தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

I பேதுரு: 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது? எப்படி:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேத பகுதியில் நித்திய ஜீவன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் படியாக நம்முடைய மனந்திரும்புதலில் தேவன் செய்கிற செயலை குறித்து தியானித்தோம்.      நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்  மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது.     ஆனால் திரளான மக்கள் உலகத்தில் மனந்திரும்புகிறார்கள் ஆனால் மனந்திரும்பினால் பரலோக ராஜ்யம் நம் உள்ளத்தில் வரவேண்டும்.  பரலோக ராஜ்யம் நம் உள்ளத்தில் வந்தால் நாம் எப்போதும் சந்தோஷமாயிருப்போம்.

உலக காரியங்களை குறித்து கவலைப்பட மாட்டோம்.     ஆனால் நாமோ எப்போதும் உலக காரியங்களை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.      என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உண்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.     பரலோக ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும் என்பதை அநேகர் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.     அதனால் தான் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்,

மத்தேயு: 6:24-28

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான்.     அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.                                                         

ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப் பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள்.      அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

இந்த அருமையான தேவ வசனத்தை தியானிக்கும் போது உள்ளத்தில் உலகப் பொருட்கள் முக்கியமாக இடம் கொடுத்தால் நாம் உலகப் பொருளுக்கு ஊழியம் செய்கிறோம் என்பது தொழுதுக்கொள்வது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.     அதனால் தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய உங்களால் கூடாது என்று சொல்கிறார்.

மத்தேயு: 6:31-34

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.     அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.           

பிரியமானவர்களே நம்முடைய கிறிஸ்து சொல்கிறதான மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது அன்றன்று உள்ள காரியங்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதி நமக்கு இருந்தால் போதும், அது தான் தேவன் நம்மளில் வைத்திருக்கிற சித்தம்.     ஆனால் அநேகம் பேர் பல மோகங்களேடே சிக்கி, பொருட்களையும், பணத்தையும் சேகரிக்க வேண்டும்.     உலகத்தாருக்கு ஒத்த பிரகாரம் மேன்மையாக வாழ வேண்டும்.     அதற்கேற்ற வசதிகள் வரவில்லையே என்று நினைத்து மிகவும் கவலைப் படுகிறதை பார்க்கிறோம்.      அதைத்தான் கிறிஸ்து சொல்கிறார் ஒன்றையுங் குறித்து கவலைப்படாதிருங்கள் இவ்விதம் கவலைப்படுகிறவர்கள் பரலோக ராஜ்யத்திற்கு தூரமாயிருக்கிறார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனந்திரும்பினால் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது.     ஆனால் உலகம் நம் உள்ளத்தில் இருப்பதால் கவலைப்படுகிறோம், அது பாபிலோனுடைய செயல், அதனால் தேவன் நாம் நேசிக்கிற பிள்ளைகள் அழிந்து போகாத படி சிட்சிக்கிறார்.     இந்த சிட்ச்சைத் தான் கோப கலசம் உள்ளத்தில் ஊற்றி நம் உள்ளதைப் புண்படுத்துகிறார்.      ஆனால் ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதி (பிசாசின் வார்த்தைகள்) யின் மேல் ஊற்றும் போது நதியின் தண்ணீர் வற்றி போகிறது.      இவ்விதமாக ஒவ்வொரு பிசாசின் செயல்களை தேவன் மாற்றி வரும் போது அந்த நதியின் ஆழத்தில் கிடப்பது வலுசர்ப்பம் மிருகம் என்பதை தேவன் வெளிப்படுத்துகிறார்.

இதிலிருந்து நம் உள்ளத்தின் ஆழத்தில் (சமுத்திரம்) வலுசர்ப்பம் (மிருகம்) பல பொல்லாத உலக காரியங்கள் செய்ய வைத்தது வெளியரங்கமாகிறது.     இந்தப் பொல்லாத பிசாசு தான் தேவனுடைய வார்த்தைகளுக்கு நம்மை கீழ்படியவிடாமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும்.      அதை தான்,

வெளிப்படுத்தல்: 16:13,14

அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.

அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

பிரியமானவர்களை அற்புதங்களை செய்கிற ஆவிகள் யாரிடத்தில் இருக்கு மென்று நன்றாக புரிந்துக் கொண்டு, நம் உள்ளத்தில் உலகத்திற்கு இடம் கொடாமல் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நம்மை தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போமானால் ,  கர்த்தர்,   வலுசர்ப்பம் மிருகம் இவைகளை நம்முடைய  உள்ளத்தை விட்டு மாற்றுவார்.              ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                   

  -தொடர்ச்சி நாளை.