தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 84:1

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா. 

வாசஸ்தலம் நிறுத்தும்படி நாம் செய்ய வேண்டிய காரியங்கள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில், நம்முடைய வாசஸ்தலம் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி என்பதையும் நாம் தேவனுடைய வாசஸ்தலம் என்பதையும்  வாசஸ்தலம் எவ்விதம் பரிசுத்தமும், மகிமையுள்ளதாய் இருக்க வேண்டும் என்பதனையும் அதில் கிருபை வரங்கள் ஒன்பது இருக்கிறதையும், ஒன்பது கிருபை வரங்கள் நாம் பெற்று தேவனோடு வாழ வேண்டும் என்பதையும் தியானித்தோம்.     என்னவெனில்,

I கொரிந்தியர்: 1:4-8

கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப் பட்டிருக்கிறபடியால்,

அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப் படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

பிரியமானவர்களே நாம் யாதொரு வரத்திலும் குறையில்லாதவர்களாயிருக்க வேண்டும்.      ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் சகல வரத்தையும் உடையவராயிருக்கிற படியால், நாம் யாவரும் வரத்திலே தேறினவர்களாக இருக்க வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

I கொரிந்தியர்: 12:12

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

ஆதலால், எல்லா அவயங்களும் சேர்ந்தால் ஒரே சரீரமாயிருப்பது போல நாம் மணவாட்டி சபையானால் எல்லா கிருபை வரங்களும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.     மேலும்,

யாத்திராகமம்: 25:37 - 39

அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக;  அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது

அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.

அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.

இவ்விதமாக தேவன் மலையில் மோசேக்கு மாதிரியை காண்பிக்கிறார்.

ஏழு அகல்கள் என்றால் ஏழு விளக்கு,  அவை நேரெதிராயாய் எரியும் படிச் செய்கிறார்.      ஆனால்,  அதின் கத்திரிகளும் சாம்பல் கரண்டிகளும் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும் என்கிற காரியம் எல்லாம் நம் மணவாட்டியின் அனுபவத்தை காட்டுகிறது. கத்திரி மகிமையான தேவனுடைய வசனம்,  சாம்பல் கரண்டி என்பது தேவனுடைய வசனம்.

எப்படியென்றால் நம் உள்ளத்தில் ஏழு வித தோற்றங்கள் எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.      அந்த வெளிச்சம் மங்காத படியும் மங்கி எரிந்து அணைந்து போகாதபடி நாம் அதை காத்துக் கொள்ள வேண்டும்.

நீதிமொழிகள்: 6:23

கட்டளையே விளக்கு,  வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி.

இதற்கு காரணமென்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக மரித்து, பின் உயிர்த்தெழுந்து நமக்கு மாதிரி காட்டி, மீண்டும் தேற்றரவாளனாக நம் மத்தியில் வந்தார்.     அவருடைய ஏழு கட்டளைகள் என்னவென்றால் மனந்திரும்புதல்,  ஞானஸ்நானம், ஆவியின் அபிஷேகம் அக்கினியின் அபிஷேகம்,  அப்போஸ்தல ஊழியம், கர்த்தரின் பரிசுத்த பந்தி, பரிசுத்தவான்களின் சபை கூடுதல், விழித்திருந்து ஜெபம் பண்ணுதல் இவை ஏழு வித தோற்றங்கள் நம் தேவனிடத்திலிருந்து பிறந்த கட்டளை இந்த கட்டளையால் நாம் வேதத்தை அனுதினமும் தியானிக்கும் போது வானத்திலிருந்து நமக்கு வெளிச்சம் பிரகாசிக்கிறது.      இந்த ஏழு அகல்களின் வெளிச்சம் மகிமையாக நம் உள்ளத்தை நிறைக்கும் போது மகிமையின் ஊழியம் நம் உள்ளத்தில் நடைபெறுகிறது.      அப்போது கிறிஸ்து மகிமை அடைகிறார்.       ஆனால் இந்த வெளிச்சம் சில நேரத்தில் மங்கியெரியும் அதற்கு காரணம் நாம் பாவ, மோக, உலக ஆசை, இச்சை, இன்பம், பொருளாசையாகிய விக்கிரகராதனை இவற்றில் எது இருதயத்தில் தோன்றினாலும் இது மங்கி எரிய காரணமாகி விடும்  அதற்கு திருஷ்டாந்தப்படுத்துவதற்காக அகல்களும் கத்திரியும் என்று கூறப்படுவது கருந்திரி அகல்களில் எரிந்து கொண்டிருக்கும் போது அது பாவத்தை (நம் குறையைக் காட்டுகிறது) அதற்கு கத்திரி கருந்திரியை அகற்றி அதை,.   போட்டு வைப்பதற்கு சாம்பல் கரண்டி  வைக்கப்பட்டு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. என்னவென்றால் அப்பொழுதுள்ளதை உடனுக்குடன் அகற்றி விட்டால் தான் விளக்கு பற்றி எரியும்.

அதனால் நம்மில் கரிந்திரி வராமல் (உலகம்) காத்துக் கொள்ள வேண்டும்.      வந்தது என்று தெரிந்துவிட்டால் தேவனுடைய வசனத்தால் அதனை மாற்றிவிட வேண்டும்.

அவற்றைப் பற்றி தான் தேவன் சொல்கிறார்.

ஏசாயா: 42:3

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

பிரியமானவர்களே நம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வெளிப்பட்டால் கரிந்திரியை அகற்றி தேவனுடைய நியாயத்தை நம்மளில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்.     ஆனால் நாம் எப்போதும் அவர் பாதத்தில் இருந்து தேவ கட்டளை,  கற்பனை, நியாயங்கள் எல்லாவற்றின் படியும் நடக்க முன் வர வேண்டும்.    அவர் மங்கியெரிகிற திரியை அணையாதபடி நியாயத்தை நம்மளில் நிறைவேற்றும் படியாக நம்மை நியாயந்தீர்ப்பார்.     அது தான் போதக சிட்சையே ஜீவ வழி.      அவருடைய சிட்சை நமக்கு காணப்பட்டாலே நாம் ஜீவ வழியை சேரமுடியும்.

இவ்விதம் நம் உள்ளத்தில் உண்மையான காரியங்களை நடப்பித்தால் மாத்திரமே தேவன் காட்டுகிற வாசஸ்தலம் நமக்கு நிலை நிறுத்த முடியும்.      ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.         

-தொடர்ச்சி நாளை.