப்படுத்தி,
மேலும் ரெபெக்காள் அதில் இறங்கி தண்ணீர் வார்த்து
ஒட்டகங்களுக்கு கொடுப்பது, பரிசுத்த ஆவியானவர் சபைக்குள்ளாக வாசம் பண்ணி வந்தால், அது மணவாட்டி சபையாகவும், ஆபிரகாமின் ஊழியக்காரன்
தண்ணீர் கேட்பது, கர்த்தருடைய ஊழியக்காரர்கள்
கிறிஸ்துவின் ஊற்றாகிய, பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து ஜீவ வசனத்தை குடிக்கும்படியாகாவும், மேலும் ஒட்டகங்களுக்கு வார்க்கிறது சபையின் எல்லா
ஜனங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவ வசனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக
தேவன் ஆபிரகாமின் ஊழியர்கரானையும், ரெபெக்காளையும் வைத்து தெளிவுபடுத்துகிறார்.
ஆபிரகாமின் ஊழியக்காரன் ஒட்டகங்கள் தண்ணீர்
குடித்து தீர்ந்த பின்பு அவளுக்கு அரைசேக்கல் எடையுள்ள பொற் காதணிகளையும், அவள் கைகளுக்கு பத்துச் சேக்கல் எடை பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுக்கிறதை பார்க்கிறோம்.
இதனை வாசிக்கிறவர்கள், சிந்திக்க வேண்டும்.
இவ்வுலகில் அநேகர் இவ்வித வார்த்தைகளை தியானித்தால் இந்த உலகத்தில் உள்ள அழிந்து போகிற பொன், வெள்ளி
இவ்விதமான காரியங்களை தங்கள் வாழ்க்கையில் அணிந்து கொள்வார்கள். இது அவர்கள் நினைப்பது
மிக தவறான காரியம். தேவன் நமக்குத் திரிஷ்டாந்தபடுத்தி தெளிவாக்கின
காரியங்களை நாம் சிந்திக்க தேவன் நமக்கு தெளிந்த புத்தியையும், ஞானத்தையும் தர நாம் ஜெபிக்க வேண்டும்.
அழிந்துபோகிற ஒன்றும் அழியாமையை சுதந்தரிக்க முடியாது. அழியாத நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமானால்.
இவ்வுலக மாயையான காரியங்களை விட்டு விலக வேண்டும்.
நாம் அவற்றை நம்மிடத்திலிருந்து நீக்கிவிட வேண்டும்.
ஆபிரகாமின் ஊழியக்காரன் ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து தீர்ந்த பின்பு அரை சேக்கல் எடையுள்ள பொற் காதணியையும், பத்து சேர்க்கல் எடையுள்ள இரண்டு கடகங்களையும் அவள் கைகளுக்கு, கொடுக்கிறதை பார்க்கிறோம்.
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே,
ஒட்டகங்கள் குடித்து
தீர்ந்த பின்பு என்று எழுதப்பட்டிருப்பது,
நாம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஜீவ
வசனங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போது தேவன்
நம்மை மணவாட்டி சபையாக்குகிறார். அப்போது தேவனுடைய கிருபையினாலும், சத்தத்தினால் நம்மை அலங்கரிப்பார். அவ்விதம் தேவ மகிமையினால்
நாம் நிரப்பப்படும் போது தேவன் தங்குகிற மகிமையான ஆலயமாக தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.
பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் அலங்காரத்தினால்
நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இவ்விதமாக உள்ளான
மனுஷன் (புதிய மனுஷன்) அலங்கரிக்கப்படும் போது, புறம்பான உலக அலங்காரம் நம்மைவிட்டு
மாறிப்போகும். அப்போதுதான் நாம் தேவனை பரிசுத்த அலங்காரத்தோடு தொழுது கொள்ளுகிறோம்.
நீதிமொழிகள் 3:13-18
ஞானத்தைக் கண்டடைகிற
மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
அதின் வர்த்தகம்
வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
முத்துக்களைப்பார்க்கிலும்
அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்க தொன்றும் அதற்கு நிகரல்ல.
அதின் வலதுகையில்
தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
அதின் வழிகள்
இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
அது தன்னை அடைந்தவர்களுக்கு
ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
இதனை நாம் பெற்றுக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஞானம் என்பது கிறிஸ்து,
ஞானத்திலிருந்து புத்தி வெளிப்படுகிறது,
அதுதான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர்.
அதனால் ஞானத்தை கண்டடைய வேண்டும், புத்தியை
சம்பாதிக்கவேண்டும்.
மணவாளனாகிய கிறிஸ்துவையும் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரும் நம் உள்ளத்தில்
செயல்படும் போது நாம் தேவனை பற்றி அறிகிற அறிவை கண்டடைவோம். அப்போது நாம் தேவனுடைய வார்த்தைகளை
ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக நடப்போம்.
யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக்
கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம்
இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
இவ்விதமாக
யோவான் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரையும் குறித்து,
நாம் அவருடைய தோழனாகவும் அவருடைய சத்தத்தை நாம் கேட்போமானால் நமக்கு சந்தோஷம் இப்பொழுதே
சம்பூரணமாக விளங்கும் என்பதற்கு மாற்றமில்லை.
தேவன் நமக்கு நிறைவான சந்தோஷத்தை தருகிறார்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
- தொடர்ச்சி நாளை.