தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
நித்திய ஜீவன் கெட்டுப் போகாமல் பாதுகாத்தல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து, மனந்திரும்பி, சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, அதன் பிரகாரம் நடக்காதவர்களை கர்த்தர் எவ்விதம் நியாயந்தீர்க்கிறார் என்றும்,அவர்கள் உள்ளமானது தேவனுடைய சிங்காசனத்துக்கு மாறாக வலுசர்ப்பம் மிருகத்தின் சிங்காசனம் இருப்பதாகவும், தேவன் மிருகத்தின் மேல் தம்முடைய வார்த்தைகளாகிய கோபகலசத்தை ஐந்தாம் தூதன் மூலம் ஊற்றும் போது, அந்த மிருகம் கொடுத்திருந்த வெளிச்சம் போய் மிருகத்தின் ராஜ்யம் இருளடைந்ததை நாம் தியானித்தோம். அந்த ராஜ்யம் தான் தேவ ராஜ்யத்திற்கு மாறாக பிசாசானவன் நம்மளில் கட்டி எழுப்பியிருக்கிற பாபிலோன்.
இவ்விதம் தேவன் ஜனங்களை நியாயந்தீர்த்து புதுமையான ஒரு ராஜ்யம் கிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிக்கலாம் என்று நினைத்தால் மக்கள் அவர்கள் வருத்தம் அனுபவிக்கிறதினால் தங்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளை கடித்து கொண்டு,
வெளிப்படுத்தல்: 16:11,12
தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
இது என்னவென்றால் மிருகம் ஸ்தாபித்த ராஜ்யம் இருளடைகிறது. அப்பொழுது தேவன் ஆறாம் தூதனால் கோபகலசம் ஊற்றுகிறார், ஐபிராத் நதியின் மேல். காரணம் அது பிசாசின் வார்த்தைகள், அந்த பிசாசின் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளை தான் ஐபிராத் நதி என்று சொல்கிறார். இது தேவ சத்தியத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் யாராக இருந்தாலும் தேவன் ஐபிராத்து நதியை நமக்கு திருஷ்டாந்த படித்தி அவர்கள் உள்ளத்தில் இருப்பது பிசாசின் செயல்கள் என்று தெளிவுபடுத்துகிறார்.
இந்த நதி ஏதேன் தோட்டத்திலிருந்து நான்காவது ஆறாக ஓடுகிறது.
இந்த நதியில் தான் தேவன் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் ஒரு கச்சையை வாங்கி உன் அரையிலே கட்டிக்கொள். அதை தண்ணீரில் படவொட்டதே என்றார். அப்படியே எரேமியா தீர்க்கதரிசி செய்கிறான்.
பின்பு தேவன் சொல்கிறார் நீ வாங்கினதும், உன் அரையிலே இருக்கிறதுமான கச்சையை எடுத்துக் கொண்டு எழுந்து ஐபிராத்து நதி மட்டும் போய் அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்புகளிலே ஒளித்து வை என்று சொன்னார்.
அதை போல் எரேமியா தீர்க்கதரிசி செய்யும் போது அநேக நாட்களுக்கு பின்பு கர்த்தர் அவனிடத்தில் ஒளித்து வைத்த கச்சையை எடுத்துக் கொண்டு வா என்று சொல்கிறார். அப்படி அவன் அதை எடுத்துக் கொண்டு வரும்போது அந்த கச்சை ஒன்றுக்கும் உதவாமல் கெட்டுப் போயிற்று.
பின்பு கர்த்தர் இவ்விதமாக யூதாவுடைய பெருமையையும் எருசலேமின் மிகுந்த பெருமையையும் கெட்டுப்போக பண்ணுவேன் என்கிறார்.
பிரியமானவர்களே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள் நிச்சயமாக உலக ஆசீர்வாதத்தையும், உலகத்தின் அனுபவத்தையும் கூறி ஒப்பிட்டு தேவனுடைய வார்த்தைகளை சொல்பவர்கள் உள்ளதில் ஓடுவது ஐபிராத்து நதி. அவர்கள் உள்ளத்தில் இருப்பது வலுசர்ப்பம் மிருகம். நீங்கள் பெற்றுக் கொண்ட கொஞ்சம் சத்தியம் போலும் அவர்கள் உபதேசம் கேட்கும் போதும் ஒன்றுக்குங் உதவாமல் கெட்டுப்போகும்.
பிரியமானவர்களே தேவ ஆலயம், தேவனுடைய சபைகள் என்று சொல்லும் போது அவர்கள் நடக்கிற சாட்சியான அனுபவத்தை பார்த்து அதற்குள் உபதேசம் கற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு சகல சக்தியையும் அறிவிப்பார் யாரும் மனம் தளர்ந்து போக கூடாது.
பிரியமானவர்களே கச்சையை கன்மலையில் ஒளித்து வை என்று சொல்கிறார். என்னவென்றால் நம் உள்ளத்தில் உள்ளான மனுஷனை புதுப்பிக்கற அனுபவம் என்னவென்றால் கிறிஸ்துவாகிய ஜீவ நதி (கன்மலை) அவருக்குள் நாம் மறைந்து வாழ்வோமானால் புது பெலன் அடைந்து கழுகுகளை போல் சிறகடித்து எழும்புவோம். நம் உள்ளத்தில் அல்லது சபைகளில் சத்தியத்திற்கு மாறான கிரியைகள் இருக்குமானால் தேவன் சொல்கிறார். கச்சையை தண்ணீரில் படவொட்டாதே. நம் ஆத்துமா எவ்விதத்தில் ஐபிராத்து நதி தண்ணீரில் படக்கூடாது, சத்தியம் இல்லாதவர்களோடு கலவ கூடாது என்று சொல்கிறார். ஆனால் கன்மலையில் ஒளித்து வைத்தது அநேக நாள் சென்ற பிறகு ஒன்றுக்கும் உதவாமற் கெட்டுப் போகிறதை பார்க்கிறோம். ஆனால் அந்நிய ஜனங்களோடு கலந்து கொண்டால் நம்முடைய நித்திய ஜீவன் கெட்டுப் போகும். நித்திய ஜீவன் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் படியாகவே நம்முடைய கன்மலையாகிய கிறிஸ்து அடிக்கப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து நம்மையும் அவரோடோ உயிர்ப்பிக்கிறார்.
எரேமியா: 13:10
என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பிரியமானவர்களே இந்தக் கச்சையை போல் நம் ஆத்துமா கெட்டுப் போகாதபடி சத்தியத்தின்படி நடந்து கொள்ள நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம் . கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.