தேவனுக்கே மகிமையுண்டாவதாக
I பேதுரு: 5:10,11
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
அகோலிபாள் - எருசலேம் (சீர் கெட்ட சீயோன் குமாரத்தி) புதிய எருசலேம் (நித்திய மகிமை):
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் எல்லோரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகிதர்களாக மாற வேண்டும். அவர் எப்படி நம்மை அவருடைய சிநேகிதனாக மாற்றுகிறார் என்றெல்லாம் தியானித்தோம். மேலும் அவரோடே சேர்ந்து இருந்து நல்ல கனி கொடுக்கிற பிள்ளைகளாக இருக்க வேண்டும். நல்ல கனி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டுமானால் நாம் எப்போதும் அவரோடு நிலைத்திருக்க வேண்டும்.
ஆனால் புறஜாதிகளின் கிரியைகளாக உலக கிரியைகள் (சிற்றின்பம், மோகம், பாவ இச்சை, மாம்ச இச்சை, கண்களின் இச்சை இவ்வித அலங்காரங்கள் ) காணப்படுமானால் நம் மணவாட்டி சபை பரிசுத்த ஆவியானவர் வந்து தங்குகிற நம் ஆத்துமா அகோலாள் சபை என்றும் எழுதப்பட்டிருக்கிறது . இது பாராம்பரிய பாவ வாழ்க்கையை காட்டுகிறது. இவ்விதம் வாழ்ந்தால் மனுஷர்களுக்கு முன்பாக கீர்த்தியுள்ளவர்களாக இருக்கலாம் . ஆனால் தேவனுக்கு முன்பாக நிர்வாணிகளாக இருக்கிறோம் என்பதை தேவன் நமக்கு வசனத்தில் கூட அழகாக விளக்கிக் காட்டுகிறார்.
அதன்பிறகு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வசனத்தின் மூலம் ஐக்கியப்பட்டு மனம் திரும்பி நம்மை புதுப்பித்துக் கொள்கிற வாழ்க்கைக்குள் அநேகர் வருகிறார். ஆனால், அநேகர் புதுப்பிக்கப்பட்டும் தாங்கள் நின்ற அதே சபையிலே அல்லது ஆலயங்களிலே நின்று தேவனை ஆராதிக்கிறோம். சில உபதேசங்கள் கேட்கும் போது அதற்கும் ஆமென் என்றும் சொல்கிறோம். .ஆனால் சில சத்தியம் உள்ளில் தேவன் நம்மை தொடும் போது நிற்கிற இடம் சரியில்லை என்று தெரிந்தும் மனுஷர்களை பிரியப்படுத்த வேண்டும் என்ற மோகத்தால் அதனுள் நின்று கொண்டு தேவனை மகிமைப்படுத்தி அபிஷேகம் பெற்று ஆராதிக்கிறோம். அவ்விதம் அநேகம் பேருடைய வாழ்க்கையில் ஆத்துமா தவறான பாதையில் போகிறது என்று தெரியாதபடி அந்த அக்கிரமகாரி உள்ளத்தை வஞ்சித்து விடுகிறாள். இவ்விதம் நிற்கிறவர்களின் நிலைமை தான் வானத்துக்கும், பூமிக்கும் நடுவாக மரக்கால் தூக்கி வரப்பட்டது. மரக்காலின் உள்ளால் அக்கிரமகாரி ஆனால் தூக்கியது அகோலாள், அகோலிபாள். அவர்கள் நித்திய வீட்டை காண முடியாதபடி அவர்கள் வீடு சிநெயார் தேசத்திலே ஸ்தாபிக்கப்படுகிறது.
மேலும் நாம் தியானிக்கிற வேதவசனம் அகோலிபாளை குறித்து ,இதுவும் சபையை காட்டுகிறது. அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்று பொருள்.
சமாரியாவை விட அகோலிபாள் சீர் கெட்டவளாயிருக்கிறாள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
சபை என்று சொன்னாலே குறிப்பாக நம் ஒவ்வொருவரின் ஆத்துமாவை காட்டுகிறது. நம்முடைய மனவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர் தங்க வேண்டிய ஸ்தலத்தில் சமாரியாவின் கிரியை (புறஜாதியின்) காட்டிலும் மோசமான கிரியை உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
இவர்கள் யாரென்று சொன்னால் நாங்கள் எருசலேம் என்று சொல்வார்கள் வாழ்க்கையில் ஞானஸ்தானம் எடுப்பார்கள். ஆனால் சில பேர் ஆபரணங்களை மாற்ற மாட்டார்கள். தேவன் சீ என்று அருவருக்கிற பொன்னும், வெள்ளியும் இருதய இச்சையிலிருந்து மாற்ற மாட்டார்கள். தங்களை அதனால் அலங்கரித்து, பட்டாடைகளால் சிங்காரித்து நடப்பார்கள். ஆனால் ஞானஸ்நானம் பெற்று ஆராதிப்பார்கள்.
