கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

            ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கு பெண் கொள்ளும்படியாக அவருடைய ஊழியக்காரனை  அனுப்புகிறதை வாசிக்க முடிகிறது. அந்த ஊழியக்காரன் சில அடையாளங்களை சொல்லி ஜெபிக்கிறான். அவ்விதமாக  விண்ணப்பித்து முடிந்தவுடனே ரெபெக்காள்  குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள். அந்தப் பெண் பெத்துவேலுடைய குமாரத்தி,  ஆபிரகாமின் தேசத்திற்கு தான் அந்த ஊழியக்காரன் போகிறதை பார்க்க முடிகிறது,  அவள் ஆபிரகாமின் இனத்தாளாகத் தான் இருக்கிறாள்.

ஆதியாகமம் 24:16-19

அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள். அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.

அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி,

மீண்டும் துரவண்டையில் ஓடி எல்லா ஒட்டகங்களுக்கெல்லாம்  மொண்டு வார்த்தாள். இதை  அந்த மனிதன் ஆச்சரியத்தோடு பார்த்து தேவன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ  இல்லையோ என்று அறியும் படியாக மௌனமாயிருந்தான்.

பின்பு  ஒட்டகங்கள் குடித்து தீர்ந்த பின்பு காதணிகளையும், கைக்கு  கடகங்களையும் எடுத்து கொடுத்து யாருடைய மகள் என்று விசாரித்து இராத்தங்க  வேண்டும் என்று அங்கு கேட்கிறான். அதற்கு அவள் உண்டு என்கிறாள்.

ஆதியாகமம் 24:26, 27

அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு,

 

என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை. நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.

இதனை வாசித்து தியானிக்கிற  தெய்வ ஜனமே !  இது நாம் உலகத்தின் ஆவியோடு ஒட்டி வாழும் படி  அல்ல என்பதை நாம் புரிய வேண்டும்.

 ஆபிரகாம் தேவனுக்கு உகந்த பிரகாரம் பலி கொடுக்காத காரணத்தால் காரிருள் அவனை மூடுகிறது.  மேலும் தலைமுறை நானூறு வருஷம் அடிமைபடுவார்கள்,  பின்பு திரும்பி வருவார்கள் என்று சொன்னது பிரகாரம்  யோசேப்பு சிறையாக விற்கப்பட்டு எடுத்துக்கொண்டு போகப்படுகிறான்.   யாக்கோபின் கர்ப்பப்பிறப்புகள் எழுபது பேரும்,  அந்த தலைமுறைகள் யாவரும் மரணமடைந்தபிறகு இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி,  ஏராளமாய்ப் பெருகிப் பலதிருந்தார்கள் தேசம் அவர்களால் நிறைந்தது.

என்னவென்றால் நாம் சுருக்கமாக பார்க்கும்போது எகிப்தில் இஸ்ரவேலர் மிகுதியாய் உபத்திரப்படுத்தப்பட்டார்கள். அதனால் இஸ்ரவேலர் தேவனிடத்தில் கூக்குரலிட்டார்கள் சத்தம் கேட்டு  இஸ்ரவேலை மீட்டுக் கொண்டு வரும்படியாக மோசேயையும்,  ஆரோனையும் அனுப்புகிறார்.

கர்த்தர் எகிப்தில் பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து எகிப்தியர் நடுவில் வாதைகளை அனுப்பியும் தன்னுடைய ஜனமாக இஸ்ரவேலை மீட்டு கொண்டு வருகிறார்.  அவர்களோடே கூட  வந்தது  ஞானக்கண்மலையாகிய கிறிஸ்து.

அவர்களுடைய பிரயாணத்தில் குடிக்க தண்ணீர் கிடையாமல் இருக்கும் போது கர்த்தர் மோசேயிடம் தன் கையிலிருந்த கோலால் அடிக்க சொன்னார் அந்த கோல்களை அடித்த போது தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டு வந்தது ஜனங்கள் எல்லாம்  திருப்தியாக குடித்தது, நாம் வாசிக்க முடிகிறது.

பின்பு அவர்களுடைய பிரயாணத்தில் சீன் வனாந்திரத்தில்,  ஜனங்கள் காதேஸில் தங்கியிருகும் போது  மீரியாம் மரணமடைந்து அடக்கம் பண்ண பட்டாள்.  மோசே கர்த்தரிடத்தில் முகங்குப்புற விழுகிறான் கர்த்தருடைய மகிமை  அவர்களுக்கு காணப்பட்டது அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 20:8

நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும், இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

அதன்படியே மோசே கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கோலை எடுத்து,  கலகக்காரரே  கேளுங்கள் என்று சொல்லி தன் கையை ஓங்கி கன்மலையை தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது. சபையார் குடித்தார்கள் அவர்கள் மிருகங்களும் குடித்தது.

உடனே தேவன் மோசேயினிடத்திலும் ஆரோனிடத்திலும் கோபம் கொள்கிறார்.

என்னவென்றால், எண்ணாகமம் 20:12

பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

இதற்கு காரணம் என்னவென்றால் தேவன் சொல்லாததை மோசே செய்கிறான். மேலும் சபையாருக்கு முன்பாக தேவனை பரிசுத்தம் பண்ணவில்லை. அதனால் தேவன் சொல்லாததை செய்ததினால் என்னை விசுவாசிக்க வில்லை என்று சொல்கிறதைப் பார்க்கிறோம்.

மேலும் கண்மலை என்பது கிறிஸ்துவுக்கு அடையாளமாக தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். அது மாத்திரமல்ல தேவன் ஒரே தரம் நமக்காக அடிக்கப்படும் படி ஒப்புக் கொடுக்கிறார். அப்படி ஒப்புக் கொடுக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து ரத்தமும் தண்ணீரும் ஓடுகிறதை வசிக்கிறோம்.  இரத்தத்தினால் தேவன் சபையை சம்பாதிக்கிறார். மேலும் இயேசுவின் இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.  மேலும் கண்மலை  கிறிஸ்துவும் கண்மலையிலிருந்து புறப்படுகிற தண்ணீர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் கிறிஸ்து மூலம் நமக்கு தருகிற ஜீவதண்ணீராகிய  திரு வசனமும்.  இந்த வசனம் நம்மை பரிசுத்தப்படுத்தும் போது பரிசுத்த ஆவியானவராகிய மாணவாட்டியாகவும்,  நம்முடைய உள்ளத்தில் அது வெளிப்பட்டு வரும்போது மணவாட்டி சபையாகவும் நாம் மாறுகிறோம்.  அவ்விதம் நாம் மாறும்போது தேவன் நம்மை அவருடைய கிருபையினால் நிரப்புகிறார்.

நாம் ஒரு தரம் மீட்கப்பட்டபிறகு இரண்டாம் விசை  நாம் ஒருபோதும் கிறிஸ்துவை அடிக்கிறவர்களாக இருக்க கூடாது. அதன் பிறகு பரிசுத்த  ஆவியால் நிரப்பப்பட்டு நாம் அவரோடு பேசுகிறவர்களாக இருக்க வேண்டும்.

 

I கொரிந்தியர் 14.2

ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

இந்த தேவ வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது ரெபெக்காள் துரவில் இறங்குகிறதையும்  அதைத்தொடர்ந்து மோசே மூலம் தேவன் கண்மலை சுரந்து தண்ணீர் வருவதையும்,  மேலும் இயேசு கிறிஸ்து சமாரியா ஸ்திரீயினிடத்தில் ஜீவ தண்ணீரை விளக்கி காட்டுகிறதையும் நாம் பார்க்கமுடியும். ஜெபிப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை