தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 6: 5

ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலுயா.

நம்முடைய உள்ளத்தில் அதிசயம் விளங்குவது எப்படி? விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் மோசேயிடம், பூமியெங்கும் உள்ள எல்லா ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை, உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன் என்றவர், அந்த கன்மலையாகிய கிறிஸ்து அதிசயமானவராக விளங்குவார், நம்  எல்லாருடைய உள்ளத்திலும், அது அவருடைய செய்கையாயிருக்கிறது.  அந்த அதிசயம் கிறிஸ்து.  

இந்த அதிசயம் உடன்படிக்கையின் மூலம் விளங்குகிறது.இந்த காரியம் தேவன் செய்கிற பயங்கரமான காரியமாக இருக்கிறது.  பயங்கரம் என்று சொல்லும் போது நாம் யாரும் நினைத்து பார்க்க முடியாதக் காரியமாயிருக்கிறது.  என்னவெனில் நாம் நினைக்காதக் காரியங்களைச் செய்கிறவர்.  மேலும் கர்த்தர்ச் சொல்லுகிறார் 

யாத்திராகமம் 34:11-17

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.

வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.

இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கையில், தேசத்திலுள்ள ஜாதிகளை துரத்தி விடுகிறேன், இனி அந்த ஜாதிகளோடு உடன்படிக்கை பண்ணாதபடிக்கு எச்சரக்கையாயிரு. இல்லையென்றால் அது நமக்கு கண்ணியாயிருக்கும்.  இதன் பொருள் என்னவெனில், நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்கு திருஷ்டந்தப்படுத்துவது,  நம்முடைய உள்ளத்தில் பாரம்பரிய கிரியைகளாகிய சாத்தானுடைய செயல்களாகிய ஜாதிகள் உண்டு.  அதனை மாற்றி நம்மை சுத்தம் செய்துப் பரிசுத்தம் படுத்தும்ப்படியாக தேவன் உடன்படிக்கைப்  பண்ணி அங்கு அதிசயங்களை விளங்கப்பண்ணுகிறார்.  

அதனால் தான் தேவன் சொல்கிறதை, நாம் ஜாக்கிரதையாக நாம் கைக்கொள்ள வேண்டும். என்னவென்றால்  ஒரு முறை சத்துருவின் கையினின்று விடுவித்து இரட்சித்தப் பிறகு, நாம் எங்கு சென்றாலும்,  எந்த சூழ்நிலைகள் வந்தாலும் நம் உள்ளம்  தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும், வேறு எந்த பாரம்பரிய துர்கிரியைகள் செய்யாதபடி நம்மை நாம் காத்துக்கெள்ளவேண்டும்.  அதில் நாம் தவறி விட்டால் அந்நிய தேவனை பணிந்துக் கொள்கிறோம் என்று கர்த்தர் சொல்கிறார்.  அப்படியானால் நமக்கு அது கண்ணியாயிருக்கும்.  

மேலும் வேறு எந்த ஜாதி மக்களோடே எந்த காரியத்திலும் உடன்படிக்கை பண்ணுவது தவறு என்பதும், நம்முடைய குமாரருக்கு பெண்க்கொள்ளக்கூடாது என்பதும், அப்படி நாம் செய்து விட்டால் நம்முடைய குமாரரை வேறு தேவர்களை சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். மற்றும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்க வேண்டாம் என்று சொல்லப்படுவது, குறிப்பாக நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது, நம்மளில் அநேகர் தட்டானால் வார்க்கப்பட்ட, வெள்ளியும், பொன்னும் தங்கள் சரீரத்தில் அணிந்துக் கொள்கிறார்கள். அதுவும் விக்கிரகாராதனை என்பது தெரிந்துக்கொள்ள வேண்டும்.  அதனால் இவ்விதமான துர்க்கிரியைகள் எல்லாம் முழுமையாக புதைத்து விட்டு 

யாத்திராகமம் 34:18-20

புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.

கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.

கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.

புளிப்பில்லா அப்பப்பண்டிகை கைக்கொள்ள வேண்டும் என்பது என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நம்மை பாவம் சாபம், என்பவற்றிலிருந்து மீட்டுக்கொள்கிறார் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறது. எப்படியென்றால் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து ஆபீப் மாதத்தில் மீட்டுக்கொண்டு வந்ததை தேவன் ஒப்புமைப்படுத்தி காட்டுகிறார். கர்த்தராகிய இயேச கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இரத்தம் சிந்தி, நம்மை பாவம், சாபம், என்பவற்றிலிருந்து நம்மை விடுவித்து  மீடடுக் கொள்கிறரர் என்பதையும் மலையில் வைத்து மோசேயிடம்  கூறிக்கொண்டு, எல்லா ஆத்துமாவின்  முதற்பேறனைத்தும் மீட்கப்படவேண்டும்  என்கிறார்.

யாத்திராகமம் 34: 20 

கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.

 ஆட்டுக்குட்டியால் மீட்புப்பெற்றுக் கொள்ளாதவர்களை தேவன் கழுத்தை முறித்து போடச் சொல்லுகிறார். ஆத்துமா மீட்கப்படாதவர்களை கர்த்தர் முண்டம் ஆக்குகிறார். அப்படியானால் நமக்கு ஜீவன் இல்லை என்பது நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

பிரயமானவர்களே கர்த்தர் நம் உள்ளத்தில் செய்த அதிசயம் தான் இந்த ஆட்டுக்குட்டி.  இவை ஆட்டுக்குட்டியானவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம். அவர் நம்முடைய பாவம்,  அக்கிரமம் இவற்றிற்காக உள்ளம் உடைத்து அப்போது நொறுங்கி பின்பு தேவன் அவருடைய ஆவியினால் உயிர்ப்பிக்கிறார். இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம்முடைய உள்ளம் நொறுங்கி ஒப்புக்கொடுக்கும் போது, தேவன் நம்மை கிறிஸ்துவோடு கூட உயிர்ப்பிக்கிறார்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.