தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 139: 14

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

நம் உள்ளத்தில் அதிசயமானவர் தோன்றுதல் -திருஷ்டாந்தம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாம் தேவசித்தம் செய்தால் மாத்திரமே விசுவாச ஒட்டத்தில் கால் தள்ளாடாதபடி ஓடி தேவன் நமக்கு வைத்திருக்கிற பந்தயப்பொருள் நாம் பெற்றுக்கொள்ள முடியும், என்றும் மற்றும் தேவசித்தம் எப்படி அறிந்துக் கொள்ளலாமென்றால், அவர் தான் கிறிஸ்து என்பதின் விளக்கத்தை, இஸ்ரவேல் ஜனங்களை வைத்து தேவன் திருஷ்டாந்தப்படுத்தினதும், மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுவிசேஷப் பகுதியில், நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறோம் என்பதை எடுத்துக்கூறினதையும் பார்க்கிறோம்.  அதனால் நாம் எல்லோரும் இயேசுக் கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அதன்   பிரகாரம் அவர் காட்டியப் பிரகாரம் நடப்போமானால் கிறிஸ்து என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறதுப் போல நாமும் என்றென்றைக்கும் மரணத்தை காண்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  

மேலும் கர்த்தர், மோசேயிடம் என்னண்டையில் ஓர் இடம் உண்டு என்று, ஒரு கன்மலையை குறித்து சொல்வதையும், அது கிறிஸ்து, கர்த்தரின் மகிமைக்கு முன்பாக யாரும் நிற்க முடியாது என்ற காரணத்தால் மோசேயிடம் கன்மலையின் மேல் நிற்க சொல்லி, அது வழியாக கடந்து போகும் போது கர்த்தர் அவருடைய கரத்தினால் மோசேயை மூடுகிறார்.  பின்பு கரத்தை எடுக்கும் போது கர்த்தருடைய முகம் பார்க்க முடியாமல்  அவருடைய பின்பக்கம் பாரக்கிறான்.   அந்த கரம் தான் கிறிஸ்து.   மேலும் அவருடைய செட்டையின் மறைவில் நம்மை காத்துக் கொள்கிறார் என்பதின் திருஷ்டாந்தம் தான் அது  என்பதை  அறிந்துக்  கொள்கிறோம்.  அவற்றைக்குறித்து 

சங்கீதம் 91:1-4  

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

இவற்றில் கூறப்  பட்டருக்கிற கருத்துகள் நாம் தியானிக்கும் போது, நமக்கு விரோதமாக எழும்புகிற  எல்லாவித சத்துருவின் கையினின்று நம்மை கிறிஸ்துவின் மூலம் விடுவித்து இரட்சிக்கிறார்.  அவற்றைக் குறித்து நாம் பார்க்கும் போது,  

யாத் 34: 1-2

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.

என்னவெனில் கர்த்தர் மோசேயிடம் சொல்கிறது, என்னவெனில் முதலில் உடைத்த கற்பலகைகளுக்கொத்த இரண்டாவது கற்பலகைகள் இழைத்துக்கொள், அப்பொழுது முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை எழுதுவேன் என்கிறார்.  அது எப்போதென்றால்  விடியற்க் காலத்தில்  மலையின் உச்சியில் என் சமுகத்தில் ஆயத்தத்தோடு வந்து நில் என்று சொல்வதின்  காரணம்  என்னவெனில்  நம்முடைய முதல் இருதயம், கல்லான இருதயம் உடைத்து இரண்டாவது புதிய இருதயத்தை கிறிஸ்துவின் ஆவியினால் சதையாக்கி, அவர் ஆவியினால் இருதயத்தில் எழுதுகிறார், என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  கர்த்தர் சொன்னது போல் மோசே செய்கிறான்.  மலையின்  உச்சி என்று சொல்லும் போது ஜெபத்திலும்,பரிசுத்தத்திலும் நாம் வளர வேண்டும் என்பதற்காக காட்டுகிறார்.  

அப்போது யாத்திராகமம் 34:5-13

கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.

கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.

மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.

அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, நாம் பரிசுத்தத்தில் வளரும் போது, கர்த்தர் எப்படி நம்மிடத்தில் பேசுகிற அனுபவத்தையும், நம்மிடத்தில் செய்கிற இரட்சிப்பை காட்டுகிறார். கர்த்தர் நம் உள்ளத்தில் இறங்குகிறதும், அவருடைய நாமத்தை நமக்கு அறிவிக்கிறதும், கர்த்தர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ள தேவன் என்பதையும், ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் காட்டுகிறவர் என்பதையும்,அக்கிரமத்தையும்,   மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர் என்பதையும், குற்றவாளியை குற்றமற்றவனாக விடாமல் பிதாக்கள் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறவர் என்று கூறும் போது,  மோசே முகங்குப்புற விழுந்து  வணங்குவதும், எங்கள் நடுவில் எழுந்தருள  வேண்டும் என்று மன்றாடும் போது,  எங்கள் பாவத்தையும்,  அக்கிரமத்தையும், மீறுதலை மன்னிக்க வேண்டும் என்று கேட்டு எங்களை உமது சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்கிறான்.  

அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நான் ஒரு உடன்படிக்கைப்பண்ணுகிறேன்.  ஆனால் எந்த ஜாதிகளிலும் செய்யாத அதிசயங்களை உன் ஜனங்களுக்கு முன்பாகச்  செய்வேன் அந்த அதிசயம் கிறிஸ்து.  இந்த அதிசயம் உடன்படிக்கையின் மூலம் விளங்குகிறது. கர்த்தராகிய இயேசு அதிசயமானவராக நம்முடைய உள்ளத்தில் தோன்றுவார் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி, இந்த காரியம் பயங்கரமாயிருக்கும் என்று கர்ததர் கூறுகிறார்.  இந்த அதிசயம் நம் எல்லோருடைய உள்ளத்திலும் தோன்றும்படியாக யாவரும் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.