தேவனுக்கே மகிமை யுண்டாவதாக
யோவான்: 14:18
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
வாசஸ்தலத்தின் மாதிரி காண்பித்தல் :- திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நமக்குள்ளாக தேவன் வாசஸ்தலம் எப்படி அமைக்க வேண்டும் என்பதை விளக்கி தெளிவான திருஷ்டாந்தாங்களோடு காட்டும் படியாக தேவன் மோசேயை சீனாய் மலையில் அழைத்து அங்கு மோசேயை தேவனுடைய மகிமையால் நிரப்பி, பின் ஜனங்கள் எவ்விதம் காணிக்கை தேவனுக்கு கொடுக்க வேண்டும். எப்படிப்பட்ட காணிக்கை கொடுக்க வேண்டுமென்று கூறிக்கொண்டு, பின்பு தேவன் வாசம் பண்ணும் படியாக எப்படி வாசஸ்தலம் அமைக்க வேண்டுமென்று மாதிரி காண்பிக்கிறதை பார்க்கிறோம்.
இவையெல்லாம் தேவன் நடப்பிப்பது காரணம் என்னவென்றால் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் மற்றும் நமக்குள்ள யாவற்றையும் (பொருட்கள்) தேவனுக்கு முழு மனதோடு உற்சாகமாய் ஒப்புக் கொடுத்து நம்மை தேவன் அவருடைய மகிமையால் நிறைத்து நம் உள்ளம் தேவ மகிமை அடைந்தால் அதில் தேவன் வந்து வாசம் பண்ணுவார்.
அந்த வாசஸ்தலமானது சித்தீம் மரத்தால் செய்யப்பட வேண்டும். அதை ஒரு பெட்டியாக செய்து பசும் பொன் தகட்டால் மூட வேண்டும். அதின் உட்புறமும் வெளிப்புறமும் மூட வேண்டும். அதில் நாலு பொன் வளையங்களை வார்பித்து ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும் படி செய்து சித்தீம் மரத்தால் தண்டுகளை செய்து அதை பொன் தட்டால் மூடி அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்ச வேண்டும்.
பசும் பொன்னினாலே கிருபாசனத்தை பண்ணுவாயாக, அது இரண்டரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கும்.
முதலில் செய்த பெட்டிக்குள்ளாக சாட்சி பிரமாணத்தை வைக்க வேண்டும். மேலும் பொன்னினால் இரண்டு கேருபீன்களை செய்வாயாக பொன்னை தகடாய் அடித்து, அவைகளை செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
கேருபீன்கள் ஒன்றை ஒரு புறத்திலும் மற்றதை மறுப் புறத்திலும் பண்ணி வைத்து அவைகள்,
யாத்திராகமம்: 25:20
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
கிருபாசனத்தைப் பெட்டியின் மீதே வைத்து, பெட்டிக்குள்ளே சாட்சிப்பிரமாணத்தை வைக்க வேண்டும்.
அங்கு நான் உன்னை சந்திப்பேன். கர்த்தர் மோசேயிடம் இவ்விதம் கூறுகிறது சித்தீம் மரத்தால் பெட்டி என்பது நம் ஆத்துமா ஆனால் அந்த பெட்டி தண்டுகள் சுமக்க வேண்டும் என்பது நாம் வசனத்தால் நடத்தப்பட வேண்டும். அந்த பெட்டிக்குள் நம் சாட்சிகள் காணப்பட வேண்டும் அந்த பெட்டிக்குள் பொன்னினால் கிருபாசனம் பண்ண வேண்டும் என்பது மகிமையாகிய கிறிஸ்து நமக்குள் பிரவேசிப்பது பெட்டியில் நாலு பொன் வளையங்கள் இயேசு கிறிஸ்துவின் நான்கு சுவிசேஷ பகுதிகள் நம் ஆத்துமாவில் பிரவேசிக்க வேண்டும். இரண்டு கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிர்முகமாய் இருந்து தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளாயிக்க வேண்டும். கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருக்க வேண்டும். கேருபீன்கள் என்பது பரிசுத்த தூதர்கள் எப்போதும் நமக்குள் துதியின் அனுபவத்தோடு காணப்பட வேண்டும்.
இவ்விதமாக நம் தேவனாகிய கர்த்தர் நமக்குள்ளாக பிரவேசித்து நாம் செய்ய வேண்டிய காரியங்களை நமக்கு கற்று தருகிறார் என்பதை மோசே மூலம் தேவன் தெளிவுபடுத்துகிறார்.
பின்பு சீத்திம் மரத்தால் மேஜையை பண்ணும் படியாக சொல்கிறார். இந்த மேஜையானது சமூகதப்பங்களை வைக்கும் இடம். இவையெல்லாம் ஒரு சபையின் அமைப்பாக இருந்தாலும் எல்லாம் நம் உள்ளத்தில் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை அதின் கருத்து.
மேஜையை சுமக்கும் தண்டும் சித்தீம் மரத்தால் செய்ய வேண்டும். தண்டானது மேஜையை சுமக்கப்பட வேண்டும்.
யாத்திராகமம்: 25:29
அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
மேஜை என்பது அப்பம் வைக்கும் இடம் அது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம். பின்பு பானபலிக்கான பாத்திரம் என்பது தேவ வசனத்தால் நாம் கிருபைப் பெற்றவர்களாக அதற்கு முன் வரவேண்டும்.
யாத்திராகமம்: 25:30 - 40
மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட வேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்து விளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின் கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத் தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
பிரியமானவர்களே நம் மணவாட்டி சபை நம் உள்ளத்தில் எவ்விதமான மகிமையாக காணப்படவேண்டும் என்பதில் விளக்கத்தை தான் தேவன் திருஷ்டாந்தபடுத்தி மலையில் அதை மோசேக்கு காண்பித்து அவைகளில் எச்சரிக்கையாயிரு என்று சொல்கிறார். நம் வாசஸ்தலம் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி தான். ஆதலால் நாம் எவ்விதம் கிருபையிலும், பரிசுத்தத்திலும், கனிகளிலும், மகிமையிலும் இருக்க வேண்டுமென்று தேவன் தெளிவுபடுத்துகிறார். ஆனால், இதன் விளக்கங்களை அடுத்த நாளில் தியானிப்போம். ஜெபிப்போம். ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.