தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 102:15
கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மனந்திரும்புதலில் மகா பாபிலோன் வேசியின் நகரமாகாமல் சீயோனாக கட்டுதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேதப்பகுதியில் மனந்திரும்புதலை குறித்து தியானித்தோம். ஒரு ஆத்துமா மனந்திரும்பினால் பரலோக ராஜ்யம் எப்பொழுதும் அவர்களுக்கு பக்கத்தில் (உள்ளத்தில்) இருக்கும். ஆனால் அநேகருக்கு பரலோகராஜ்யம் தூரத்தில் இருக்கிறது. பக்கத்தில் (உள்ளத்தில்) உலகம் இருக்கிறது. அதனை குறித்து தியானித்தோம். மேலும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது என்றும் ஒருவனை நேசித்து, ஒருவனைப் பகைத்தும் இருப்பாய் என்றும் தியானித்தோம் மற்றும் ஒருவன் உண்மையான மனந்திரும்புதல் இருந்தால் பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வந்து தங்கி விடுவார், மற்றும் உள்ளத்தில் இருக்கிற தேசங்களின் ஜாதிகளை ஒவ்வொன்றாக அவர்களை பலுகிப் பெருகாதபடி துரத்தி விடுவார். ஆனால் கிறிஸ்து (வசனம்) வளர்ந்து பெருகி கொண்டேயிருக்கும். உள்ளத்தில் வைத்திருக்கிற சிலைகளை உடைப்பார்.
வியாதியினின்று விடுதலையாவோம். தண்ணீராலும், அப்பத்தாலும் திருப்தியடைய செய்து, இவ்விதமாக பல நன்மைகளை செய்து நமக்கு புது வாழ்வு தருவார்.
ஆனால் மனந்திரும்புதல் என்று சொல்லி, உலகத்தை உள்ளத்தை விட்டு மாற்றாமல் இருப்போமானால் நம்முடைய எதிராளியாகிய பிசாசானவன் பல உபாய தந்திரங்களை ஒருக்கி நம்மை பரிசுத்தத்தை விட்டு கவிழ்த்துப் போடுவான். சமாதானம், நம்பிக்கை, நிம்மதி அற்று போக பண்ணுவான். அவ்வித சத்துருவானவன் கிறிஸ்துவின் வேஷம் தரித்து (வலுசர்ப்பம், மிருகம்) அற்புதங்களை செய்வான். இதனை கழிந்த முந்தின நாட்களில் தியானித்தோம். நாம் செய்வதும், சத்தியம் மீறி நடப்பதையும் நம்மை தெரியாமலே நடத்திச் சென்று நம்மை மரண அறைக்கு கொண்டு போய் விடுவான். அதனால் நாம் ஒவ்வொரு நாளும் அப்பம் (வசனம்) தேவனிடத்திலிருந்து வாங்கி புசிக்க வேண்டும். தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பது நித்திய கட்டளை.
மட்டுமல்லாமல் நாம் யாரும் பொல்லாத ஆவியாகிய வஞ்சிக்கிற ஆவிக்கு இடங்கொடுக்காதபடி நம் உள்ளத்தை காத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் இருதயம் யுத்தம் என்பது தேவனுடைய வார்த்தை.
ஆனால் மனந்திரும்பியும் தங்கள் இருதயத்தை தேவனுக்காய் மட்டும் அர்பணிக்காதவர்களும், அர்ப்பணித்து தங்களை பரிசுத்தமாக காத்து கொள்ளாதவர்கள் நடுவிலும் யுத்தம் ஆயத்தமாகிறது என்பது தேவனுடைய வார்த்தை அவர்களை ராஜாக்கள் என்று தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது. அதைத்தான்,
வெளிப்படுத்தல்: 16:13,14
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
எப்படியெனில்,
செப்பனியா: 1:5-9
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
அதைத்தான்,
வெளிப்படுத்தல்: 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
தேவன் வஸ்திரத்தை விசாரிக்கிறார். அப்போது பிசாசுகளின் ஆவிகள் பூலோகெமெங்குமுள்ள ராஜாக்களை மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்கு கூட்டி சேர்க்கும் படியாக புறப்படுகிறது.
ஆனால் மானம் காணப்படாதவர்கள் பாக்கியவான்கள் மற்றவர்களிடத்தில் யுத்தம் நடக்கிறது.
வெளிப்படுத்தல்: 16:17,18
ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.
தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.
பிரியமானவர்களே ஒரு மகா ஆவிக்குரிய யுத்தம் ஆகாயமாகிய நம் உள்ளத்தில் எபிரெயு பாஷையிலே திருஷ்டாந்தம் (அர்மதெதோன்) என்ற இடத்திலே இந்த யுத்தம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும், மிருகமும், வலுசர்ப்பமும் இருக்கிற கள்ளத்தீர்க்கதரிகள் உள்ளத்திலே (புறம்பான சத்தியத்தோடு நடக்கிறவர்கள்) நடைபெறுகிறது. அப்பொழுது மகா நகரம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. அதில் புறஜாதிகள் பட்டணங்கள் விழுகிறது. மகா பாபிலோன் (வேசிக்கு) தேவனுடைய உக்கிரமான பாத்திரத்தை கொடுக்கும்படி (பாத்திரம் - ஆத்துமா) அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.
இதனை வாசிக்கிற பிரியமானவர்களே மனந்திரும்புதலில் நாம் மிகவும் கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருந்து இரட்சிப்பை சுதந்தரித்து கொண்டால் மாத்திரமே, புது வாழ்வு, புது ஜீவன், புது உணர்வு, புதுபெலன் கிடைக்கும். இல்லாவிட்டால் பாபிலோன் மகா வேசியின் நகரமாகி விடும். இரட்சிப்பை காத்துக் கொள்ளும் படியாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.