தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ரோமர்: 8:13

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக.     ஆமென், அல்லேலூயா. 

நமக்கு அலைச்சலும், கொள்ளையும் வரக் காரணம்?  வராமல் பாதுகாப்பது எவ்விதம்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் தேவனுடைய நித்திய மகிமையை அடைய விடாதபடி நம்மை உலக இன்பங்களாகிய அசுத்தங்களால் நிறையபடுத்துகிற இரண்டு ஸ்திரீகளை குறித்து நாம் தியானித்தோம்.     அவர்கள் சீர்கெட்டுப் போன சீயோன் குமாரத்திகளாக நம் ஆத்மீக வாழ்க்கையை தேவனோடு கூட ஐக்கியப்பட விடாதபடி உலகமாகிய மோகங்களுக்குள் இழுத்துக் கொண்டு சென்று,  நம்மை சிக்க வைத்து பின்பு நாம் எழுந்திருக்க விடாதபடி நம் ஆத்மீக கண்களை அடைத்து, மீண்டும் நம்மை ஜென்ம தேசமாகிய கல்தேயாவில் கொண்டு போய் தேவ சாயலை (மகிமையை)  நஷ்டப்படுத்தி நம் ஆத்துமாவாகிய வீட்டை சிநேயார் தேசத்திலே (பாபிலோன் ) ஸ்தாபிக்கிறதை நாம் தியானித்தோம்.

ஆனால் நாமோ நம்மை ஒவ்வொரு நாளும் சீர்திருத்தி நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவனுக்குள் மறைந்து இருந்து எந்த பாடுகள் வந்தாலும் அதனை பொறுத்து, சகித்து நம்மை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி, நாம் தேவனுக்குள் நிலை நிற்கும் படியாக நம்மை தாழ்த்தி அனுதினம் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, தேவ சாயலை இழந்து போகாதபடி காத்துக் கொண்டு மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபப்பட்டு கொண்டிருக்க வேண்டும்.

இவ்விதமாக நம்மை நடத்திச் செல்லும் படியாக தான் தேவன் மோசேயை சீனாய் மலையில் மேல் அழைத்தார்.      அப்பொழுது மோசே மலையின் மேல் ஏறி சென்றான்.     கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின் மேல் இறங்கியது.       அதனால் தான் தேவன் சீனாய் மலையாகிய கிறிஸ்து மூலம் தேவ மகிமையை அடையச் செய்கிறார்.     இதற்கிடையில் எந்த ஸ்திரீகளுக்கும் நம் பெலன் கொடுக்காத படி (அகோலாள், அகோலிபாள், ஆசை, இச்சை) நம் பெலனை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.     இந்த காரியத்தில் நம் உள்ளம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் விழுந்து விடுவோம்.     ஏனென்றால் தேவனுடைய வார்த்தை,

நீதிமொழிகள்: 30:12-16

தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.

வேறொரு சந்ததியாருமுண்டு;  அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.

தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப் பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.

தா,  தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு,  போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

அவையாவன: பாதாளமும்,  மலட்டுக் கர்ப்பமும்,  தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.

பிரியமானவர்களே முன்கூறிய தேவனுடைய வார்த்தையானது நாம் முழுமையும் பின்பற்ற வேண்டிய காரியங்களை நம் உள்ளத்திலிருந்து மாற்றி விடாமல் நம்மை முழுமையும் அழுக்கற  சுத்திகரியாமல் இருந்துக் கொண்டு தன்னை சுத்தம் என்று எண்ணிக் கொள்கிறவர்கள் உண்டு என்றும்,

ஆனால் அவர்களுக்குள் வேறொரு சந்ததியுண்டு, அந்த சந்ததி மேட்டிமையான கண்களும், நெறிப்புமான இமைகள் இவைகள் வலுசர்ப்பம் இவர்களுக்குள்ளுண்டு.     ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் சரியாக அழுக்கற சுத்தம் செய்து கழுவப்படாமலிருக்கிறவர்கள். 

