தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா 3: 16
யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும், நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
நம்முடைய உள்ளத்தில் மகிமையான மணவாட்டி சபை - பரிசுத்த ஆவியானவர் திருஷ்டாந்தத்தோடு – விளக்கம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் மோசேயினிடத்தில் கர்த்தரின் வாசஸ்தலமாகிய ஆசரிப்பு கூடாரம் செய்யும்படி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டதை பார்க்கிறோம். அப்போது ஜனங்கள், கர்த்தருடைய கட்டளையை மீறாதப்படி கீழ்ப்படிந்து அதற்கேற்ற காரியங்களையெல்லாம் தேவைக்கு அதிகமான அளவு கர்த்தருக்கு காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த ஆசரிப்பு கூடாரவேலை செய்கிறவர்கள் எல்லாரும் தேவ ஞானமும், விவேகமுமுள்ள புத்திரராயிருந்தார்கள். அவ்விதம் விவேகமுள்ள புத்திரராக காணப்பட்டதால் கர்த்தர் கற்ப்பித்தப்பிரகாரம் அப்படியே செய்தார்கள். கழிந்த சில நாட்களுக்கு முன்பு இதன் விளக்கங்களை குறித்து தியானித்தோம்.
நம்முடைய உள்ளான மனுஷன் பரிசுத்தப்பட்டு, நம்முடைய ஆத்துமா மணவாட்டி சபையாக பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்பட்டு, சத்தியத்தால் நிறைந்து, தேவராஜ்யம் நம்முடைய உள்ளத்தில் மகிமை நிறைந்ததாக காணப்படுவதற்காக, தேவன் திருஷ்டாந்தப்படுத்தியது தான் ஆசரிப்புக் கூடாரமும், அதின் உள்ளில் செய்யப்படுகிற விநோத வேலைப்பாடுகளும்.
மேலும் யாத்திராகமம் 38: 20
வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.
இந்த வசனத்தை நாம் தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் சத்தியத்தின் தேவன் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறது. மேற்க்கூறிய பிரகாரம் எல்லாம் ஆசரிப்புக் கூடாரம் செய்து முடிந்து
யாத்திராகமம் 39: 33-41
பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,
வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,
பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்
கர்த்தர் மோசேக்கு கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் எல்லா வேலையும் செய்து முடித்தார்கள். மோசே எல்லா வேலைகளையும் பார்த்தான். கர்த்தர் கற்பித்தபடியெல்லாம் செய்திருந்தார்கள். மோசே அதைப் பார்த்து அவன் அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு கர்த்தர் மோசேயிடம் ஆசரிப்பு கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம் பண்ணு என்று சொல்கிறார். அதன் பிறகு அநேக காரியங்களை கர்த்தர் மோசேயிடம் ஆசரிப்புக் கூடாரமாகிய தேவனுடைய வாசஸ்தலத்தின் உள் மாதிரியும் அதன் அமைப்புகளும் எவ்வண்ணம் இருக்க வேண்டும் என்பதையும், அதனுக்குள்ளாக என்னவெல்லாம் வைக்க வேண்டும் என்றும் அதற்குள் செயல்பாடுகள் எல்லாவற்றைக் குறித்தும் கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார். கர்த்தர் சொன்னது போல் மோசே அப்படியே செய்கிறதைப் பார்க்கிறோம்.
சாட்சிப்பெட்டி பிதாவாகிய தேவனுடைய வார்த்தையாகவும், திரை கிறிஸ்துவுக்கும், மேஜை கிறிஸ்துவின் இருதயமாகவும், அதில் குத்து விளக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும் என்று சொல்லும் போது கிறிஸ்து தேவனுடைய வசனங்களால் நிறையப்பட்டவராகவும், பொன் தூபப்பீடம் என்பது கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்கிறவராகவும், வாசஸ்தலத்து தொங்கு திரை என்பது கிறிஸ்துவின் சரீரத்தையும் காட்டுகிறது. பின்பு தகன பலிபீடம் என்பது நாம் ஒவ்வொருவரும், அதை வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பக்கமாக வைக்கவேண்டும் என்பது நம்மை தேவனுக்கு முன்பாக தகனிக்க வேண்டும் என்பதையும், அதன் பிறகு பலிபீடத்துக்கும், ஆசரிப்புக் கூடாரத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து அதிலே தண்ணீர் வார்க்கவேண்டும் என்பது நம்முடைய இருதயம் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானத்திற்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்பதற்காகவும், அதற்கு பிறகு சுற்று பிரகாரம் நிறுத்துவதும், அடுத்தது தொங்குதிரையை தூக்கி வைக்க சொல்வது, நம்முடைய விசுவாசத்தை காட்டுகிறது. பின்பு நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாம் கிறிஸ்துவை அபிஷேகிப்பதையும், அவரைச் சுற்றியிருக்கிற நம்மை பரிசுத்தப்படுத்துகிறதையும் தேவன் திருஷ்டாந்தத்தோடு ஆசரிப்புக்கூடாரத்தின் பணியை வைத்து காட்டுகிறார். இவ்விதமாக நாமும், நாம் செய்கிற சகல காரியங்களும் நற்கிரியைகளாக இருக்கும்படியாக எல்லா காரியங்களையும் அபிஷேகம் பண்ணுகிறார். பின்பு நாம் ஒவ்வொருவரும் ஜலத்தினால் ஞானஸ்நானம் நாம் எடுக்க வேண்டும். பின்பு பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகித்து, நம்மை ஆசாரியராக்குகிறார் என்பதை காட்டும் படியாகவே, ஆரோனையும், அவன் குமாரரையும் ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து, பின்பு தைலத்தினால் அபிஷேகம் பண்ணுகிறார்.
இவையெல்லாம் யாத்திராகமம் 40:1-15
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
பின்பு, தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.
தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
இந்த காரியங்கள் வசனங்களில் வாசிக்க முடிகிறது. இவ்விதமாக பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி சபை நம்மிடத்தில் எவ்விததில் உறுதிப்படுகிறது என்பதையும், மேலும் அதின் மகிமையான தோற்றங்கள் எவ்விதம் இருக்கும் என்பதை யாத்திராகமம் 39: 10-14 வரையிலும் எழுதி,
அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.
பின் இஸ்ரவேலரை வைத்து நமக்கு திருஷ்டாந்தமும் படுத்தி, பின்பு நம்முடைய வாழ்க்கையில் இத்தனை அனுபவங்களை நம் எல்லாருடைய உள்ளத்திலும் ஜீவதண்ணீர் புறப்படுகிற அனுபவத்தை கர்த்தர் யோவனுக்கு பத்மூ தீவிலும் வெளிப்படுத்தி, மணவாட்டி சபை பளிங்கை போல் பிரகாசிக்கிற தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, அவர் தான் பரிசுத்த ஆவியானவர், அவரை நாம் யாவரும் அடைய வேண்டும்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.