தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யோவான் 14:3

 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலூயா 

வாசஸ்தலம் - பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் கிருபா வரங்கள் திருஷ்டாந்தம் :

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் நம் தேவனுக்கு நம்மிடத்தில், அவர்  வாசம் பண்ணும் படியாக வாசஸ்தலம் அமைக்க வேண்டும் என்பதை மோசேயிடம் மலையில் வாசஸ்தலம் வைத்திருந்ததை மாதிரி காட்டி, அவ்விதம் வாசஸ்தலம் உண்டாயிருக்க வேண்டும் என்றும்,  அதற்கு மாதிரியையும் காண்பிக்கிறதையும் நாம் பார்க்கிறோம்.      அவர்  வாசம் பண்ணும் பரிசுத்த வாசஸ்தலம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தேவன் நமக்கு விளக்கிக் காட்டுவது,  நம்மளில் அந்த பரிசுத்த வாசஸ்தலம் அமைய வேண்டும் என்பதற்காகவே தேவன் திருஷ்டாந்தப்  படுத்துவது நாம் பார்க்கிறோம்.     அந்த வாசஸ்தலம் தான் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர் அதின் அமைப்புகளை  கழிந்த நாளில் சில காரியங்களை குறித்து நாம் தியானித்தோம்.  அதில் நாம் நம்மை எவ்விதம் சுத்திகரித்து கிறிஸ்துவை  ஆராதிக்க வேண்டும் என்று தேவன் நமக்கு திருஷ்டாந்தப் படுத்துகிறார். 

யாத்திராகமம் 25:31-33

பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்பு வேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். 

ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்.     குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். 

ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக. குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.

 பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட குத்து விளக்கு என்பது,  நம் உள்ளத்தில் எழும்பின சபையை  காட்டுகிறது.     ஆத்துமா, எவ்விதத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது அது அடிப்பு வேலையாய்  செய்யப்பட வேண்டும் என்பது, நம் ஆத்துமா அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரோடு  நம் பாவத்துக்காக அடிக்கப்பட்டு உடைத்து மரித்து மீண்டும் அது ஆவியில்  உயிர்ப்பிக்கப்  பட்டதாக இருக்கவேண்டும்.

 அதின் தண்டு என்று சொல்வது வசனம் மேலும் கற்பனை, தேவ வார்த்தை, கிருபை நியமங்கள், (கிளைகள், மொக்குகள் )  பழங்கள்,  பூக்கள் இவைகளால் நிறைந்ததால்  மகிமை வாசமாயிருக்கும் என்பதை காட்டுகிறார்  அன்பானவர்களே இதில் ஒன்றும் குறைவில்லாமல் நாம் காணப்படவேண்டும் ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விட வேண்டும் என்றால்; நம் ஆத்துமா உயிர்ப்பிக்கப்  பட,  மனந்திரும்புதல்,  ஞானஸ்நானம்,  ஆவியின் அபிஷேகம்,  அக்கினியின்  அபிஷேகம்,  கர்த்தருடைய பரிசுத்த பந்தி,  பரிசுத்தவான்களின் ஐக்கியதை, ஜெபம் பண்ணுதல் இந்த ஆறு நற்குணங்கள் நம் ஆத்துமாவோடே  எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும்.      அப்போது தான் நம் ஆத்துமா உலகத்தை ஜெயித்து பிரகாசிக்க முடியும்.      மேலும் குத்துவிளக்கின் மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், குத்து விளக்கின் மூன்று  கிளைகள் மறு பக்கத்திலும் விட வேண்டும் என்ற காரியம் என்னவென்றால் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று ஆவியின் அபிஷேகம் அடைவது ஒரே குறிக்கோளாக இருந்து பின்பு நாம் தேவ வசனத்தால் கிருபை பெற்றவர்களாகி பரிசுத்த பந்தியில் அமர்ந்து,  பரிசுத்தவான்களின் ஐக்கியதையில் காணப்படும் போது நம் ஆத்துமா எப்போதும் விழித்திருந்து ஜெபம் பண்ணுவதற்குரிய தகுதியை அடையும்.    இவ்விதம் மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், அடுத்த மூன்று கிளைகள் மறு பக்கத்திலும் விடவேண்டும்.     இவை  திருச்சபைக்கு (மணவாட்டி சபை) தெளிவாக  திருஷ்டாந்தப்படுத்துகிறார் . 