மேலும் நம்மை வஞ்சிக்கிற ஆவிகள் யாரை வஞ்சிக்கிறது என்றால் சிறுமையானவர்களையும்,  எளிமையானவர்களையும் வஞ்சிக்கிறது.    வஞ்சித்து பலவிதத்தில் ஆத்துமாவை பட்சிக்கும் படியாக பட்சிப்பதற்கு கட்கங்களையொத்த பற்களையும், கடைவாய் பற்களுள்ள சந்ததியாராக நம் உள்ளத்தில் உண்டு என்று  எழுதப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக  தா, தா என்ற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு.     இவை இரண்டு ஸ்திரீகள் நம் உள்ளத்தில் மரக்காலை (உலகம்) தூக்கிச் செல்கிறார்கள்.      என்னவென்றால் தா, தா என்று சொல்லப்படுவது எத்தனை உலக ஆடம்பரங்கள், ஆசை, மோக சிற்றின்பங்கள் இருந்தாலும் அதற்குப் போதாது.     மீண்டும் மீண்டும் உள்ளத்தை தூண்டிக் கொண்டு தா, தா இன்னும் பல இன்பங்களும் வேண்டும் என்று உள்ளத்தை வஞ்சித்து கேட்டுக் கொண்டிருக்கும்.     அதைத்தான் தேவனுடைய வார்த்தை இவளை விட (சமாரியா) - வை அவள் தங்கை எருசலேம் சீர் கெட்டுப் போனாள்.     அதனால் தேவன் அவர்களை விட்டு விட்டு போய் விடுகிறார்.

பின்பு கர்த்தர் இவ்விதமாக நடக்கிறவர்ளுக்கு ஒரு பெரிய நியாயத்தீர்ப்பை கொடுக்கிறார்.     இதன் அர்த்தம்

 எசேக்கியேல் 23 ம் அதிகாரம் பரிசுத்த ஆவியோடு நிறைந்தவர்களாக நீங்கள் தியானித்தால் உங்களுக்குப் புரியலாம்.

எசேக்கியேல்: 23:36

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே,  நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

இவ்விதமாக ஆத்துமாவினிடத்தில் ஒவ்வொருவரும் செய்கிற முறைகேட்டை எடுத்துச் சொல்ல சொல்கிறார்.

எசேக்கியேல்: 23:38

அன்றியும் அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி,  என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

இதுவுமல்லாமல்,  தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து,  உன் கண்களில் மையிட்டுக் கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

இவ்விதமாக எல்லாருடைய உள்ளங்களும் (சபையின் அனைவரும்) தீட்டுப்பட்டு விட்டது என்னவென்றால், பரிசுத்த ஸ்தலம் என்று சொல்லும் போது தேவனுடைய வசனமாகிய கிறிஸ்து பிரவேசிக்கிற நம் இருதயம், ஓய்வு நாள் என்று சொல்லும் போது அது கிறிஸ்து ,அவ்விதம் எல்லா உள்ளங்களும் பரிசுத்த குலைச்சலாக்கினார்கள்.

அதனால்  தேவன் சொல்கிறார்,

எசேக்கியேல்: 23:39

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்ட பின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

பிரியமானவர்களே இவைகளிலெல்லாம் நம் சரீரம் ஆலயம் அது தீட்டுப்படுவதும், சரீரம் விக்கிரகங்களாலும் நிறையப்படுவதை தேவன் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மூலமாய்க் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

எசேக்கியேல்: 23: 40,41

இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக் கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்து கொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது; உன் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும்  அதின்மேல் வைத்தாய்.

இவ்விதமாக தேவனுடைய பீடத்தை நம்மை அலங்கரிக்கிற அலங்காரத்தால் அசுசிபடுத்தினதால்,

எசேக்கியேல்: 23:45,46

ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும் நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

அதனால் பிரியமானவர்களே நம் அலைச்சல்கள் கர்த்தர் மாற்றும் படியாகவும், மேலும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடாத படிக்கும் நம் இருதயம் முழுமையும் பரிசுத்த வார்த்தைகளால் நிரப்பப்பட வேண்டும்.     யாவரும் ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.      கர்த்தர் யாவரையும்  ஆசீர்வதிப்பார்.                   

 -தொடர்ச்சி நாளை.