அகோலாள்: சமாரியா புற ஜாதியின் கிரியை:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 07, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

வெளிப்படுத்தல்: 16:15

இதோ, திருடனைப்போல் வருகிறேன்.     தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலூயா.

அகோலாள்: சமாரியா புற ஜாதியின் கிரியை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் கிறிஸ்துவின் கரத்தில் எப்படிப் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்றும், உலகம் நம் உள்ளத்தில் இருந்தால் அக்கிரமக்காரி குடியிருந்து அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை  நாம் செய்யும் படியாக நம்மை தூண்டிக் கொண்டிருப்பாள் என்றும், அவள் கிரியையோவென்றால் சிநேயார் தேசம் (பாபிலோன்) அங்கு வீட்டை ஸ்தாபித்து விடுவாள் என்றும், தேவனுடைய வீடாகிய மகிமையால் நாம் நிரப்புவதற்கு தடையாக இருப்பாள் என்றும் தியானித்தோம். அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் அவள் கையில் சிக்கிக் கொள்ளாதபடி கிறிஸ்துவின் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க நாம் தியானித்தோம்.

பிரியமானவர்களே இதனை வாசிக்கிற தேவனுடைய ஜனமே, நீங்கள் எல்லோரும் இதனை வாசித்து தங்களை சோதித்தறிந்து மனந்திரும்பி புதுப்பிக்கப்பட்டு இருப்பீர்கள் என்று கர்த்தருக்குள் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறோம்.     அவ்விதம் நீங்கள் செய்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாருப்பீர்கள்.

மேலும் உலகம் (பாரம்பரியம், கலாச்சாரம், உலக வழிபாடு, மாம்ச கிரியை, மாம்ச இச்சை, கண்களின் இச்சை, இருதய சிந்தனையில் இச்சை, பாவ மோகம்) பிசாசின் கிரியை இவைகளையெல்லாம் விட்டு விட்டு கிறிஸ்துவோடு அவருடைய   புது  உடன்படிக்கையாகிய இரத்தத்தால் நாம் இருந்தோமானால் அவருக்கேற்ற ஆவிக்குரிய பிரகாரம் தேவ வசனத்திற்கும், அவருடைய கட்டளை, கற்பனை, நியமங்கள், நியாயப் பிரமாணங்கள் இவற்றிற்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாக நாம் மாற வேண்டும்.   

மேலும் கழிந்த நாளில் நாம் தியானித்த பகுதியில் மரக்காலை வானத்துக்கும், பூமிக்கும் இடையே இரண்டு ஸ்திரீகள் தூக்கிக் கொண்டு போகிறதை நாம் பார்க்கிறோம் அந்த மரக்கால் என்பது நம் ஆத்துமாவை குறித்தும், அதின் அக்கிரம கிரியைகளை குறித்தும், தேவன் அதின் மேல் எவ்வளவு கோபத்தோடு இருக்கிறார் என்பதும், அது சிநேயார் தேசத்திற்கு விடப் படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமான காரியமாயிருக்கிறது.

இந்த இரண்டு ஸ்திரீகள் சபையை காட்டுகிறார்.     கிறிஸ்துவின் பிள்ளைகளை தேவன் மணவாட்டி சபையாக்கினது போல உலக செயல்களால் அக்கிரம கிரியைகளை செய்தவர்களுடைய பாரம்பரிய சபை (மணவாட்டி சபை) அகோலாள், அகோலிபாள் இவை இரண்டும் சமாரியா, எருசலேம் இவைகள் மாம்ச கிரியைகளுள்ள துர்கிரியைகள் செய்கிறவர்கள் இவர்கள் தேவனுடைய வார்த்தைகளை தான் சொல்வார்கள் ஆனால் அதன்படி செயல்படாமல் அந்நிய தேவதைகளின் காரியங்களை செய்வார்கள்.     அவர்களை குறித்து தேவன் சொல்வது,

எசேக்கியேல்: 23:5-9

அகோலாள் என்னுடையவளாயிருக்கும் போது சோரம்போனாள்.

நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின் மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீப தேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர் மேல் அவள் மோகித்து,

அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.

ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.

