தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 84: 1
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
நம்முடைய உள்ளத்தில் மணவாட்டி சபை சீர்திருத்த செயல்ப்பாடுகள் திருஷ்டாந்தத்தோடு – விளக்கம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையை தேவன் நம்முடைய உள்ளத்தில் எழுப்புகிறார் என்பதையும், அந்த சபைக்குள்ளாக செயல்பாடுகள் எவ்விதத்தில் இருக்கிறது என்பதையும் தேவன், மோசேயை சீனாய் மலையில் வரவழைத்து, நாற்பது நாட்கள் புசியாமலும், குடியாமலும் உபவாசிக்க செய்து, அவன் முகம் யாரும் பக்கத்தில் நிற்க முடியாத அளவு மகிமையால் நிறையப்பட்டிருந்ததை பார்க்கிறோம். அதனால் அவன் முகத்தின் மேல் முக்காடு போட்டிருந்ததை பார்க்கிறோம். ஆனால் உயிர்த்த கிறிஸ்துவினால் அது நீக்கப்படுகிறது. இவ்விதம் தேவன் திருஷ்டாந்தப்படுத்தி பழைய ஏற்ப்பாட்டில் வெளியில் இருந்த மகிமை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்முடைய உள்ளத்தில் வருகிறது. அவ்விதம் உள்ளம் மகிமையால் நிறையப்படுவது தான் மணவாட்டி சபை.
பின்பு மலையிலிருந்து இறங்கி வந்த மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி மனமுள்ளவர்கள் வந்து கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வரட்டும் என்று சொல்லுகிறான். அந்த காணிக்கைகள்
யாத்திராகமம் 35:5-9
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
மேலும் ஞான இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சில காரியங்கள் செய்யம்படியாக கட்டளையிடுகிறார்.
யாத்திராகமம் 35:11-20
வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,
வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
பின்பு எல்லாரும் மோசேயின் சமூகத்தை விட்டு புறப்பட்டார்கள். பின்பு எவர்களுடைய இருதயம் எழும்பி, அவர்களை உற்சாகப்படுத்தியதோ அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளை கர்த்தருக்கு காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். மனபூர்வமுள்ள ஸ்திரி புருஷர் யாவரும்
யாத்திராகமம் 35: 22-24
மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
அடுத்ததாக யாத்திராகமம் 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
அடுத்தது யாத்திராகமம் 35:26-29
எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.
பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
பின்பு ஆசரிப்பு கூடாரத்தின் விசித்திர வேலைக்காக, பொன்னினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தாலும் வேலை செய்யவும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டவும் மரத்தில் விநோத வேலையாகிய சித்திர வேலைக்காக அவனுக்கு ஞானத்தையும், புத்தியையும், அறிவையும் கொடுத்து, அவனை தேவ ஆவியினால் நிரப்பினார்.
இவற்றை தேவன் எதற்கு திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால் ஆசரிப்பு கூடாரமாகிய நம்முடைய உள்ளான சரீரம் உயிரடைந்து, தேவ ஆவியினால் பெலனடைந்து, கிருபையும், மகிமையும், சத்தியத்தாலும் நம்முடைய உள்ளான சரீரம் நாம் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு தேவன் ஆசரிப்பு வேலையையும், பெசலெயேலையும் க்கொண்டு நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதம் கர்த்தர் கற்பித்தபடியெல்லாம் ஞான இருதயமுள்ளவர்களெல்லாரும் சேர்ந்துக் கூடாரத்தின் பணியை செய்ய தொடங்கினார்கள்.
பின்பு இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வந்த பொருட்களை மோசேயினிடத்திலிருந்து கேட்டு வாங்கினார்கள். காலைத்தோறும் ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்து வேலைக்காக தங்கள் இஷ்டமான காணிக்கைகளை கொண்டு வந்தார்கள். விவேகிகள் யாவரும் தாராளமான காணிக்கை பொருட்கள் தினமும் வருகிறதைக் கண்டு மோசேயிடம் சொல்ல
யாத்திராகமம் 36 : 6
அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
இதனை நாம் தியானிக்கும் போது அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மணவாட்டி சபையின் பணி நடந்தேறுவது எப்பொழுதென்றால் காலையில் நம்மை முழுமையான காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.மேலும் நாம் விவேகம் உள்ளவர்களாக நடந்துக்கொள்ள வேண்டும், என்பதனை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
விவேகத்தின் செயல்பாடுகள் என்னவென்றால் பரிசுத்த ஸ்தலத்தின் பணிக்காக ஜனங்கள் அதிகமான அளவு பொருட்கள் கொண்டு வந்ததால், தேவைகள் பூர்த்தியானவுடனே அவைகள் நிறுத்தப்படுகிறது. இவைதான் விவேகம். விவேகம் கிறிஸ்துவினிடத்திலிருந்து தான்ப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிமொழிகள் 8:5
பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
மணவாட்டிச் சபை ஒரு போதும் பேதையாக இருக்கக்கூடாது. அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள் காணிக்கை ஜனங்களை கட்டாயப்படுத்துவார்கள். காணிக்கைக்கொடாதவர்கள் கர்த்தர் பார்க்கட்டும் என்று இராமல் வாய்க்கு வந்தபடி சாபம் போடுவார்கள். ஆனால் அநேக ஊழியக்காரர்கள் சபைக் கட்டுமான பணிக்காக எத்தனை என்று எண்ணம் சொல்லி கேட்டு வாங்குவார்கள். ஆனால் எவ்வளவு அதிகமாக கிடைத்தாலும் போதுமென்று சொல்வதில்லை. மீண்டும் மீண்டும் தா தா என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் குறித்து
நீதிமொழிகள் 30:15
தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
தா, தா என்று சொல்கிறவர்கள் யாரென்றால், அவர்களுடைய மணவாட்டி சபை பரஸ்திரீ. இவர்களுடைய உள்ளம் பாதாளம். அது ஒரு போதும் போதுமென்று சொல்லாது. தா, தா என்று சொல்லிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்ககள் பொருளாசை, பண ஆசையுள்ளவர்கள். இவர்களை குறித்து தேவன் விக்கிரகராதனைகாரர் என்றுச் சொல்கிறார். அதனால் எல்லாவற்றிலும் ஞானம் புத்தி அறிவு விவேகம் என்பவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிமொழிகள் 8:12
ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
ஆதலால் பிரியமானவர்களே கர்த்தருடைய வாசஸ்தலமாகிய நம்முடைய உள்ளம், மிகவும் பரிசுத்தமாக விவேகத்தோடு அனுதினம் காத்து நம்முடைய இரட்சிப்பை சுதந்தரித்துககொள்கிறவர்களாக இருக்க வேண்டும். தேவனுக்குரியதை தேவனுக்கு கட்டாயத்தினாலல்ல மனப்பூர்வமாகக் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.