தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

I யோவான்: 3:16

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.       அல்லேலுயா.

கிருபையில் சேரும் சிலாக்கியம் அடைய வேண்டும் :- 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, வாசஸ்தலத்தின் தோற்றங்களை குறித்து கழிந்த நாளில் நாம் தியானித்தோம்.      எப்படியெனில் கிறிஸ்துவோடு நாம் எப்படி இணைக்கப்பட்டு அவருடைய சாயலாக இருக்கிறோம் என்பதனை தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.     எப்படியெனில் கிறிஸ்துவும் நாமும் ஒரே சரீரமாக இருக்கிறோம் என்பதை தேவன்,

யாத்திராகமம்: 26:10,11

இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,

ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக.

இவ்விதமாக ஒரே சரீரமாக உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்படுகிறோம்.

மேலும் ஒரே சரீரமாக நாம் இணைக்கப்படும் படியாக வாசஸ்தலம் நிறுத்தப்படுகிறது.      அதில் திரைச்சீலை தொங்க விடப்படுகிறது இந்த திரைச்சீலை கிறிஸ்துவுக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார் அன்பு, சந்தோஷம், சமாதானம்,  நீடிய பொறுமை உள்ளவராய் காணப்படுகிறார்.     இந்த திரைச்சீலையிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படுகிறது. 

திரைச்சீலையிலே கேருபீன்கள் வைக்கப்படுகிறதென்றால் நம் கிறிஸ்து துதிகளின் நடுவில் வாசமாயிருக்கிறார் என்பதை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.      அதனால் நம் நாவு எப்போதும் தேவனை துதித்து கொண்டிருக்க வேண்டும்.

யாத்திராகமம்: 26:32-37

சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

கொக்கிகளின் கீழே  அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப் பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின் மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.

இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

பிரியமானவர்களே ஆத்ம பெலனை குறித்து தேவன் சொல்லி திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் சித்தீம் மரத்தால் செய்த நாலு தூண்கள், அந்த நாலு தூண்களும் நான்கு சுவிசேஷத்தை உடையவர்களாக கிருபையின் வரங்கள் நிறைந்தவர்களாக அந்த திரைச்சீலை உண்டாயிருக்க வேண்டும்.     அந்த தூண்கள் என்பது நாம் ஒவ்வொருவரும் நாலு வெள்ளி பாதங்கள் மேல் நிற்கவும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால் வெள்ளி என்பது வசனம், அவர் தான் கிறிஸ்து.    கிறிஸ்துவின் பாதம் என்பது சபை.    இது சபையில் நம்மை நிறுத்துகிற அனுபவத்தை காட்டுகிறது.  கொக்கிகள் திருஷ்டாந்தம், தேவனுடைய ஆவியினால் நாம் கிறிஸ்துவோடு கூட  இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.     இதனுள்ளில் சாட்சிப் பெட்டி காணப்பட வேண்டும்.     நாம் பூமியில் கிறிஸ்துவோடு எடுக்கிற சாட்சிக்கு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. 

இந்த திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலம் பிதாவாகிய தேவனுடைய ஸ்தானத்தை காட்டுகிறது.     பரிசுத்த ஸ்தலம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுகிற ஆசாரியர்கள் போகிற இடத்தை காட்டுகிறது.      இந்த இரண்டிற்கும் இடையில் திரைச்சீலை தொங்க விடப்பட்டிருக்கிறது.      என்னவென்றால் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள எந்த ஆசாரியனும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் போகாதப் படி தடைபட்டுள்ளது.      பிரதான ஆசாரியன் மாத்திரமே அதற்குள் வருஷத்திற்கு ஒருமுறை பிரவேசிக்க முடியும்.      அதை நாம் மோசேயுடைய காலத்தில் சீனாய் மலையில் மோசே மாத்திரம் தான் ஏறி போகும் படி அனுமதி கொடுக்கிறார்.     ஜனங்கள் பாவ மன்னிப்பு எடுத்தாலும் பிரதான ஆசாரியனின் வழியாக தான் பிதாவாகிய தேவனிடத்தில் போக முடியும்.       பலி செலுத்தினாலும் ஆசாரியன் இவர்கள் தான் ஜனங்களுடைய பலியை வாங்கி செலுத்த முடியும்.

யாத்திராகமம்: 26:34

மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின் மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

மேலும் இளநீல நூலும், இரத்தாம்பர‌ நூலும், சிவப்பு நூலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலும் இவற்றால் சித்திர தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தில் வாசலுக்கு உண்டாகும் படி சொல்கிறார்.

முதலாம் கூடாரம், இரண்டாம் கூடாரம் இவைகளை பிரிக்கும் வகையில் வாசலில் தொங்கு திரை காணப்படுகிறது.

அந்த தொங்கு திரைக்கு சித்தீம் மரத்தால் ஐந்து தூண்களை செய்து (விசுவாசம்) அவைகளை பொன் தகட்டால் மூடி அவைகளுக்கு பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கல பாதங்களை வார்ப்பிக்க கடவாய். என்னவென்றால் ஒவ்வொரு ஆத்துமாவும் விசுவாசத்தில் உறுதிப்பட்டு சத்தியத்தில் நிலை நாட்டபட்டவர்களாக கிருபையில் பிரவேசிக்க வேண்டும்.

பிரியமானவர்களே இவையெல்லாம் நமக்கு தேவன் தெளிவு காட்டுகிறது என்னவென்றால் நாம் எவ்விதத்தில் ஆவியில் உண்டாயிருக்க வேண்டுமென்று காட்டுகிறார்.     முதலாம் உடன்படிக்கையின் காலத்தில் யாரும் நேரடியாக கிருபாசனதண்டை  போக முடியாது.     ஆசாரியர்கள் மூலமாகவே தான் போக முடியும்.  ஆனால் கிறிஸ்துவின் பாடு மரணம் இதற்கு ஒரு அடையாளம் என்னவென்றால் நம்மை மகா பரிசுத்த ஸ்தலம் (கிருபாசனத்தண்டை) சேர்க்கும் படியாக பிரதான ஆசாரியனாகவும்,

ஆசாரியனாகவும் அந்த இடத்தில் நமக்கு மத்தியஸ்தராக வரும் படியாக தம்முடைய இரத்தத்தினால் அந்த ஸ்தலத்தை சம்பாதிக்கிறார்.

எப்படியென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனை (ஆவியை) விடும் போது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி, கீழ் வரைக்கும்  இரண்டாகக் கிழிந்தது.      இவ்விதமாக நாம் கிறிஸ்துவின் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் படியாக ஆசாரியனாக , மகா பிரதான ஆசாரியனாக வெளிப்படுகிறார்.

இவ்வித நாம் எல்லோரும் கிருபையில் சேரும் சிலாக்கியத்தை கண்டடைகிறோம்.      கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.      ஜெபிப்போம்.     

 -தொடர்ச்சி நாளை.