தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 86:16 

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

நம்முடைய பாரம்பரியம் மாற்றப்பட்டு மணவாட்டி சபை ஆகுதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடைய தேவனாகிய கர்த்தர்  நம்  உள்ளத்தில் உருவாக்குகிற மாற்றத்தை குறித்து  சீனாய் மலையில் மோசேயிடம் அதிசயங்களை விளங்க பண்ணுவேன் என்று ஆட்டுக்குட்டியானவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தோற்றம் நம் உள்ளத்தில் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையினால் வெளிப்பட்டு, பின்பு நம்முடைய வாழ்க்கையில் இருந்த அல்லது இருக்கிற குற்றம், குறைகள், பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் இவற்றையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தி,  பின்பு நம்முடைய வாழ்க்கையில் இருக்கிற வேதனைகள் எல்லாம் நம் பாவத்தின் காரணம்த்தான் வந்தது என்ற உணர்வு  வரும் போது, அவருடைய வார்த்தை நம் உள்ளத்தை உடைத்து நொறுக்கி, நம்முடைய பாவம்,  அக்கிரமங்கள், மீறுதல்கள் எல்லாம், நம் உள்ளத்திலிருந்து மாற்றி, மரித்த ஒரு   மனுஷனை புதைப்பதுப் போல் அத்தனையும் புதைத்து,  பின்பு தேவனுடைய  வார்த்தையினால், அவருடைய மகிமையான வசனமாகிய கிறிஸ்து நம்முடைய  உள்ளத்தில் தேவசாயலாக ரூபமெடுக்கிறார்.  

இதனை நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் செய்கிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி கர்த்தராகிய இயேசுவை இந்த உலகத்தில் அனுப்பி, பாவம் செய்யாத அவரை பலியாக்கி, அடக்கம் பண்ண வைத்து பின்பு அவருடைய ஆவியினால் உயிரோடு எழுப்புகிறார். இவ்விதம் தேவன் நம்மை எழுப்பி, பாவத்தினால் மரித்துக் கிடந்த நம்முடைய உள்ளான சரீரம் தேவச்சாயல் அடைந்து, புதுப்பெலன் பெற்று நம்முடைய உள்ளத்தில் எழுப்புதல் அடைய செய்கிறார். 

இவ்வாறு ஒரு முறை தேவன் நம்மை இரட்சித்திருக்க மீண்டும் பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.  அப்படி காத்துக் கொண்டால் மாத்திரமே நாம் பூரணராக முடியும். நாம் பூரணராகாதப்படி பகுதிக் கட்டினால், அதினாலே பிரயோஜனமில்லை என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அவற்றைக் குறித்து `

எபிரெயர் 6:4-8  

ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.

எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது ஒருமுறை தேவன் நம்மை இரட்சித்திருக்க மீண்டும் நாம் உலக காரியங்களில் தலையிட்டு, உலகத்தாரோடுக்கூட நடந்து, அவர்கள் செய்வது போல் நாமும் செய்தால் நாம் சாபத்திற்க்குரியவர்களாகி விடுகிறோம். அவர்களுக்கு நரகாக்கினை என்பதை தேவன் சொல்லுகிறரர். ஆகையால் பிரியமானவர்களே 

ரோமர் 6:10-13

அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

இந்த வசனங்கள் பிரகாரம் சரீர இச்சைகளின் பிரகாரம் நாம் பாவத்திற்கு கீழ்ப்படியதக்கதாக சாவுக்கேதுவான நம்முடைய சரீரம் பாவம் ஆளுகைச்செய்யக்கூடாது.  ஆதலால் நம்முடைய அவயவத்தை அநீதியின் ஆயுதங்களாக பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், நீதியின்  ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அவற்றைக் குறித்து 

யாத்திராகமம் 34: 24,25

நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

இதன் விளக்கங்கள் தான் நாம்  உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பது, இவை புறஜாதிகளின் கிரியை அதனால் 

ரோமர் 12: 1,2  

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ஆதலால் கர்த்தர் நம்மை ஒருமுறை இரட்சித்திருக்க, யாரும் லோத்தின் மனைவியை போல பின்னிட்டு பார்த்து உப்பு தூண் ஆகாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேணடும். என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிற கருத்தில் 

லூக்கா 9:61,62

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

முக்கியமாக தேவனுடைய ராஜ்யம் கட்ட தொடங்கி பின் பின்னோட்டு பார்த்தால் அவர்கள் தேவராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களல்ல என்று இயேசு கிறிஸ்து சொல்கிறதை பார்க்கிறோம். அவர்களுடைய நிலைமையைக்  குறித்து 

2 பேதுரு 2:20-22

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது ஒருமுறை இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றும் பின்மாறினால் முன்னிலைமையை காட்டிலும் பின்னிலைமை கேடுள்ளதாயிருக்கும். மேலும் கர்த்தர் சொல்லுகிற காரியம் என்னவென்றால் நாம் தேவனுடைய  வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வோமானால் நம்மை பின்னோட்டு இழுக்கிற ஜாதிகளின் கிரியைகளை தேவன் நம் நடுவிலிருந்து துரத்துவேன் என்று சொல்கிறார். கர்த்தர் நம் நடுவிலிருந்து துரத்தாவிட்டால் நாம் பின்மாறி  போவோம்.  நாம் பின்மாறி விழுந்து போகாமல் இருக்கவேண்டுமானால் அனுதினம் தேவசமூகத்தில் காத்திருந்து பெலன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கர்த்தராகிய கிறிஸ்து உள்ளத்தில் உயிர்ப்பிக்கப்படுகிறார்.  பெலன் பெற்றுக் கொள்ளாத அநேக பரிசுத்தவான்கள் தங்கள் பரிசுத்தத்தை இழந்தவர்களாக பின்மாறிப்போய்க்  கொண்டிருக்கிறார்கள்.  ஆதலால் இதனை வாசிக்கிற தேவனுடைய ஜனமே நாம் எப்போதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் கவனமாக பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேண்டும். இவ்விதமாக கர்த்தர் நம்முடைய பாரம்பரியப் பழக்கம் மாற்றப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் நாம் புது உடன்படிக்கை பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பதை மலையின் மேல் மோசேயிடம் மணவாட்டி சபை தங்கள் ஜீவிதம் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி பேசுகிறார்.  மேலும் 

யாத்திராகமம் 34:26-27

உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனம் நாம் தியானிக்கும் போது நம்முடைய முதற்பலன் கிறிஸ்து.  நாம் தேவ சமூகத்தில் கிறிஸ்துவை மட்டும் ஏந்தினவர்களாக தேவனை ஆராதிக்க வேண்டும். எந்த பாரம்பரிய வாழ்க்கையோ இருக்கக்கூடாது. இவ்விதம் நாம் மாறும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.