மேலும் அடுத்ததாக அநேகம் பேர் ஞானஸ்தானம் பெற்று பொன், வெள்ளி ஆபரணங்கள் இவைகளை விட்டுவிட்டு, மற்றபடி தங்கள் இச்சைக்கேற்ற இன்பங்களுக்காக அலங்கரிப்பார்கள். இவர்களை அகோலாளுடைய தங்கை அகோலிபாள் என்றும் எருசலேம் அதன் பொருள் என்றும் தேவன் சொல்லுகிறார்.
பிரியமானவர்களே இவ்விதமாக ஜனங்கள் தங்களை கொடுத்துக் கொள்வார்கள். இவர்கள் கெட்டுப் போவதற்கு காரணம் தேவனுடைய தாசன், தாசிமார்கள். ஏனென்றால் ஆதாயத்திற்காக சத்தியத்தை சில பேர் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் சில பேருக்கு கண்கள் குருடாக இருக்கிறதால் சத்தியம் வெளிப்படாமல் இருக்கும். ஆனால் அவர்கள் நினைத்துக் கொள்வது தாங்கள் சத்தியத்தில் நடக்கிறோம் ஜனங்களை சத்தியத்தில் நடத்துகிறோம் என்றெல்லாம் தங்களுக்குள் தப்பான எண்ணம் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் சத்தியம் ஏற்றுக் கொள்ளாததினால் தேவன் அவர்களுக்குள் கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார்.
அப்படி அவர்களை ஆக்கினைக்குட்படுத்துகிறார்கள் சத்தியம் ஏற்றுக் கொள்கிறவர்களை அவர் நேசித்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்.
இவ்விதம் சமாரியா, எருசலேம் ஏமாற்றப்பட்டவர்களாக வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கிறார்கள் அவர்களை குறித்து,
எசேக்கியேல்: 23:11-15
அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று.
மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீப தேசத்தாராகிய அசீரிய புத்திரர் மேல் மோகங்கொண்டாள்.
அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன்.
அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள்.
அவர்கள் எல்லாரும் தங்கள் ஜென்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.
பிரியமானவர்களை இவ்விதமாக எருசலேம் ஜனங்கள் தங்கள் அதிகமாக அலங்கரிக்கிறதை குறித்து இவர்கள் ஏறுகிற குதிரை அசீரிய புத்திரர் (மோகம்). அதனால் தங்களை அசுத்தமாக்குகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒரே வழியில் போனார்கள் இவர்கள் இரண்டு பேரும் தான் மரக்காலை தூக்கியவர்கள்.
இவர்களுடைய கிரியைகள் கண்களுக்கு மை போடுதல், வாசனை பொருட்களை உபயோகித்தல் தலை மயிருக்கு சாயந்தீர்த்தல் இன்னும் பல அலங்காரங்களை செய்து தங்கள் ஜென்ம பிறப்பில் (கல்தேயரின் பாபிலோன்) சாயல் ஆகி விடுகிறார்கள்.
எசேக்கியேல்: 23:17,18
அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப் பட்டுப் போன பின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.
இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.
பிரியமானவர்களே வசனங்களை நன்றாக வாசித்து தியானியுங்கள். வேசித்தனம் என்பது ஆடை, ஆபரணங்களால் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிப்பது. இவ்விதமான அலங்கரிப்புகளை தேவன் வெறுத்து அவர்களை விட்டு தேவன் பிரித்து போகிறார். ஆனால் இவ்விதமாக வாழ்பவர்களுடைய ராஜா, அசீரியன் என்று எழுதப்பட்டிருக்கிறது. அடுத்து அவர்கள் பாபிலோன் ராஜாவினிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படுகிறார்கள்.
இவையெல்லாம் நம் கிறிஸ்தவ ஜீவியம் எப்படி கிறிஸ்துவோடு மாத்திரம் ஐக்கியப்பட்டால் நித்திய மகிமையாகிய கிறிஸ்து நம்மளில் மகிமை படுவார். இதற்காக தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தரிசனத்தோடு பேசுகிறார். யாவரும் கிறிஸ்துவோடு மாத்திரம் ஐக்கியப்பட ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம் . கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.