கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

 ஆபிராம் கானானுக்குள் குடும்பமாக பிரவேசித்து தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் தேவன் அவனுக்கு தரிசனமாகி நான் சர்வவல்லமையுள்ள தேவன் நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு என்றார்.

ஆதியாகமம் 17:2

நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

            அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

அவருடைய உடன்படிக்கை என்னவென்றால் நீர் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாய் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாக ஏற்படுத்தின படியால் உன் பேர் இனி ஆபிரகாம் என்று அழைக்கப்படும்.

 ஆபிரகாம் என்பது தேவன் போட்ட பெயர்.

தேவன் ஆபிரகாமோடே பண்ணின உடன்படிக்கை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தான் உடன்படிக்கை பண்ணி நீ திரளான ஜாதிகளுக்கு தகப்பனாய் என்றும் உன்னை மிகவும் அதிகமாக பலுகப் பண்ணுவேன் என்றும் உன்னை மிகவும் அதிகமாய் பலுகப் பண்ணுவேன் என்றும் உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்  உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றும் சொல்லும் போது ஆபிராமுக்கும்  சாராய்க்கும் பிள்ளை இல்லாதிருந்தது வயது சென்றவர்களாயிருந்தார்கள்.

மேலும் ஆகாரிடத்தில் தான் தேவன் இஸ்மவேல் பிறப்பான் என்றும் கூறியிருந்தார் இவ்விதமாக தேவன் கூறும்போது ஆபிராம் இஸ்மவேலை குறித்து சிந்தித்து இருக்கலாம் நாமும் இந்நாளில் அநேகர் அப்படித்தான் சிந்திக்கிறோம். ஏனெனில் நாம் மாம்சத்திற்கு அடிமைகளாக இருந்து கொண்டு மாம்ச சிந்தனை செய்து கொண்டு இருப்பதால் நம் கண்கள் திறக்காத காரணத்தால் நாம் உள்ளம் இஸ்மவேல் செயலை செய்து தேவன் என்னிடத்தில்  பேசினது காரியம் நாம் ஆத்தும ஆதாயம் செய்கிறோம்.  என தவறாக நினைக்கிறோம். நம்முடைய ஆத்துமாவை ஆதாய படுத்தாமல் மற்ற ஆத்மா இரட்சிப்புக்காக ஜெபிக்கிறோம் தேவ வசனம் சொல்லுகிறோம் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுங்கள் என்று சொல்லுகிறோம் நாம் இரட்சிக்க படாமல் நாம் மனம் திரும்பாமல் மற்றவர்களுக்கு அறிவித்து என்ன பிரயோஜனம் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன்னுடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதனால் என்ன லாபம் என்று கேட்கிறதே பார்க்கிறோம்.

பிரியமானவர்களே,

            தேவன் ஆபிரகாமிடத்தில் பேசின இந்த காரியத்தின் பின்னணியில் ஒரு முக்கியமான தேவ அனுகிரகம் காணப்படுகிறது.

அடுத்ததாக நாம் அதைப்பற்றி பார்ப்போம்.

ஆதியாகமம் 17:7,8

உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

 நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

இந்த தேவ வார்த்தையை நாம் வாசிக்கும் போது நம் நடுவில் கிறிஸ்து வெளிப்படுகிறார் என்பதற்கு அடையாளமாக ஆபிரகாம் பரதேசியாய் கானான் தேசத்தில் தங்குகிறதையும் அந்த கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசமாகவும் அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாகவும் உன் சந்ததி என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஒரே சந்ததி கிறிஸ்து என்றும் கிறிஸ்து தான் நமக்கு திருஷ்டாந்தபடுத்துவதற்காக ஆபிரகாமின் மனைவி சாராயை தேவன் சுயாதீனம் உள்ளவரள் என்றும் சுயாதீனம் உள்ளவள் மேலான எருசலேம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆதியாகமம் :17 :15 ,16

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து தன் இருதயத்திலே நூறு வயதானவனுக்கு பிள்ளை பிறக்குமா தொன்னூறு வயதானவள் பிள்ளை பெறுவாளோ என்று தன் இருதயத்தில் சொல்லி கொண்டு இஸ்மவேல் உனக்கு முன்பாக பிழைப்பானாக என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

ஆனால் தேவன் முன்னாக ஆபிராமிடத்தில் கொடுத்த வாக்குத்தத்தம் உன் சந்ததி என்று சொன்னது ,அவன் இஸ்மவேலை தான் என்று நினைத்தால் தான் சாராளை குறித்த சொன்னதால் அவன் நகைத்து  இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பாக என்று விண்ணப்பம் பண்ணுகிறான்.

அன்பானவர்களே,

 இப்படித்தான் நம்மிலும் அநேகம் பேர் இருக்கிறோம் வாக்குத்தத்தின் சந்ததி எது என்று மாம்ச பிரகாரம் நாம் ஜுவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற தவறான எண்ணம் கொள்கிறோம்.

 அதனால் நம்மை உறுதிப்படுத்தும் படியாக மீண்டும் அதே இடத்தில் அதை பற்றி கூறுகிறார் இதற்குப் பின் இன்னொரு சந்ததி உண்டு நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி என்ன என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

ஆதியாகமம் 17 :19

அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

ஆதியாகமம் 17 :20- 27

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஜெபிப்போம் .

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..

 

-தொடர்ச்சி நாளை