தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா: 42:11,12
நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.
அல்லேலூயா.
தேவன் கோப கலசங்கள் ஊற்ற காரணம்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் நாம் எவ்விதம் வஞ்சிக்கிற சாத்தானிடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் படியாக விவேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம். வஞ்சிக்கிற ஆவி (பரஸ்திரீ) எப்படி நம்மை வஞ்சிக்கும் என்றும் ஆனால் தேவன் நாம் அவற்றிடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவன் சங்கீதக்காரன் மூலம் ஒப்புக்கொடுத்து பாடின பாட்டை நாம் தியானித்தோம். அவ்விதம் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வோமானால் ஒருபோதும் தேவன் நம்மை தள்ளாட விடமாட்டார். அதைத்தான்,
சங்கீதம்: 121:1-8
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
பிரியமானவர்களே இவ்விதமாக தேவன் நம்மை வஞ்சிக்கிற ஆவியாகிய பரஸ்திரீயின் கரத்திலிருந்து பாதுகாப்பார்.
தேவன் கீழ்ப்படியாதவர்களின் ஆத்துமாவில் கோபகலசம் ஊற்றுகிறார்.
வெளிப்படுத்தல்: 16:8,9
நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;
என்னவெனில் நான்காம் தூதனுடைய கோபகலசம் சூரியன் மேல் ஊற்றினான் என்றால், அந்த சூரியன் என்பது கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்டு தாங்கள் சூரியனாக இருக்கிறோம் என்று நினைப்பவர்கள். ஆனால் மிருகம் அவர்களை ஆளுகை செய்யும். அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களாகயிருப்பார்கள். தாங்கள் நடக்கிற பாதையெல்லாம் சரியென்று நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர் கேட்டிருக்கலாம். தங்களுக்குள் இருக்கிற அதிசூட்டால் சகிக்காத வேதனையுள்ளவர்கள் உண்டு. அவர்கள் உஷ்ணத்தினால் தகிக்கப்பட்டு தேவனுடைய நாமத்தை தூஷித்தார்களேயல்லாமல் மகிமைப்படுத்த மனம் திரும்பவில்லை.
இவ்விதம் வாதைகளை தேவன் நம் ஒவ்வொருவருக்குள்ளும், மேலும் தேசத்திலும் கட்டளையிடுகிறார். இவையெல்லாம் மனுஷர்கள் மனந்திரும்பும் படியாக தேவன் ஒவ்வொரு மனுஷர்களிலும் செய்கிறார். ஆனால் மனுஷர்கள் தூஷிக்கிறார்களேயல்லாமல் மனந்திரும்பவில்லை என்பதனை தேவன் யோவானுக்கு பத்மு தீவிலே வெளிப்படுத்துகிறார்.
முதலில் கூறிய நான்கு பகுதிகள் பூமி, சமுத்திரம், ஆறுகளும், நீருற்றுகளும், சூரியன் இவையெல்லாம் மனுஷருடைய ஆத்துமாவில் இருக்கிற கிரியைகளை குறித்து தேவன் வெளிப்படுத்துகிறார்.
பூமியை தேவன் நியாயந்தீர்க்க வருகிறார். நம் உள்ளம் பூமியாக இருக்குமானால் அது புழுதி. சமுத்திரம் என்பது துன்மார்க்கத்தை காட்டுகிறது. அதனால் தேவன் சொல்கிறார். பூமியிலும், சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ! என்று சொல்லுகிறது.
வெளிப்படுத்தல்: 12:12
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
இவர்கள் எல்லாம் தேவ சத்தம் கேட்டு சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்களானால் ஆனந்த முழக்கமிடுங்கள். தேவனுடைய இரட்சிப்பை காண முடியும் என்று வேத வசனம் நமக்கு சொல்கிறது.
ஏனென்றால் சரியான சத்தியத்தில் வளராத ஆத்துமாவின் மேல் தேவன் தேவ கோப கலசம் ஊற்றுகிறார் அப்படியாவது அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி இரட்சிப்பை காணட்டும் என்று தேவன் நம்மேல் விருப்பமுள்ளவராகயிருக்கிறார். அதைக் குறித்த தேவ வசனம்,
சங்கீதம்: 98:7-9
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். இவையெல்லாம் அனுபவத்திலும் முழு மனதோடு மனந்திரும்பவில்லையென்றால் நம் உள்ளில் இருக்கிற சிங்காசனம் மிருகத்தின் சிங்காசனம் அது (வலுசர்ப்பம்) இது மனுஷர்களுடைய உள்ளத்தில் இருந்து தேவனை போல வேஷம் தரித்து, ஆலோசனை சொல்லி, வேத வசனம் விளம்பி தனக்கேற்ற பிரகாரமாக சத்தியத்தை மாற்றி சத்திய ஆவி உள்ளத்தில் பிரவேசிக்க விடாதபடி வேஷம் மாறி மாறிக் கொண்டிருக்கும். இதைத்தான் தேவன் சொல்வது விவேகம் பேணிக்கொள்ள வேண்டும், பகுத்தறிய வேண்டும். இவை எப்படி கண்டறிய முடியும் என்றால் தேவ வசன பிரகாரம் ஒப்பிட்டு பார்த்தால் சத்தியத்தின் ஒரு சத்தியம் (பரிசுத்தம்) இருக்காது எல்லாமே அருவருப்பான காரியமாக இருக்கும்.
அதனால் தேவன் எல்லா உள்ளங்களையும் ஆராய்ந்தறிகிற நம்முடைய தேவன் ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின் மேல் ஊற்றுகிறதை நாம் வாசிக்க முடிகிறது. அப்படி ஊற்றும் போது அந்த மிருகத்தின் ராஜ்யம் இருளடைந்து அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளை கடித்துக் கொண்டு,
வெளிப்படுத்தல்: 16:11
தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
பிரியமானவர்களே இதனை வாசிக்கிறவர்கள் சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவ ஜீவியம் எப்படி நாம் தேவனை தொழுது கொள்ள வேண்டும். நம் சொந்த விருப்ப பிரகாரம் நடந்து தேவனை ஆராதிக்கிறோம் என்றிருந்தால் மிருகத்திற்கு தான் ஆராதனை. ஆனால் அந்த மிருகம் அழியும்படியாக நாம் சத்தியம் வேண்டுமென்று நம்மை தேவ பாதத்தில் ஒப்புக்கொடுத்து பரிசுத்தத்திற்கு காத்திருப்போமானால் தேவன் அந்த மிருகத்தை மாற்றுவார்.
தேவனுடைய சிங்காசனம் அமைக்க வேண்டும். ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.