பரிசுத்தமான பாத்திரம்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 06, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

II தீமோத்தேயு: 2:21

ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

பரிசுத்தமான பாத்திரம்:-


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதிகளில் நாம் தேவனுடைய வீடாகிய நித்திய மகிமையால் நிறைய விடாதபடி நம்மை பல பாவ பழக்க வழக்கங்கள், உலக செயல்பாடுகள், பாரம்பரியம், கலாசாரம், இவைகள் முதலிய அநேக பொல்லாங்கான கிரியைகளை செய்ய வைக்கிற அக்கிரமகாரி மரக்காலின் நடுவே உட்கார்ந்து இருப்பதையும் அந்த மரக்கால் ஆனது நம் உள்ளத்தில் இருக்கிற உலகம் என்பதையும் மேலும்  தேவனுடைய சத்தியத்தை கேட்டும் சத்தியத்துக்கு கீழ்ப்படிந்து செயல்பட விடாதபடி,  நம் இருதயத்தை பலவித மோக இச்சைகளால் கவர்ச்சித்து நம் ஆத்துமாவாகிய தேவனுடைய பாத்திரமானது உக்கிரமான மதுவால் நிறையப்பட்டு, அது பாபிலோனிய ஸ்திரீயிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படுவதையும் அந்த மரக்காலில் உட்கார்ந்திருக்கிறவளுடைய வாயில் ஈயக்கட்டியை போட்டு ஈயமூடிக்கொண்டு அடைத்து விடுகிறதையும் தியானித்தோம்.     இவள் தான் தேவனுடைய வீடாகிய மகிமையால் நம்மை நிறைய விடாதபடி தடை செய்கிற பொல்லாத விபசார ஸ்திரீ.     அவற்றைப் பற்றிதான்,

சங்கீதம்: 69:21-28

என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.

அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.

உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.

தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.

பிரியமானவர்களே சங்கீதகாரனாகிய தாவீது எழுதின தேவனுடைய வார்த்தையாகிய பாட்டு என்னவெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வசிக்கும் போது நாம் சத்தியம் மீறி வார்த்தைகளை புரட்டிக்கொண்டு கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறோம்.     அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெபிக்கிற விண்ணப்பம் நாம் அக்கிரம செயல்கள் செய்து கொண்டிருக்கும் போது அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை சுமத்தும் என்றும் அவர்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டு போவதாக என்றும் விண்ணப்பிக்கிறதை நாம் பார்க்கிறோம்.     நாம் சத்தியம் உட்கொள்ளாமல் இருந்தால் நாம் எடுக்கிற பந்தி கிறிஸ்துவுக்கு கசப்பு கலந்த காடியாக இருக்கிறது.     அந்த பந்தி நமக்கு கண்ணியாகி விடுகிறது.

அதனால் தேவ ஜனங்கள் எல்லோரும் மனுஷரை பிரியப்படுத்தாதபடி, தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யும் படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.     நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்.

பிரியமானவர்களே நம்மளில் அநேகம் பேர் நாங்கள் கிறிஸ்தவர்களாகயிருக்கிறோம் கிறிஸ்துவினால் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறோம் நாம் அபிஷேகம் பெற்றிருக்கிறோம் எல்லோரும் நினைக்கிற ஒரு நினைவை இப்பொழுது உங்கள் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன்; என்னவெனில் அவரவர் செய்கிற தவறுகளை முதலில் சிந்திக்க மாட்டோம் மற்றவர்கள் குற்றங்களை சுட்டிக்காட்டுவோம்.     அது போல் தங்களில் இருக்கிற கிருபையாகிய அபிஷேகம் சுத்தமாயிருக்கிறதா என்று நினைக்காமல் மற்றவர்கள் பெற்ற அபிஷேகத்தை ஆராய்ந்தறிந்து கொண்டு சீக்கிரத்தில் அசுத்த ஆவி என்று சொல்லி விடுகிறோம்.

பிரியமானவர்களே முதலில் நம் பாத்திரமும் பாத்திரத்தில் இருக்கிற ஜீவ தண்ணீராகிய அபிஷேகமும் எப்படியிருக்கிறது என்று நம்மை நாம் அலசி, சுத்தம் செய்து, அந்தப் பாத்திரம் கிறிஸ்துவின் கரத்திலிருக்கிற பான பாத்திரமா என்று சிந்தித்து  நம்மை நாம் சோதித்துக் நம்மை புதுப்பித்து புதியதாகி கொண்டேயிருப்போமானால் தேவனுக்கு பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பளப்பளப்பான பாத்திரம் போல் தேவ சமூகத்தில் பிரகாசிப்போம்.

இதன் பொருளை வாசிக்கிற யாவரும் ஒன்று சிந்தியுங்கள்.      சகரியா தீர்க்கதரிசி கண்ட தரிசனம் பூமிக்கும், வானத்துக்கும் நடுவே, மரக்காலும், மரக்காலுக்குள்ளால் ஒரு ஸ்திரீயும் ஆனால் அந்த மரக்காலை நாரையின் செட்டைகளுக் கொத்த செட்டைகளுள்ள இரண்டு ஸ்திரீகள் தூக்கிக்கொண்டு பூமிக்கும், வானத்துக்கும் நடுவாய் தூக்கிக் கொண்டு போகிறதை பார்க்கிறான்.     அந்த செட்டைகளில் காற்றிருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது.

என்னவென்றால் இதுவும் பூமிக்கும், வானத்துக்கும் நடுவே காணப்படுகிறது.     ஆனால் காற்றின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது.     இது எவையென்றால் தேவனை வாயினால் ஆராதிப்பார்கள்.     ஆனால் உள்ளம் தேவனுக்கு மாறாக உலக கிரியைகளை செய்து கொண்டு இருந்தால் அவர்கள் மேல் வருகிற அபிஷேகத்தை குறித்து நாம் பார்க்கிறோம்.     அந்த செட்டைகளிலும் காற்றுகளிலிருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது.     ஆனால் அது சிநேயார் தேசத்தில் ஸ்தாபிக்கப்படும்படி கொண்டு போகப் படுகிறது.     இது ஒரு வகை அபிஷேகம்.      அசுத்த ஆவிகளால் நிறையபட்ட அபிஷேகம் இவர்களும் ஆராதனையும் அந்நிய பாஷைகளும் பேசுகிறார்கள்.     ஆனால் இந்த காற்றில் தேவன் (வசனம்) இல்லை அது வெறும் காற்றாகவேயிருக்கும், அதில் பிரயோஜனம் இல்லை .

ஆனால் இரண்டு ஸ்திரீகள் இந்த மரக்காலை தூக்கி சொல்கிறார்கள் என்றால் இரண்டு ஸ்திரீகளும் இரு சபைகள்.     ஒரே தாயின் இரண்டு குமாரத்திகள் மூத்தவள் அகோலாள், இளையவள் அகோலிபாள்.    அகோலாள் என்றால் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருள்.     இவை இரண்டும் பாரம்பரிய வாழ்க்கையாகிய புற ஜாதிகளுடைய சபையை குறித்து (உலக சபை) தேவன் சொல்கிறார்.    இவர்களுடைய கிரியைகளை நாளை தியானிப்போம்.     ஆனால் இவர்கள் கையில் நாம் சிக்கிக் கொள்ளாத படி நம் ஆத்மீக வாழ்க்கை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரத்தில் ஒப்புக் கொடுப்போம்.     நாம் அவருடைய கையில் இருக்கிற பரிசுத்த பாத்திரமாக விளங்குவோம்.     ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக .               

 -தொடர்ச்சி நாளை.