நமக்கு விவேகம் அவசியம்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Sep 25, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்: 121:7

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா

நமக்கு விவேகம் அவசியம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் மகா பாபிலோன் வேசியானவள் (உலக அலங்காரம், ஆடம்பரம், உலக இச்சை, சிற்றின்பங்கள் இன்னும் பலவித பாவ ஆசைகள்) நம் உள்ளத்தில் இருப்பதால் கிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிப்பதற்காக ஒரு மனந்திரும்புதலுக்கேற்ற நியாயத்தீர்ப்பை தேவன் மகா வேசிக்கும் மேலும் தேவ கட்டளை, கற்பனை, நியாயப்பிரமாணம் கைக்கொள்ளாமல் சொந்தமான தாங்கள் விரும்பிய பிரகாரம் நடக்கிறவர்களுக்கும் அந்த தீர்ப்பை கொடுக்கிறதை கழிந்த சில நாட்களாக தியானித்து வருகிறோம். இவ்விதமான உலக கிரியைகளில் நாம் இச்சை கொள்வோமானால் தேவனுக்கு நாம் தூரமாகி விடுகிறோம்.      எப்படியெனில்,

சங்கீதம்: 119:150

தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.

தீவினையை பின்பற்றுகிறவர்கள் என்றால் (வலுசர்ப்பம் - பாபிலோன் மகா வேசி) யின் கிரியையை நடப்பிக்கிறவர்கள் அவளுக்கு சமீபிக்கிறார்கள்.      ஆனால் தேவனுடைய வேதத்துக்கு தூரமாகி விடுகிறார்கள்.

நாம் நியாயத்தீர்ப்பினால் குறிப்பாக சொல்லப்போனால் (கோப கலசங்கள் நம் ஆத்துமாவில் ஊற்றப்படுமானால்) பல வேதனைகள் நமக்கு உண்டாகும்.     ஆனால் அதனை நினைத்து நாம் சத்தியத்தில் நடந்து, நீதியின் பாதைகளில் நடந்து கொள்ளும் படியாக நாம் நம் மனதை புதுப்பித்து, நம்மை தாழ்த்தி தேவ சத்தத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்.      அதை தான்,

சங்கீதம்: 120:1-7

என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

இவ்விதமாக நாம் தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுப்போமானால் தேவன் நமக்காக பலவானிடத்தை யுத்தம் செய்து யுத்தத்தை மேற்கொள்கிறார்.     நம் இருதயம் ஒரு யுத்த களம் என்று தேவ வசனத்தில் வாசிக்கிறோம்.     மகா வேசியின் நகரமாக நம் உள்ளம் பல ஆசைகளில் சிக்கி சமாதானம் இல்லாமல் இருப்பதால், அந்த யுத்தம் அங்கு துவக்குகிறது.     நம் உள்ளம் பாபிலோன் மகா வேசியும் மற்றும் அவளுடைய தரள் கூட்டத்தார் நம் உள்ளத்தில் வசிப்பார்கள்.      இதனை ஜெயிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரள் சேனையுமாகிய தமது பரிசுத்தவான்களோடு இங்கு (நம் உள்ளத்தில்) வருகிறார்.

அதைத்தான்,

சங்கீதம்: 55:18-23

திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். ( சேலா. )

அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

கர்த்தர் நீதியாய் நடந்தால் நம்மை ஆதரிப்பார்.       தேவனுடைய நீதி நியாயத்துக்கு மாறாய் நடப்பவர்கள் எவ்விதத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்,   அவர்கள் உள்ளத்தில் எவ்வித தோற்றம் இருக்கிறது.      ஏன் அவர்கள் உடன்படிக்கையை மீறுகிறார்கள் என்பதை இந்த சங்கீத பாட்டை தேவன் சங்கீதக்காரன் வாயில் தந்து நமக்கு போதிக்கிறார்.       நம் இருதயம் யுத்தம் என்று சொன்னால் பல வேசியின் கிரியைகள் நம் சமாதானத்தை கெடுத்து போடுகிறது.      இப்படி தான் அநேக விசுவாசிகள், கர்த்தரின் ஊழியகாரர்கள், தேவனுடைய ஜனங்கள், எல்லாருடைய வாயின் வார்த்தைகள் வெண்ணையை போல மெதுவாக இருக்கும்.     அதனால் ஜனங்கள் வித்தியாசம் அறிய முடியாதபடி விழுந்து விடுவார்கள்.      அவர்களை பரஸ்தீரியாகிய வேசி கூட்டம் பாதாள அறைக்கு கொண்டு செல்லும்.

அதனால் சங்கீத பாட்டில் தேவனுடைய வார்த்தையானது அவன் வாயின் வார்த்தைகள் வெண்ணெயை போல மெதுவானவைகள் அவன் இருதயமோ யுத்தம் அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள் ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

பிரியமானவர்களே நம் உள்ளம் பாபிலோன் கிரியைகள் இருக்குமானால் அதை ஆவிக்குரிய சத்தியத்தின் பாதைகளில் நடக்கிறவர்கள், மேலும் தேவனால் பகுத்தறியப்பட்டால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.     இல்லாவிட்டால் அறிந்து கொள்ள முடியாது காரணம், பேசும் போது தந்திரமாக பேசுவார்கள்.      அதைத்தான், நீதிமொழிகள்: 5:1-6                                                                                                     என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக் கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.

அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

ஆதலால் நாம் எப்போதும் கவனமாக நடந்து கொள்ள பார்த்து எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக் கொண்டால், தேவன் நம்மை அனுதினம் சத்தியத்தின் பாதையில் பாதுகாத்து நாம் இடறி போகாதபடி, கால் தள்ளாடாதபடி எல்லாவற்றிலும் பாதுகாப்பார்.    இவ்விதமாக நம்மை நாமே யாவரும் சோதித்தறிந்து ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                                           

-தொடர்ச்சி நாளை.