மேலும் ஒவ்வொரு கிளையிலே வாதுமை கொட்டைக்கு  ஒப்பான மூன்று மொக்குகளும்,  ஒரு பழமும்,  ஒரு பூவும் இருப்பதாக என்பது; ஒவ்வொரு ஆவிக்குரிய அனுபவத்திலும் திரியேக தேவன் தம்முடைய வார்த்தைகளை தீவிரமாய் நம்மில் நிறைவேற்றுவார் என்பதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  கிருபை அதின்  பழமாகவும்,  பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி பூவின் நற்கந்தம் வீசுகிறவராகவும் நம்மில் மகிமைப்  பொருந்தினவராக,  நம் ஆத்துமா ஒவ்வொரு நற்கிரியைகளை செய்யும் போது நாமும் இவ்வித சாயலாக மகிமை அடைவோம் என்பதை  திருஷ்டாந்தத்தோடு  காட்டுகிறார். 

விளக்கு தண்டிலோ,  வாதுமைக்  கொட்டைக்கு  ஒப்பான நாலு மொக்குகளும்,  பழங்களும்,  பூக்களும் இருப்பதாக என்பது நம் ஆத்துமா எப்போதும் கிறிஸ்துவின் கிருபையின்  சுவிசேஷ மாகிய நான்கு பகுதியை  தேவனுடைய வார்த்தையாக நாம் ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் புதுப்பிக்குதலை நாம் அடைய வேண்டும். 

யாத்திராகமம் 25:35

அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின் கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின் கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக.     விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும் 

பிரியமானவர்களே நாம் தியானிக்கும் போது நாம் கிறிஸ்துவின் கிளைகளாக நம் ஆத்துமா மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்துவின் கிருபை வரம் உண்டாயிருக்க வேண்டும்.

 மேலும் ஆவியின் அபிஷேகமும், அக்கினியின் அபிஷேகமும் பெற்று பரிசுத்த பந்தியில் பங்கு பெறும்போது,  கிறிஸ்துவின் கிருபைகள்,  வரங்களும் உண்டாயிருக்க வேண்டும்.

 அடுத்ததாக பரிசுத்தவான்களின் சபை கூடுதலிலும் ஜெபம் பண்ணுதலிலும்  தரித்திருக்கும்போது கிருபைகள் உண்டாயிருக்க வேண்டும்.

விளக்கு தண்டிலிருந்தும் ஆறு  கிளைகள் புறப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுயிருக்கிறது அந்த விளக்கு தண்டிலிருந்து புறப்படும் ஆறு  கிளைகளுக்கும் ஆறு கிருபா வரங்கள்  உண்டாயிருக்க வேண்டும். 

இவ்விதமாக ஒன்பது கிருபா வரங்கள்  நம் எல்லாருடைய ஆத்துமாவின் பலனாக  விளங்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் திருஷ்டாந்தப் படுத்துகிறார்.

என்னவென்றால் Iகொரிந்தியர் 12 - ஆம் அதிகாரம் ஞானத்தை போதிக்கும் வசனமும் அறிவை  உணர்த்தும் வசனமும், விசுவாசமும்,  குணமாக்கும் வரங்களும்,  அற்புதங்களை செய்யும் சக்தியும், தீர்க்கதரிசனம் உரைத்தலும்,  ஆவிகளை பகுத்தறிதலும், பற் பல பாஷைகளை  பேசுதலும், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும் இவை தேவன் அவருடைய ஆவியினால் நமக்கு தருகிற கிருபா வரங்கள்.       வையெல்லாம் ஆத்துமாவின்  பழங்கள் (கனிகள் ). 

யாத்திராகமம் 25:36

அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக.  அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். 

பிரியமானவர்களே இவ்வித கிருபா வரங்கள் எல்லாம் அடிக்கப்பட்ட மகிமையாகிய ஆட்டுக்குட்டியானவருடைய வசனத்தால் நிறைந்த கிருபையாக இருக்க வேண்டும் என்றும் நம் ஆத்துமா அவ்வித கிருபையோடு விளங்க வேண்டும் என்பதற்கு திருஷ்டாந்தத்தோடு விளங்குகிறார். 

யாத்திராகமம் 25:37, 38

அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக.     அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது. 

அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. 

பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட தேவனுடைய அருமையான வார்த்தைகள் நம் உள்ளத்தில் வந்து தங்கும்படியாக யாவரும் ஒப்புக்கொடுப்போம்.     ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                     

-தொடர்ச்சி நாளை.