தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

நீதிமொழிகள்: 1:33

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

நாம் தேவனுக்கு செவிக் கொடுக்க வேண்டும் செவிக் கொடாவிட்டால் தண்டனை என்ன?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் மகா பாபிலோன் வேசியின் கிரியைகள் நம் உள்ளத்தில் இடம் பெறாமல், நம் உள்ளத்தில் உலக இன்பங்களுக்கும், மாமிச கிரியைகளுக்கும், பிசாசின் எந்த செயல்பாடுகளுக்கும் நாம் இடம் கொடாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.     ஏனென்றால் தேவன் நம் உள்ளத்தை சோதித்தறியும் போது உலக கிரியைகள் நம் மனந்திரும்புதலில் காணப்பட்டால் தேவனால் நாம் பாபிலோன் மகா வேசியிடத்தில் சிறைப்படுத்தி கொடுக்கப் படுகிறோம்.     அது தான் தேவ வசனத்தில் உக்கிரமான மதுவுள்ள பாத்திரம் கொடுக்கும் படி அவருக்கு நினைவூட்டப்படுகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதனால் தேவ வசனம் சொல்கிறது விலையின்றி விற்கப்படீர்கள் பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

எப்படியென்றால் மகா பாபிலோன் வேசியானவள் திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்ந்திருக்கிறாள்.இதனை வாசிக்கிற தேவனுடைய பிள்ளைகள் நன்றாக தன்னைத் தானே சோதித்து அறிந்து மனந் திரும்பினால் உங்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.

அதனால் நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.      இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது என்று.     என்னவென்றால் நம் உள்ளத்தில் வேறு எந்த காரியங்களுக்கும் இடங் கொடுக்கக் கூடாது இடங் கொடுத்தால்,

லேவியராகமம்: 26:14-16                                                                                                   

நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப் போகப் பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப் படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

லேவியராகமம்: 26:21,22

நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.

தேவனுடைய வார்த்தைக்கு செவிக்கொடாமல் நம்முடைய விருப்பப்பிரகாரம் உலகத்திற்கேற்ற பிரகாரம் செய்வோமானால் கர்த்தர் நமக்குள் துஷ்ட மிருகங்களை (வலுசர்ப்பம்) அனுப்பி நம் ஆத்துமா சந்ததிகளை பெற்றெடுக்க விடாதபடி நம்மை குறைத்து போகப் பண்ணி, நம்மை ஆவிக்குரிய பாதையில் பாழாக்கி விடுவார்.

எசேக்கியேல்: 5:11-13

ஆதலால், சீயென்றிகழப் படத்தக்கதும் அருவருக்கப்படத் தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப் படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப் போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.                                             

இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக் கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும் போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

எசேக்கியேல்: 5:16,17

உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக் கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள் மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை முறித்துப்போடுவேன்.

பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற் போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

பிரியமானவர்களே கர்த்தரின் சத்தத்துக்கு செவிக்கொடாதவர்கள் நடுவில் நடக்கிற எல்லா காரியங்களும் இதுவே என்பதை நாமெல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.     மேலும்,

லேவியராகமம்: 26:25-28

என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப் போடும் போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக் கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.         இவ்விதமாக தேவனுக்கு செவி கொடுக்காதவர்களை அவர் தண்டிக்கிறார்.     ஆனால் செவிக் கொடுக்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிற விதத்தையும் நாம் தியானித்தோம்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளுகிற காரியம் என்னவென்றால் நம்மை அழிவில் ஒப்புக் கொடாதபடி தேவன் தம்முடைய தூதனை பத்மூ தீவில் அனுப்பி, தம்முடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தரிசனத்தில் தெளிவுபடுத்துகிறார்.

நம்மை விடுவித்து இரட்சித்து பரிசுத்தப்படுத்தி அவருடைய நாமத்தின் மகிமைக்காக நம்மை அழைக்கப்பட்டவர்களாகவும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் ஆக்கி கொள்ளும் படியாக,  ஆட்டுக்குட்டியானவர் வலுசர்ப்பம் மிருகம் இவைகளை சேர்ந்தவர்களுடனே யுத்தம் செய்து கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிற படியால் அவர்களை ஜெயிக்கிறார்.

இவ்விதம் நாம் எல்லோரும் ஜெயத்தை பெற்றுக் கொள்ளும் படியாக ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.      கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                 

 -தொடர்ச்சி நாளை.