வாசஸ்தலம் அமைத்தல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 11, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யோவான்: 14:2

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

வாசஸ்தலம் அமைத்தல்:- 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் வாசித்து தியானித்த வேதப் பகுதியில் நம் வாழ்க்கையை ஏன் அலைச்சலுக்கும், கொள்ளை நோய்க்கும் ஒப்புக் கொடுக்கப்படுகிறோம் என்பதின் கருத்தை நாம் தியானித்தோம்.       ஆனால் அதிலிருந்து நம்மை தப்பித்துக் கொள்ளும் படியாக, நம்முடைய முழு இருதயமும், தேவனுடைய வார்த்தைகளால் நிரப்பப்பட்டு,  அதற்குக் கீழ்ப்படிந்து தேவனோடு ஐக்கியப்பட்டு நடப்போமானால் நம்மை அலைச்சலுக்கும், கொள்ளைக்கும் ஒப்புக்கொடாத படி தேவன் பாதுகாப்பார்.

பிரியமானவர்களே கர்த்தர் மோசே,  ஆரோன் என்பவர்களை வைத்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வருகிறதை பார்க்கிறோம்.      பின்பு ஜனங்களை நல்ல பாதையில் நடத்தும் படியாக மோசேயை சீனாய் மலையில் மேல் கொண்டு போய் தேவ மகிமைக் கொடுத்து ஜனங்களிடத்தில் தேவன் அனுப்புகிறதை நாம் பார்க்கிறோம்.    இவை கர்த்தராகிய இயேசுவுக்கு தேவன் மகிமையை கொடுத்து அந்த மகிமையை தேவன் நமக்கு தந்து, நம்மை தேவனோடு ஐக்கியப்படுத்தி எல்லா அலைச்சல்களும், எல்லா கொள்ளையிலிருந்தும் தேவன் நம்மை தப்புவிக்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.     அதனால் தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,

யோவான்: 17:17-22

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத் தானே பரிசுத்தமாக்குகிறேன்.

நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது மல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே,  நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக,  நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

நாம் ஒன்றாயிருக்கிறது போல: அவர்களும் ஒன்றாயிருக்கும் படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

நாம் நம்மை பரிசுத்த வார்த்தையாகிய சத்தியத்தினால் பரிசுத்தப்படுத்தும் படியாகவே நம்மை கிறிஸ்துவினிடத்தில்  முழுமையாக ஒப்புக் கொடுத்தால் மாத்திரமே தேவனுடைய மகிமையை நாம் அடைய முடியும்.     அதற்காகவே தேவன் சீனாய் மலையில் வைத்து மோசேயை  மகிமையால் நிறைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

நம்மை பரிசுத்தப்படுத்தினால் மட்டுமே தேவனுக்கு நாம் கொடுக்கிற காணிக்கையை அங்கிகரிப்பார்.     அதனால் தான் இயேசு கிறிஸ்து,

மத்தேயு: 23:19

மதிகேடரே,  குருடரே!  எது முக்கியம்?  காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?

ஆதலால், பிரியமானவர்களே நம்முடைய கிறிஸ்து நமக்கு பலிபீடம் ,அந்த பலிபீடத்தில் நம்மை முழுமையான காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.     அப்படி ஒப்புக்கொடுத்து நாம் பரிசுத்தமாகும் போது, நம் இருதயம் அவருடைய பலிபீடமாக காணப்படுகிறது. அதனால் நம் இருதயத்தின் உள்ளிலிருந்து தான் நாம் தேவனுக்கு ஸ்தோத்திர பலியாகிய மகிமையை செலுத்துகிறோம்.     அதன் பிறகு தான் நமக்கு தேவன் தருகிற ஆசீர்வாதங்களில் முதற்பலனையும், தசமபாகத்தையும் மற்றும் நமக்குள் யாவற்றையும் தேவன் அங்கிகரிப்பார்.

பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டில் முதற்பலன் தசமபாகம் ஆனால் கிறிஸ்துவை தேவன் முழுமையாக தந்தத்தினால் அப்போஸ்தலர்கள் தங்களுக்குள்ள யாவற்றையும் கொண்டு, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்து எல்லாவற்றையும் பொதுவாய் அனுபவித்தார்கள்.     யாருக்கும் எந்தக் குறையும் வரவில்லை.

பிரியமானவர்களே பரிசுத்தமாகுதல் என்ன என்று நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.      தேவனிடத்திலிருந்து கிடைக்கும் பலன் பரிசுத்தமாகுதல் அப்படியானால் முடிவு நித்திய ஜீவனாயிருக்கும்.     அதைத்தான்,

யாத்திராகமம்: 25:1-8

கர்த்தர் மோசேயை நோக்கி:

இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வரும் படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.

நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும்,  வெள்ளியும்,  வெண்கலமும்,

இளநீலநூலும்,  இரத்தாம்பரநூலும்,  சிவப்புநூலும்,  மெல்லிய பஞ்சுநூலும்,  வெள்ளாட்டுமயிரும்,

சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும்,  தகசுத்தோலும்,  சீத்திம் மரமும்,

விளக்கெண்ணெயும்,  அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.

அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண,  எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.

இவ்விதமாக தேவன் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஸ்தலம் இருக்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் சொல்கிறதின் கருத்து என்னவென்றால் அவர் வாசம் பண்ணும் வாசஸ்தலம் இவ்வித தோற்றங்கள் உண்டாயிருக்க வேண்டும்.     இந்த தோற்றம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை இப்போது எழுதப்பட்டிருக்கிற தேவ வார்த்தை எல்லாம் அவருடைய மகிமையை காட்டுகிறது.     இது தான் பரிசுத்த ஸ்தலம் இவ்விதம் நம் உள்ளம் காணப்பட்டால் தேவன் நம் நடுவில் வந்து வாசம் பண்ணுவார்.   இதைத்தான் தேவன் வாசஸ்தலத்துக்கு மோசேயிடம் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.      இந்த வாசஸ்தலம் தேவனுடைய வசனத்தால் கட்ட வேண்டும்.     அவருடைய கட்டளை,  கற்பனை, நியாயப்பிரமாணம் எல்லாமே இந்த வாசஸ்தலம்.     அதனால் தான்,

யாத்திராகமம்: 25:9

நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டு முட்டுகளின் மாதிரியின் படியும் அதைச் செய்வீர்களாக.

பிரியமானவர்களே நம்முடைய வாசஸ்தலம் கிறிஸ்து அதனால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்விதம் பரிசுத்தமாக வாழ வேண்டுமென்று நம்மை நாமே சோதித்தறிந்து சத்தியமாகிய வசனத்துக்கு கீழ்ப்படிந்து பரிசுத்தமாகுவோம்.      அவருடைய சத்திய வசனம் நம்மை பரிசுத்தப்படுத்தும்  ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.    கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                                                                 

-தொடர்ச்சி நாளை.