Sep 29, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியேல்: 34:26

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப் புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

மனந்திரும்புதல் என்றால் என்ன? புது வாழ்வு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் இரண்டு எஜமான்களுக்கு ஒருவனால் ஊழியம் செய்யக் கூடாது என்ற தேவ வார்த்தையை தியானித்தோம். ஏனென்றால் ஒருவனை நேசிப்பாய் மற்றொருவனை பகைப்பாய் என்று தியானித்தோம்.

எப்படியெனில் மனந்திரும்புவோமானால் பரலோகத்திற்குரிய காரியங்களை நாம் தேடிக் கொள்ளும் படியாக,பரிசுத்தம் பெறும்படியாக நம் உள்ளம் காத்திருக்கும்.     ஆனால் இந்நாளில் அநேகம் பேர் மனம் திரும்பினேன் என்று தங்களுக்குள்ளே நினைத்துக் கொண்டு, அத்தனை உலக காரியங்களை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.     அதற்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிற அருமையான தேவனுடைய வார்த்தை என்னவென்றால் அவை அஞ்ஞானிகள் நாடி தேடுகிறார்கள்.     ஆதலால் பிரியமானவர்களே முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும், அதின் நீதியையும் தேடுங்கள்.

அப்பொழுதோ இவைகள் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்கிறார்.     இப்படி இருவித எண்ணங்கள் நம் ஒரே உள்ளத்தில் இருப்பதால் கர்த்தர் சொல்லுகிறார்.     இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.

இந்த இரண்டு வித ஊழியத்தில் உலகத்தை எப்படி நம் உள்ளத்தை விட்டு மாற்ற வேண்டுமென்றால் தேவ சத்தம் கேட்டு, கீழ்ப்படிந்து சத்தியம் கைக் கொள்வோமானால் பாபிலோன் மகா வேசி வலுசர்ப்பம் மிருகம் நம் உள்ளத்திலிருந்து மாற்றப்படுகிறது.     அதைத்தான்,

யாத்திராகமம்: 23:20-24

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.

நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக.

மேற்கூறிய தேவ வசனத்தை நாம் தியானிக்கும் போது கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் சபை (குமாரன்) திருஷ்டாந்தபடுத்தும் போது முன் செல்லுகிற தூதன் யாரென்றால் பரிசுத்த ஆவியானவர்.  தேசத்திலுள்ள சகல ஜாதிகளும் தங்குகிற இடத்திலே, என்று சொல்வது,  நம் ஆத்துமா பாரம்பரிய வாழ்க்கையோடு ஒட்டி இருக்கிறதை கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி அதை அதம் பண்ணி போடுகிறார் என்பது நமக்கு விளங்குகிறது.

பழைய ஏற்பாட்டில் ஜாதிகளும், தேசங்களும் என்று எழுதப்பட்டிருப்பது,   நம்மையும் நம் ஆத்துமாவுக்கும் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.

தேசங்களில், மண்ணிலும், வெள்ளியிலும், பொன்னிலும், வெண்கலத்தாலும் வைத்திருக்கிற சிலைகளை நாம் பார்க்கிறோம்.     ஆனால் விசுவாச யாத்திரைக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தி வருகிறதென்றால் நாம் பற்பல காரியங்களை உள்ளத்தில் சிலைகளாக வைத்து விடுகிறோம்.     ஆனால் வெளியில் பூமியில் வைத்திருக்கிற சிலைகளை நாம் உடைக்கிறோம்.     மற்றவர்களும் உடைக்கிறார்கள் ஆனால் உள்ளத்தில் நாம் உருவாக்கி இருக்கிற சிலைகளை பரிசுத்த ஆவியானவர் தான் உடைக்க வேண்டும்.

மேலும் நாம் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் ஒரு பொருளாக எண்ணினால் நாம் தேவனை சேவிக்காமல், மற்ற ஜாதிகளின் தேவர்களை சேவிக்கிறோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.     அதைத்தான் தேவன்,

யாத்திராகமம்: 23:24,25

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.     வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

பிரியமானவர்களே நாம் தேவனை தொழுது கொள்ளும் போது உள்ளத்தில் பரலோகம் மாத்திரம் தான் உண்டாயிருக்க வேண்டும்.     அப்படியிருந்தால் கர்ப்பத்தின் கனிகளை ஆசீர்வதிப்பார்.     கர்ப்பத்தின் கனி என்றால் கிறிஸ்துவுக்குள் உண்டாகிற ஆத்துமா பலன்.     அதை தான் உன் அப்பத்தையும், உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார் என்று எழுதப்பட்டிருக்கிறது.     மேலும் வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்று சொல்லுகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் இஸ்ரவேல் சபையானால் வியாதி வரக்கூடாது என்பது தான் அதன் பொருள்.     மேலும் கர்த்தருடைய வார்த்தை,

யாத்திராகமம்: 23:26-30

கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.

எனக்குப் பயப்படும் பயத்தை உனக்கு முன் செல்லும்படி செய்வேன்.     நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லோரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப் பண்ணுவேன்.           உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

தேசம் பாழாய்ப் போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும் வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

கர்த்தரின் ஜனமே, நாம் இந்த வசனங்களை நன்றாக தியானித்து தேவன் நமக்கு செய்கிற நன்மைகளை என்ன என்று சிந்தித்து நம் உள்ளத்தில் இருக்கின்ற துஷ்டன், துர்கிரியைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அனுப்பவும், அவைகள் நம் உள்ளத்தில் கர்ப்பந்தரித்து பெருகாமலும் இருக்கும் படியாக, கிறிஸ்துவின் வசனம் நம்மளில் கர்ப்பந்தரித்து பெருகவும், நமக்குள்ளில் கிறிஸ்துவின் கிரியைகளில் நாம்  பெருகிக் கொண்டேயிருப்போமானால் நாம் விருத்தியடைந்து தேசத்தை தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும்.

இவைகளை நாம் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தேவன் சில ஜாதிகளை நம்மிடத்தில் வெளிப்படுத்தி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.    ஏனென்றால் மனந்திரும்புதல் என்ன என்று நாம் யாவரும் அறிந்து கொள்ள வேண்டும்.     ஒப்புக்கொடுப்போம்.    ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                     

 -தொடர்ச்சி நாளை.