மேகத்தின் மறைவில் வசிப்பது எப்படி:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 04, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 91:1

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா. 

மேகத்தின் மறைவில் வசிப்பது எப்படி:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் தேவன் தமது கோபத்தோடே கரம் நீட்டாமல் இருக்க வேண்டுமானால் பன்னிரண்டு தூண்களோடு பலிபீடம் நிறுத்தப்பட வேண்டும் அது மகிமையால் பிரகாசிக்க வேண்டும்.     அந்த கிறிஸ்துவின் மகிமைக்குள்ளாக இருந்து நாம் அப்பமும், திராட்ச ரசமும் புசித்து குடிப்போமானால் தேவன் தம்முடைய கோபத்தோட கரத்தை  நமக்கு நேராக நீட்டுவதில்லை.

இல்லையென்றால் உலக வழக்கத்திற்கேற்றபடி நடந்து நாம் தேவனுக்கேற்ற உண்மையான செயலின் படி அவருடைய கட்டளை, கற்பனை நியமங்கள், பிரமாணங்கள் பிரகாரம் நடந்து கொள்ளாதபடி நாம் அப்பமும், திராட்சை ரசமும் புசித்தால் கர்த்தர் நம்மை சோதித்தறிந்து நமக்குள் மாயம் காணப்பட்டால் அது தான் தேவனுடைய உக்கிரமான மது,  அவ்விதம் நிறைந்திருக்கிற பாத்திரம் பாபிலோன் ஸ்திரீயின் கரத்தில் கொடுக்கும் படி கிறிஸ்துவினிடத்தில் நினைப் பூட்டபடுகிறது.     அது தான் தேவனுடைய கோபமான கரம் அதனால் நாம் பல விதத்தில் துன்பப்படுத்த படுகிறோம்.

எதற்கென்றால் நாம் நம்மை சீர்திருத்த பாவ, மோக இச்சைகளை, உலக இன்பங்களை விட்டு நம் ஆத்மாவாகிய தேவனுடைய பான பாத்திரத்தை பரிசுத்தப்படுத்தும் படியாக அவ்விதம் செய்கிறார்.

யாத்திராகமம்: 24:12-15

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான்.     மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பி வருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

கர்த்தர் மலையின் மேல் மோசேயிடத்தில் ஏறி சொல்வது என்ன என்று நாம் சிந்திப்போமானால் மலை என்பது கிறிஸ்து என்பதும். கிறிஸ்துவில் நாம் ஜெபத்திலும், பரிசுத்தத்திலும் வளர வேண்டும் என்பதையும், அவரோடு தரித்திருக்க வேண்டுமென்பதையும், அப்பொழுது தேவன் நம்முடைய இருதயமாகிய கற்பலகையில் எழுதியிருக்கிற கற்பனைகளையும், பிரமாணங்களையும் கொடுப்பேன் என்பதையும் மோசேயின் மூலம் தேவன் அவருடைய பிரமாணங்களையும், கற்பனைகளையும் கொடுப்பேன் என்கிறார். இவ்விதம் தேவன் சொல்வது,

எரேமியா: 31:33

அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பிரியமானவர்களே கற்பலகையில் பிரமாணத்தையும், கற்பனைகளையும் எழுதுவேன் என்ற தேவன் எதற்கென்றால் மலையில் வைத்து அதை செய்வேன் என்பது நாம் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் தேவன் நம்மோடு 

உடன்படிக்கை செய்கிறாரென்றால் கிறிஸ்து நம் உள்ளத்தில் வந்த பின்பு நம் இருதயம் கிறிஸ்துவின் இருதயம் போல் ஆகும் என்பதை விளக்கிக் காட்டி இருதயத்தில் பிரமாணத்தை எழுதுகிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறார்.      இதிலிருந்து தெரிய வருவது என்றால் தேவனுடைய கற்பனை, பிரமாணம் அவருடைய நியமங்கள் எல்லாமே நம் உள்ளத்தில் வைத்திருக்கிறார்.     அதனை பிரகாசிக்க விடாதபடி உலகமாகிய மரக்கால் அதை மூடி வைத்திருக்கிறது.     ஆனால் உலகமாகிய மரக்காலை அப்புறப்படுத்த வேண்டும்.     அப்போது அது பிரகாசிக்கும் (கிறிஸ்து) இவற்றின் திருஷ்டாந்தம் மோசே என்று தெரியவேண்டும்.     பின்னும்,

சகரியா: 5:2-4

தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச் சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.

அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப் போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.

அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப் போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

 பிரியமானவர்களே நாம் வாழ்க்கையில் தேவன் இந்த நாட்களில் (குமாரன் நாட்களில்) செய்கிறதை  தரிசனம் காண்பிக்கிறார்.     யாரும் நிர்விசாரமாயிராதேயுங்கள்.      அப்படி நிர்விசாரமாயிருந்தால் நாம் நிர்மூலமாகி விடுவோம்.     நீங்கள் இதுவரை சத்தியம் கேட்டாலும் சரி, கேளாமல் இருந்தாலும் சரி, இனி மேலாவது தேவன் தருகிற சத்தியத்தை வாசிக்கிறவர்கள் தயவு செய்து சத்தியத்திற்கு கீழ்ப்படியுங்கள்.     ஏனென்றால் தேவனுடைய சத்தியம் என்பது வெறும் ஞானஸ்நானம் மட்டும் அல்ல,  தேவனுடைய ஒவ்வொரு வசனமும், அவருடைய சத்தியம் அவ்விதம் சத்தியம் ஏற்றுக் கொண்டால் தான் நமக்கு ஆத்துமாவின் இரட்சிப்பு உண்டு நம்முடைய தேவனாகிய கர்த்தர் பிரமாணங்களை உங்கள் இருதயங்களில் எழுதி, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று சொல்கிறாரென்றால்  தேவனுடைய விரல் தான் கிறிஸ்து.     நம் இருதயம் கிறிஸ்துவால் மகிமைபட்டிருக்க வேண்டும்.     அப்போது கற்பலகையாகிய இருதயமல்ல சதையாகிய இருதயம் நமக்கு தேவன் பொருத்துகிறார் அவர் தான் கிறிஸ்து.

மேற்கூறப்பட்ட புஸ்தகச் சுருள்; பூமியின் மீதெங்கும் புறப்பட்டு போகிற சாபம்; திருடன் என்று சொல்வது தேவனுடைய வார்த்தையை ஒருவர் வாயிலிருந்து திருட்டுத்தனமாக எடுத்து மற்றவர்களுக்கு விற்பது.    ஏனென்றால் தேவ வார்த்தை தேவனிடத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.     எப்படியெனில் பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் இருந்து நமக்கு போதிப்பார்.     யாரும் போதிக்க வேண்டுவதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.     ஒருவர் தவறாக மாம்சத்தில் போதித்தால் எல்லோரிடமும் அந்த போதனையாகிய திருட்டு வார்த்தை விழுந்து விடும்.     அதனால் தான் தேவன் திருட்டு வார்த்தை கேட்கிறவர்களுக்கும் கொடுக்கிறவர்களுக்கும் சாபத்தை அனுப்புகிறார்.     இவ்விதம் உலகமெங்கும் கள்ள போதகம் இருந்து கொண்டு மொத்த உலகமும் தேவ சாபத்திற்குள்ளாக இருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது.

மேலும் பொய்யாணையென்று எழுதப்பட்டிருக்கிறது.     சத்தியத்திற்கு புறம்பான வார்த்தைகளை சொல்லி இதுதான் சத்தியம் என்று சாதித்து விடுவார்கள்.     அவர்களிலும் தேவன் சாபத்தை தங்க வைத்து அதின் சகல மரங்களோடுங் கல்லுகளோடுங் கூட நிர்மூலம் பண்ணுகிறார். இவ்விதம் அவர்கள் பெற்றெடுத்த ஆத்துமாக்கள் சாபத்தால் நிர்மூலம் பண்ணுகிறார்.

குறிப்பாக  கர்த்தரின் ஊழியக்காரர்கள் எச்சரிப்போடும், ஜாக்கிரதையோடும் காணப்பட வேண்டும்.     இவை தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சபையாம் மக்களும் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

பின்பு அடுத்ததாக புறப்பட்டு வருகிற ஒரு தரிசனத்தை பார்க்கிறான்.     அப்போது அவன் கர்த்தருடைய தூதனிடத்தில் இது என்னவென்று கேட்டதற்கு புறப்பட்டு வருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார்.     பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.

சகரியா: 5:7

இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.

பிரியமானவர்களே இதன் விளக்கம் அடுத்த நாளில் தியானிப்போம். ஏனென்றால் தேவனுடைய மேகம் நம்மை மூடுவதற்கு தடையாக நிற்கிற காரியங்கள் இவைகளே ஆதலால் இவ்வித தடைகள் மாறி நாம் மலையின் மேல் ஏறும் படியாகவும் தேவனுடைய மேகம் நம் மேல் நிழலிடும் படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                   

-தொடர்ச்சி நாளை.