Oct 18, 2020

தேவனுக்கேமகிமையுண்டாவதாக

சங்கீதம்: 48:9

தேவனே, உமதுஆலயத்தின்நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

வஸ்திரத்தின்தோற்றங்கள்:- திருஷ்டாந்தம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் எவ்விதத்தில் கிருபையில் பிரகாசிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.

என்னவென்றால் எப்போதும் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும்.   இந்த குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கும்படியாக இடித்துபிழிந்த ஒலிவ எண்ணெய் எப்பொழுதும் நம்கையில் இருக்க வேண்டும் என்றால் இடித்து பிழிந்த ஒலிவ எண்ணெய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நாம் அபிஷேகம் பண்ணப் பட்டவர்களாகவும், எப்போதும்அவருடையவசனம், கற்பனை, கட்டளை எல்லாவற்றிற்கும் நாம் கீழ்ப்படிந்தவர்களாகவும் எப்போதும் நாம் நம் வாழ்வில் அதனை விட்டு விடாதபடி பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.

பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டின் பகுதியில் நாம் வாசிக்கும் போது கர்த்தர் சில பேரை ஆசாரியராகவும், சில பேரை லேவியராகவும் மற்றும் சில பேரை ஆசரிப்பு கூடார வேலைக்காகவும் மற்றும் சில பேரை மற்றும் சில வேலைகளை செய்யும் படியாகவும் அழைத்திருந்தார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாசஸ்தலத்தில் தொங்கவிடப் பட்டிருந்த திரைச் சீலைக்கு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.     மேலும் எருசலேம் தேவாலயத்திலும் திரைசீலை இருந்ததை வாசிக்கிறோம்.    இந்த திரைச்சீலை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஆவியை நமக்காக சிலுவையில் நின்று விடும் போது மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.      அன்று முதல் நம் ஆசாரியரும், பிரதானஆசாரியரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருடைய சரீரம் கிழிக்கப்பட்டு அவர் மகா பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிக்கிறதை தேவன் நமக்கு தெளிவாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதன் பிறகு அவர் உயிர்த்தெழுந்த அநேகருக்கு காணப்பட்டு மீண்டும் பரலோகத்திற்க்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.     பின்பு பெந்தேகோஸ்தே நாளில் காத்திருந்த யாவர் மேலும் இறங்கினார்.      இப்போது நம் எல்லோரையும்,   எப்படியென்றால் அவரோடு பாவத்திற்கு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு கிறிஸ்துவின் ஆவியினால் நம் ஆத்தும உயிர்ப்பு பெற்று நித்தியமீட்பை நாம் பெற்றுக் கொண்டால் நம் எல்லோரையும் ராஜாக்களும் ஆசாரியருமாக்கினார்.

முந்தின நாளில் பழைய ஏற்பாட்டின் பகுதியில் ஆசாரியர்கள் எவ்விதம் வஸ்திரம் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்று திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறாரோ அதை விட மேலாக நாம் பரிசுத்த கற்பனைகளை விட்டு விடாதபடி பரிசுத்தமாக வாழவேண்டும். ஏனென்றால் நம்முடைய வஸ்திரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தரித்திருக்கிறோம் என்ற உள்ளான பயம் நம் எல்லோருக்கும் காணப்பட வேண்டும்.     அதற்கு திருஷ்டாந்தபடுத்த,

யாத்திராகமம்: 28:2

உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டு பண்ணுவாயாக.

இந்த வஸ்திரம் உண்டு பண்ணுவதற்கு நான் ஞானத்தின் ஆவியினால் நிரம்பின விவேகமான யாவரோடும் நீ சொல்வாயாக. இவ்விதமாக தேவன் கூறுவது ஞானம் என்பது கிறிஸ்து, கிறிஸ்துவின் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் விவேகமுள்ள புத்திராயிருப்பார்கள். அவர்கள் மட்டும் தான் இந்த வஸ்திரத்தை செய்யமுடியும்.

பிரியமானவர்களே நாம் நம்மை பற்றி ஒன்று நம்மை நாமே சோதித்து அறிவோமா?

உண்டாக்கவேண்டிய வஸ்திரம் மார்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்கச்சையும், பாகையும், இடைக்கச்சையுமே

கர்த்தர் சொல்லுகிறார் உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டு பண்ணவேண்டும்.

பிரியமானவர்களே நாம் அல்ல நம்மளில் கிருபை பெற்றிருக்கிற நம் ஆத்துமா தான் உயிர்ப்பிக்கப்பட்டு (கிறிஸ்துவின் ஜீவன்) ஊழியம் செய்கிறது.     அதற்கு தான் கர்த்தர் மோசேயையிடம் உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை (கிறிஸ்து) உண்டு பண்ண வேண்டும்.

இந்த வஸ்திரம் அன்பு, சந்தோஷம், சமாதானம் ,நீடியபொறுமை இவைகளின் அலங்காரம் உண்டாயிருக்கவேண்டும்.

யாத்திராகமம்: 28:6-8

ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் விசித்திர வேலையாய்ச் செய்யக் கடவர்கள்.

அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த் துண்டுகளின் மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்பட வேண்டும்.

அந்த ஏபோத்தின் மேல் இருக்க வேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்க வேண்டும்.

ஏபோத்தை தரிப்பது என்னவென்றால் பிரதான ஆசாரியனாக இருக்கிறவர்கள் தங்கள் இரண்டு தோள்களின் மேல் போட்டு அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்பட்டு அது ஒன்றாக இணைத்து விடுவார்கள்.

இது ஏனென்றால் பிரதான ஆசாரியனும் தேவனாகிய கர்த்தருடைய இருதயமும் ஏக மனதாயிருக்கிறார்கள் என்பதனை காட்டுகிறது.

அந்த ஏபோத்தின் மேல் இருக்கிற கச்சை என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.     இந்த ஏபோத்தின் மேல் இரண்டு கோமேதக கற்கள் வைக்கப்பட்டு இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டப்பட்டுள்ளது.

அதில் இஸ்ரவேல் புத்திரரின் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் பதிக்கப்பட்டுள்ளது.

பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டில் பிரதான ஆசாரியர்கள் வஸ்திரங்களில் இவ்வித அடையாளங்கள் பதிக்கப்பட்டுள்ளதின் நோக்கம் புதிய எருசலேம் வஸ்திரம் தரித்தவர்கள் நடுவில் உண்டாயிருக்கும் என்று தேவன் திருஷ்டாந்தத்தோடு விளக்கி காட்டுகிறார்.      ஆனால் இந்நாட்களில் நம்மை ராஜாக்களும், ஆசாரியருமாக்கி நம் எல்லோர் மேலும் புதிய எருசலேமாகிய பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் நம் எல்லோரிலும் மகிமைபடுவார்.     நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம்.        ஜெபிப்போம்.             

 -தொடர்ச்சிநாளை.