தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான்: 15:8
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
கிறிஸ்துவின் சிநேகிதர்களாயிருப்போம்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம்மை தேவனுடைய வீடாகிய மகிமையால் நிறைய விடாதபடி நம்மை உலக இன்பங்களால் மூழ்க வைக்கிற அக்கிரமகாரியின் செயல்பாடுகளையும் அதில் புறஜாதிகளின் கிரியை (அகோலாள்) சமாரியா என்பதையும் என்பதையும் அவள் நிர்வாணியாகிய மணவாட்டி என்பதையும் தியானித்தோம். அதின் விளக்கங்கள் எப்படியெனில் நம்முடைய ஆத்துமா மோகங் கொள்கிறதை குறித்து,
எசேக்கியேல்: 23:9, 10
ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் கீர்த்தியுள்ளவளானாள்.
பிரியமானவர்களே நம் ஆத்துமா கிறிஸ்துவை விட்டு வேறு எந்த உலக காரியங்களை சிநேகித்தால் அந்த சிநேகத்தில் மோகங் கொண்டு நம் ஆத்துமா தேவனுடைய பட்டயத்தினால் கொல்லப்படும். எப்படியெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,
மத்தேயு: 10:26-31
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளிலே பிரசித்தம் பண்ணுங்கள்.
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
முன் எழுதப்பட்ட தேவ வசனத்தை நாம் தியானிக்கும் போது நாம் யாரை சிநேகிக்க வேண்டும் நம்முடைய சிநேகிதன் யார்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை நாம் மறந்து வேறு எதையாவது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சிநேகித்தால் தேவன் சொல்கிறார் உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை அதனால் தேவன் அவ்விதம் வாழ்பவர்களின் ஆத்துமாவை பட்டயமாகிய வசனத்தினால் கொல்லுகிறார். அவ்விதம் அநேகருடைய ஆத்துமா கொலைச் செய்யப்பட்ட நிலையில் உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தேவனுடைய வார்த்தை நீ உயிரோடிருந்தாலும் செத்தவனாருக்கிறாய் அதைத்தான்,
I தீமோத்தேயு: 5:6
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
பிரசங்கி: 9 : 3 , 4
எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங் கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
நாம் தேவனோடு உடன்படிக்கை எடுத்துவிட்டு நம் உலக சிற்றின்பங்களில் சிக்கி நம்முடைய ஆத்துமா செத்து இருக்கிறதை காட்டிலும் நாம் உடன்படிக்கை எடுக்காமல் இருப்பது நல்லது.
ஏனென்றால் நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவனை விட்டு தூரம்போய் விடுவோமானால் நம் அக்கிரமத்தை நம் மேல் சுமத்தி நம்மேல் பன்மடங்காக நம்மை தீமைக்குள்ளாக நடத்தி உக்கிரக கோபத்தோடு நம் உள்ளில் வெளிப்படுவார்.
மேலும் நியாயத்தீர்க்கப்பட்டு கொண்டிருப்போம்.
II பேதுரு: 2:20-22
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
பிரியமானவர்களே நாம் எந்த சூழ்நிலையிலும் தேவனை விட்டு தூரம் போகாமல் யார் எதை சொன்னாலும், அதற்கு பயப்படாமல் எப்போதும் தேவ சத்தத்திற்க்கு கீழ்ப்படிந்து நம் நிலைமை மோசமாய் போகாதபடி ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்.
ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
யோவான்: 15:13-15
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
இவ்விதமாக கிறிஸ்து நம்மை சிநேகிதராக ஆக்கி விட்டதால் வேறு எந்த ஒரு உலக சிநேத்துக்கு இடம் கொடுப்பதை தேவன் விரும்புவதில்லை. அவ்விதம் நாம் வேறு சிநேகம் எதுவாகிலும் நம் உள்ளத்தில் வைத்தால் அந்த மோகத்துள்ளாக சிக்கி நம்மை நிர்வாணிகளாக மாற்றிவிட தம்முடைய கோபத்தோடு புறஜாதியாகிய அசீரியனிடத்தில் ஒப்படைக்கிறார். பின் பலவானுடைய கையில் ஒப்படைக்கப்படுகிறோம். மேலும் உலக அலங்காரத்தால் மற்றவர்களின் பார்வைக்கு கீர்த்தியாகிறோம். ஆனால் தேவனின் பார்வையில் நிர்வாணிகளாயிருக்கிறோம். இவ்விதம் நிர்வாணிகளாக இராதபடிக்கு,தேவனுக்கு சிநேகிதனாக நாம் யாவரும் மாறி நாம் நல்ல கனிகளை கொடுக்கும் படியாகவும் நம்முடைய கனிகள் தேவனில் நிலைத்திருக்கும் படியாகவும் ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார். -தொடர்ச்சி நாளை.