வாசஸ்தலத்தின் தோற்றங்கள்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 15, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யோவான்: 14:26

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,  ஆமென.      அல்லேலூயா.

வாசஸ்தலத்தின் தோற்றங்கள்:- 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே  கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் வாசஸ்தலம் எவ்விதம் அமைக்க வேண்டும் என்று தேவன் மோசேக்கு மாதிரி காட்டுகிறதையும், அந்த வாசஸ்தலத்தில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் தேவன் திருஷ்டாந்தப்படுத்தி,  நம் உள்ளம் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி சபை எவ்விதமான அலங்கரிப்பாய் இருக்க வேண்டுமென்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறதை வாசிக்க முடிகிறது.

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற கருத்துக்கள் என்னவென்றால் கர்த்தர் மோசேயை நோக்கி ஜனங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையை குறித்து கூறினதை பார்த்தோம் தங்கள் இருதயத்தை முழு மனதோடு மன உற்சாகமாய் கொடுக்கிற காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்கிறார்.     அந்த காணிக்கையில் சில காரியங்கள் என்னவென்றால் வாசஸ்தலம் உண்டு பண்ணுவதற்கு அவசியமானவைகளாக இருக்கிறது.      கர்த்தர் சொல்லுவது,

யாத்திராகமம்: 26:1

மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.

ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.                                                                                              பத்து மூடு திரைகளால் வாசஸ்தலத்தை உண்டு பண்ணுவதற்கு தேவன் சொல்கிறது கர்த்தர் இந்த கட்டளைகள் வாசஸ்தலத்துக்கு பத்து மூடு திரைகள் என்று சொல்வது பத்து கன்னிகைகள் நமக்கு உவமை.      இந்த பத்து மூடு திரைகள் தேவனுடைய அன்பினால் (வசனத்தால்) நெய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.     பரலோக ராஜ்யம் தங்கள் தீவெட்டிகளை பிடித்து கொண்டு எதிர் கொண்டு போகிற கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.      இதோடு நம் ஸ்தோத்திர பலியாகிய கேருபீன்கள் உண்டாயிருக்க வேண்டும்.

யாத்திராகமம்: 26:3, 4

மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு;  இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.

மூடு திரை என்பது வாசஸ்தலத்தின் ஒரு முக்கியமான தோற்றம், கன்னிகை,  இவற்றில் கடை ஓரத்தில் நூலால் காதுகளை உண்டு பண்ணு என்று சொல்கிறார்.      மற்ற ஐந்து மூடு திரைகளின் கடை ஓரத்திலும் காதுகளை உண்டு பண்ணு என்று சொல்கிறார்.

வாசஸ்தலத்தில் மூடு திரைகள் ஐந்தும் ஒன்றோடொன்று இணைந்தும் ஒவ்வொரு மூடுதிரையிலும் ஐம்பது காதுகள் ஒன்றோடொன்று இணையும் படி செய்ய சொல்கிறார்.     இணைக்கபட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டு பண்ண சொல்கிறார்.

இணைக்கப்பட்ட காதுகள் என்பது பரிசுத்த ஆவியானவரோடு நம் ஆத்துமா இணைக்கப்படுதல்.   மேலும்,

யாத்திராகமம்: 26:6

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக, அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.

எபேசியர்: 2:19-22                                                                                                     

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

கன்னிகை என்பது இஸ்ரவேல் சபை, கிறிஸ்துவாகிய மூலை கல்லால் கட்டப்பட்டு எழும்பி கொண்டிருக்கிற நம் ஆத்துமா அது கன்னிகையாக (மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர்) தீவெட்டியாக எரிகிற ஒரு அனுபவம் அதோடு சேர்த்து தேவ ஆவியினால் நாம் இணைக்கப்படுகிறோம்.      என்றால் தேவ ஆவி தான் காதுகளை இணைக்கிற கொக்கி, காதுகள் என்பது நாம் ஒவ்வொருவரும் என்பதை நமக்கு தேவன் பரிசுத்த வாசஸ்தலம் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளையும் ஆவியானவரின் கிரியைகளையும், தோற்றங்களையும் நமக்கு மோசே மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

இவைகள் எல்லாம் இணைக்கப்பட்டு ஒரே வாசஸ்தலமாக விளங்குகிறது.     அதை தான் தேவனுடைய பிள்ளைகள் எல்லோரும் ஒரே சரீரமாக (கிறிஸ்து)  ஒரே வாசஸ்தலமாக விளங்குகிறோம்.     இது எப்படியென்றால்,

ரோமர்: 6:3,4

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.

ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப் பட்டவர்களனால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப் பட்டிருப்போம்.

இவ்விதமாக உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டவர்கள் தேவனுடைய வாசஸ்தலமாக கூட்டிக் கட்டப்பட்டுக் கொண்டு வருகிறீர்கள்.

யாத்திராகமம்: 26:7

வாசஸ்தலத்தின் மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு மயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டு பண்ணுவாயாக.

இவை நம்மை தேவன் தம்முடைய மகிமையினால் மூடுகிறார்.

இவ்விதமாக இன்னும் வாசஸ்தலத்துக்குரிய பல காரியங்கள் செய்யப்பட்டு நிறுத்த தேவன் சொல்கிறதை வாசிக்கிறோம்.

யாத்திராகமம்: 26:31

இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச் சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்பட வேண்டும்.

இதை எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் அன்பு, சந்தோஷம், சமாதானம்,  நீடிய பொறுமை  இவற்றால் திரைச்சீலை செய்யப்படுகிறது.     இந்த திரைச்சீலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு  திருஷ்டாந்தப்படுத்துகிறார்.     அதில் விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேரூபீன்கள் வைக்கப்பட்டிருக்கிறது (துதித்தல்).

யாத்திராகமம்: 26:32

சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

இவ்விதமாக நாம் தேவனுடைய வாசஸ்தலமாக மாறும் படி ஒப்புக் கொடுப்போம்.      இதன் விளக்கம் அடுத்த நாளில் தியானிப்போம்.   கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.       

-தொடர்ச்சி நாளை.