பிரியமானவர்களே அகோலாள் என்பது  சமாரியா என்றும் சமாரியா புறஜாதிகள் என்பது நம் ஆத்துமாவின் மணவாட்டி சபையில் புறஜாதிகளின் கிரியைகள் இருப்பதையும், முதலில் இரட்சிக்கப்பட்டவுடன் தேவனோடே ஒப்புரவாகி ஐக்கியபட்டிருந்த நாம் ஏதோ நம் உள்ளத்தின் கிரியைகள் பொல்லாங்குள்ளதும் விஷம் நிறைந்ததுவாக இருந்ததினால் அவர்கள் ஆவி, ஆத்தும , சரீரம்  முழுமையும்  ஒப்பு கொடுக்காமல்  இருக்கிறதினால்   தேவன் வலுசர்ப்பம், மிருகம் அழிக்காமல் நாம் கிறிஸ்துவின் இரத்தத்தோடு உடன்படிக்கை எடுத்ததினால் நம் வாழ்வில் ஏதாவது சூழ்நிலைகள் மற்றும் பாரம்பரிய தொடர்பான காரியங்களோ வந்து விட்டால் தேவ வசனமும், அதின் சத்தியமும் நம் உள்ளத்தில் தோன்ற விடாதபடி வலுசர்ப்பம் மிருகம் நம்மை வஞ்சித்து, நிர்விசாரப்படுத்தி கொண்டு நாம் விட்டு வந்த எகிப்தை, சொல்லப் போனால் பாவ  பாரம்பரிய பழக்கத்தில் ஏதோ மனுஷரை பிரியப்படுத்த வேண்டுமென்று நினைத்து  இல்லாவிட்டால் நம் ஆசைகளை நிறைவேற்றும் படியாக போய் விடுகிறோம்.     அதனால் தான் கர்த்தர் சொல்கிறார் அகோலாள் என்னுடையவாளாயிருக்கும்போதே சோரம் போனாள்.     அதனால் அதோடு தொடர்புடைய அசீரியன் கையிலே அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே நான் அவளை ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்கிறார்.

என்னவென்றால் கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியோடு சொன்ன வார்த்தை என்னவென்றால்,

எசேக்கியேல்: 31:2,3

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக் கொழுந்து உயர்ந்திருந்தது.

நாம் எகிப்தின் கிரியைகளை செய்வோமானால் தேவன் நம்மை அசீரியன் கையில் ஒப்புக்கொடுத்தால் அசீரியன் எவ்விதத்தில் உலகத்தில் வளருகிறான் உலக அலங்காரங்களோடு வளருகிறதினால் அநேக ஜாதிகள் அதின் நிழலிலே குடியிருக்கிறார்கள்.     எல்லா ஜனங்களும் அதின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள்.     அவ்விதம் திரளான ஜனக்கூட்டங்கள் அவன் ஜனங்களாயின.

எசேக்கியேல்: 31:7,8                                                                                                       

அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.

தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக் கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.

பிரியமானவர்களே கேதுரு மரம், தேவதாரு விருட்சம், அர்மேன் இவையெல்லாம் ஆத்துமாக்களை காட்டுகிறது இவைகள் எல்லாம் அலங்காரத்தோடு வளர்ந்து வருகிறது.     ஆனால் ஏதேனின் விருட்சங்கள் ஒன்று இதற்கு நிகரல்ல அதனால் ஏதேனின் விருட்சங்கள் அவைகள் மேல் பொறாமை கொள்கிறது.

எசேக்கியேல்: 31:10,11

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக் கிளையை ஓங்க விட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்து போனபடியினாலும்,

நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.

பிரியமானவர்களே ஜாதிகளின் மகா வல்லமையுள்ளவன் பாபிலோனியன் அவன் கையில் ஒப்புக்கொடுத்து அகோலாள் நிர்வாணமாகி விடுகிறாள் தேவன் அவளை நிர்வாணமாக்குகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் உலக அலங்காரம், இச்சை, மோகம் கொள்பவர்கள் இவையெல்லாம் நிர்வாணிகள் மரக்காலை தூக்கி எடுக்கிறவள் நிர்வாணியாக இருக்கும் போது மரக்காலாகிய உலகம் உள்ளவர்கள் நிர்வாணிகள்.     ஆனால் நம் நிர்வாணம் காணப்படாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.     ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                     

-தொடர்ச்சி நாளை.