மாம்ச கிரியைகளை அகற்றுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 18, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

ஆபிரகாம் ஆகார் பெற்றெடுத்த மகனாகிய இஸ்மவேலையும் ,அடிமைப் பெண்ணையும் புறம்பே தள்ளு என்று சொன்னது அவனுக்கு துக்கமாய் இருந்தது. அதனால் தேவன்,

ஆதியாகமம் 21: 13

அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

ஆபிரகாம், சாராள் சொன்னது மட்டுமல்ல ,தேவனும் சாராள் சொன்னது போல் செய் என்று சொன்னார். ஆபிரகாம் அதற்கு முழுமையில் கீழ்ப்படிந்து அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் கொடுத்து ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அனுப்பிவிட்டான். அவள்    பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

 தண்ணீர் செலவழிந்து போன பின்பு நான் பிள்ளை சாகிறதை  பார்க்க மாட்டேன் என்று சொல்லி பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு விட்டு, ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் அழுதுகொண்டிருந்தாள்.

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் அவரை கூப்பிட்டு, உனக்கு என்ன சம்பவித்தது பயப்படாதே, நீ பிள்ளையை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

ஆதியாகமம் 21: 19 -20

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.

            அவனுக்கு  எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை விவாகம் பண்ணிவித்தாள்.

 எல்லாக் காரியத்திலும் தேவன் ஆபிரகாமோடே இருக்கிறபடியால்  அபிமலேக்கும், அவள் சேனாதிபதியாக பிகோலும் ஆபிரகாமிடத்தில் நீ தங்கி இருக்கிற இடத்திற்கு தயை செய்வேன் என்று இங்கே ஆணையிட்டுக் கொடு ,மேலும் எனக்காவது என் குமாரனுக்காவது என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல் இருக்கவேண்டும். என்றும் ஆணையிட சொன்னதால் நமக்கு தெரியவருவது ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்திற்கு வந்திருக்கிறான் என்பது தெரியவருகிறது.

ஆதியாகமம் 21 :24

அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.

அங்கு காணப்பட்ட துரவு ஆபிரகாம் தோண்டின துரவாக இருக்கிறது .அதை அபிமெலெக்கருடைய வேலைக்காரர் கை வசப்படுத்திக் கொண்டதின் நிமித்தமாக ஆபிரகாம் அபிமெலேக்கை கடிந்து கொள்கிறான்.

அதற்கு அந்த காரியம் எனக்குத் தெரியாது, நான் அதை அறியவில்லை என்ற போது

ஆதியாகமம் 21: 27

அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டு குட்டிகளைக் கொண்டு வந்து தனியே நிறுத்துகிறான்.

ஆதியாகமம் 21 :29

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

ஆபிரகாம் இந்தத் துரவு ஆபிரகாம் தான் தோண்டினது என்று சாட்சியாக ஏழு பெண்ணாட்டு குட்டிகளை அபிமெலேக்கு கொடுத்து துரவை உறுதிப்படுத்துகிறான்.

இவ்விதமாக ஆபிரகாமும் அபிமெலேக்கு ஆணையிட்டு கொண்ட படியால் அந்த இடம் பெயர்செபா எனப்பட்டது.

பெயர்செபாவில் உடன்படிக்கை பண்ணிக் கொண்ட பின்பு அபிமெலேக்கும் பிகோலும் பெலிஸ்தருடைய தேசத்திற்கு திரும்பிப் போனார்கள்.

ஆதியாகமம் 21 :33

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்திலே அநேக நாள் குடியிந்தான்.

 

            இதிலிருந்து நமக்குத் தெரியவருவது ஆபிரகாம் மாம்சத்தோடு அதிகமாக சிந்தை வைத்திருந்ததால் தான் பெலிஸ்தருடைய தேசத்திலே வந்து அநேக நாள் தங்கியிருக்கிறான். தேவன் அவனுடைய மாம்ச சிந்தையை மாற்றி ஆவிக்கேற்ற சிந்தை ஆக்கும்படியாக இவ்விதமான காரியங்களை நமக்கு ஆபிரகாமை வைத்து தேவன் திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்.

மேலும் விருத்தசேதனம் பண்ணவும் ,மாம்ச சிந்தையே மாற்றமும் தேவன் சித்தம் கொண்டவராக, பெலிஸ்தருடைய தேசத்திலிருந்து அவளே மோரியா மலைக்கு கொண்டு வரும்படியாக திட்டம் வைத்திருக்கிறார். இவ்விதகாரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நாம் மிகவும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் நாம் உலக பழக்கவழக்கங்களிலும், மாறுபாடான காரியங்களிலும், மாம்ச இச்சைகளிலும், பல தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களையும் செய்து, தேவனை விசுவாசித்து நடக்கிறதினால் நம்முடைய ஆவி ,ஆத்துமா, சரீரம்,கறைதிரையில்லாதபடி நம்மை பரிசுத்த படுத்துவதற்காக தான் நம்மை முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் ,உன் முழு மனதோடும் ,முழு சிந்தையோடு, வாருங்கள் என்று தேவன் நம்மை அழைக்கிறார். அப்படி அழைப்பின் சத்தம் கேட்டு உணராமல் இருப்போமானால், தேவன் நினைத்ததே நம்மில் நடப்பிக்கும் வரையிலும் தண்டிக்கிறார்.

அதைதான் எரேமியா 30 :23 -24

இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.

கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.

அன்பானவர்களே,

இந்த நாட்கள் கடைசி நாட்கள் என்பது நன்றாக உணரமுடிகிறது கர்த்தருடைய உக்கிரகத்தின் நாட்கள் என்பதும் நன்றாக உணரமுடிகிறது.

அதனால்தான் ஆபிரகாமே மோரியா மலைக்கு தேவனாகிய கர்த்தர் அனுப்பி ஆபிரகாமின்  மகனாகிய ஈசாக்கு ஏக சுதனாகிய இருந்தபோதிலும் அவனே தகனபலியாக பலியிடு என்று சொல்லுகிறார்.

இதனால் நாம் நம்மை முழுமையாக இந்த நாட்களில் ஒப்புக்கொடுக்கும் போது நமக்காக கிறிஸ்து நமக்குள்ளாக தேவ நீதியை நிறைவேற்றி பழைய பாவ சுபாவம் ,அக்கிரமம் ,மீறுதல், சாபம் ,நோய்கள் எல்லாவற்றிலுமிருந்து நம்மை விடுவித்து இரட்சித்து புதிய சாயலாக பூரண கிருபை அடைய தக்கதாக கிறிஸ்துவின் ஜீவன் நம்மிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இதற்காகவே நான் அழைக்கப்பட்டோம், தெரிந்து கொள்ளப்பட்டும் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.  ஜெபிப்போம்

 

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

 

-தொடர்ச்சி நாளை