தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119 : 37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மரண பயம் வருவதற்கு காரணம் என்ன?   அவற்றிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்வது எப்படி?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடைய தேவனாகிய கர்த்தர் விக்கிரகங்களை அருவருக்கிற தேவனாய் இருக்கிறார்  என்பதும் பொன்னாலும் வெள்ளியாலும் நம்மை நாம் அலங்கரித்தால் நமக்குள்ளில் பிரவேசிப்பதில்லை என்பதும், மேலும் நம்மோடு கிறிஸ்து பேசுவதில்லை என்பதும் புரிகிறது. மேலும் உண்மையாக நடந்து கொண்ட மோசேயோடே தேவன் முகமுகமாய் பேசுகிறார்.  இவை மணவாளன் மணவாட்டி சபையை சேர்த்துக்கொள்வதை திருஷ்டாந்தபடுத்துகிறார்.  பின்பு 

யாத்திராகமம் 33:12-14  

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.

உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

மோசே கர்த்தரிடத்தில் பேசுகிறதை பார்க்கிறோம்.  பேசுகிறது என்னவென்றால் உம்மைப் பற்றி அறிகிறதற்கும் உம்முடைய கண்களில் கிருபை கிடைப்பதற்க்கும் உம்முடைய வழியை எனக்கு அறிவியும் என்றும் இந்த ஜாதி உம்முடைய ஜனம் என்று நினைத்தருளும் என்கிறான்.   

அநேகமாக நமக்கு அவர் பாதைகள் தெரியாது, ஆனால் நாம் நினைப்போம், நமக்கு எல்லாம்  தெரியும். நாம் அவருடைய வழியில் தான் நடக்கிறோம்,  என்று  நினைத்து, நம்முடைய கண்கள் நமக்கு குருடாயிருக்கிறதை அறியாதபடி, மற்றவர்கள் குருடாயிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, தான் குழியில் விழுந்து கிடந்துக்கொண்டு, தினமும் வியாதியும், உலக சம்பந்தமான மருத்துவர்களையும்,  வைத்தியர்களையும்,  இவர்களுடைய வழிகளில் மருந்து, மாத்திரை, ஊசி இவைகளை தங்கள் ஆரோக்கியத்திற்க்காகவும், தங்கள் ஜீவனுக்காகவும் கைக்கொண்டு விட்டு, மற்றவர்களுக்கு தேவனுடைய வசனத்தை உபதேசிப்பார்கள். இவர்களுக்கு வெட்கம் இல்லையா?  

அவர்களுடைய வாழ்வில் திரியேக தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு பதிலாக மருந்து, மாத்திரை, ஊசி  இவைகள தேவனென்று எண்ணி அவற்றிற்கு கீழ்ப்பபடிந்துக் கொண்டு, தன்னோடு தேவன் இருக்கிறார் என்று சொல்லி மக்களை வஞ்சித்து, ஏமாற்றி, மருந்து மாத்திரை ஊசி இவைகளை இரட்சிக்கப்பட்டு சபையோடு சேர்ந்த மக்கள் பின்பற்றினால் இவை தவறல்ல என்று  உபதேசிக்கிறவர்கள். இவர்களை குறித்து தேவன் சொல்வது, இவர்களை பொய்யர், கள்ள தீர்க்கத்தரிசிகள் இப்பட்டவர்களை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதின நிரூபத்தில் 

தீத்து1:9-16

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.

அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.

இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,

விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.

அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட வசனம் என்ன சொல்கிறதென்றால் விசுவாசத்தினால் ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாய் கடிந்துக்கொள்  என்று  சொல்லப்படுகிறது. மேலும் விசுவாசம் வெறும் வாயால் மட்டும் இருக்குமானால் அது செத்தது.  ஆனால் கிரியைகளிலிருந்தால் அது எல்லா  காரியங்களிலேயும் உயிருள்ளதாயிருக்கும்.  

மேலும் சங்கீதம் 31:6  

வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

மாயையான காரியங்களை நாம் ஒருபோதும் பற்றிக்கொள்ளாதப்படி அதனை வெறுத்து கர்த்தர் மேல் மாத்திரம் நம்பிக்கையாக இருப்போமானால் நாம் வெட்கப்படுவதில்லை.  கர்த்தர் மேல் முழுமையான நம்பிக்கையை  வைப்போமானால் மட்டும் நித்திய ஜீவன் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.  அதனால் தேவ வசனம் என்ன சொல்கிறதென்றால்  

யோனா  2:8  

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

கிருபையைப் போக்கடிக்கிற காரணம் என்னவென்றால் முதலில் மரணபயம், இரண்டாவது காரணம் என்னவென்றால் உலக ஆசைகள்.  இவ்வித காரியம் இருப்பதற்கு காரணம் ஆத்துமாவின் விடுதலை பெற்றுக்கொள்ளாததால் உலகில் எவ்வளவு கஷ்டம் அனுபவித்தாலும் மரணம் நெருங்கும் போது பயம் வருவது சகஜம்தான். ஆனால் அநேகர் ஏதோ சிறிய வியாதி வந்து விட்டால் மரித்து விடுவோமோ என்று பயந்து விசுவாச வாழ்க்கையை கவிழ்த்து விடுகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய உள்ளான நினைவு மரணம் ஒரு நாளும் வருவதில்லை என்று தப்பான எண்ணம் கொள்கிறார்கள். மரணம் என்பது நாம்  எல்லாரும் ஒரு நாள் சந்தித்து தான் ஆகவேண்டும்.  

பிரசங்கி 8:8-13

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

ஆனால் உலக மரணத்திற்கு பிறகு நமக்கு ஒரு சந்தோஷமான ஒரு வாழ்வு உண்டு என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.  அந்த வாழ்க்கையைப பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்குமானால், மரண பயம் நம்மை தொடாது.   அவ்விதமான நம்பிக்கை இருக்குமானால் நாம் யாவரும் மாயையை பின்பற்றிப் போக மாட்டோம்.  

இவ்விதமான மரணபயத்திலிருந்து நம்மை இரட்சிக்கும்படியாகவே நமக்காக மரித்து, பின்பு பதாளத்தையும், மரணத்தையும் ஜெயித்தவராக மூன்றாம் நாளில் உயிரத்தெழுந்து,  என்றென்றைக்கும் உயிரோடுயிருக்கிறவராக காணப்படுகிறார்.  இவ்விதமாக உயிர்தெழுந்தக் கிறிஸ்துவை விசுவாசித்து அவரைப்போல் தேவசித்தம் செய்கிறவர்களை அவர் அவரோடுக்கூட எழுப்பி,  என்றென்றும் உயிரோடு கிறிஸ்துவோடுக்கூட வாழும் பேரின்ப வாழ்வை தருகிறார்.  மேலும் தேவன் நமக்கு காட்டின வழியில் சரியாக தவறாமல் நடப்போமானால், தேவனுடைய கண்களில் நமக்கு  கிருபைக் கிடைக்கும்.  அவர் கிருபை நமக்கு கிடைத்தால் அவர் நம்மை எப்போதும் நினைத்திருக்கிறார்.  கர்த்தர் நம்மை நினைத்தருளினாரானால்,  அவர் சமூகம் எப்போதும் நமக்கு முன்பாகச் செல்லும்.  நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொல்கிறார். 

பிரியமானவர்களே நாம் மேற்கூறியப் பிரகாரம் பெற்றுக்கொள்ள 

சங்கீதம் 103:1-5  

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.

இப்படி நம்மை கழுகுக்கு சமானமாய் வாலவயது போலாக்குகிறார்.  இப்படியான ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போமா

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.