Sep 24, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யாக்கோபு: 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

 மனந்திரும்புதலுக்கேற்ற நியாயத்தீர்ப்பு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் பரஸ்தீரியாகிய பாபிலோன் மகா வேசியோடு (உலக ஆடம்பரங்களோடு) இசைந்திருந்தால் நம்மிடத்தில் துன்மார்க்கமான இச்சை இருக்கிறது என்றும், அவ்விதம் நாம் மகா வேசியோடு இசைந்திருந்தால் நாம் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவோம் என்றும், தேவன் நமக்கு தந்த இரட்சிப்பாகிய உடுப்பை தேவன் உரிந்து ஆதாம் ஏவாள் என்பவர்களை போல் நிர்வாணமாக்கி போடுகிறதையும் நாம் தியானித்தோம்.

மேலும் வலுசர்ப்பமாகிய பாபிலோன் மகா வேசியின் தந்திரம் மக்களை உலக வர்த்தர்களாக்கி, பூமியின் குடிகள் எல்லாம் ஐசுவரியவன்களாகிறார்கள் என்பதையும் கழிந்த முந்தின நாள் தியானித்தோம்.       தேவன் அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்து நம் ஆத்துமாவிடத்தில் சொல்கிறார் என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள் என்று தேவன் நம்மை அழைக்கிறார்.

பிரியமானவர்களே நாம் இப்போது பார்க்கும் போது வேத வசனம் கரத்தில் சுமக்கிறவர்களும் எல்லா விதமான உலக ஆடம்பரம், அலங்காரங்கள் மற்றும் எல்லா பொல்லாத செயல்களோடும் நடந்து வேத வசனத்தைப் போதிக்கிறார்கள்.      வேத வசனத்தில் வளருகிறோம் என்று சொல்கிறார்கள்.      நாம் பார்க்கும் போது தன்னை  ஒருவன் வெறுமை படுத்திக் கொண்டால் மாத்திரமே பரலோகத்தில் நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டு நாம் கிறிஸ்துவின் பலிபீடமாக இருக்கும் முடியும்.                              அதனால் உலகத்தோடு ஒட்டி, உலகத்திற்குரிய வேஷத்தோடு நடப்பவர்களை குறித்து தேவன் சொல்கிறார், தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின் படி நடக்கிற பரியாசகாரர் தோன்றுவார்கள்.    இவர்களை குறித்து தேவனுடைய வார்த்தை சொல்கிறது.      இவர்கள் ஜென்ம சுபாவத்தார் ஆவியில்லாதவர்கள்.

ஆனால் நாமோ மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உறுதிப்பட்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, ஆவிக்குள் ஜெபம்பண்ணி, நித்திய ஜீவனுக்கேதுவான இரக்கத்தை பெறும் படியாக காத்திருக்க வேண்டும்.

இவ்விதம் தேவனுடைய இரக்கத்திற்கு காத்திருப்போமானால்,

வெளிப்படுத்தல்: 18:5,6

அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

தேவன் நம்மை நினைவுக் கூர்ந்தார் என்பது தேவன் நம்மை நினைத்து விட்டார், தவறான பாதையில் ஓடிக் கொண்டிருப்போமானால், சத்தியத்தை விட்டு விலகி அவளுக்கு தூரம் போகிறோம் என்று நமக்கு தெரியாமலே தூரம் போய் விடுகிறோம்.       அப்போழுது தேவன் நமக்குள் ஒரு பெரிய யுத்தத்தை நடப்பிக்கிறார்.      அந்த யுத்தமாவது,

வெளிப்படுத்தல்: 16:1-6

அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

பிரியமானவர்களே மனுஷர்களுடைய உள்ளத்தில் உள்ள பாவத்தையும்,அக்கிரமம் மீறுதல் இவையெல்லாவற்றிலுமிருந்து மீட்டு மனுஷனை மனந்திரும்ப வைக்கும் படியாக தேவன் மேற்கூறிய எல்லா வசனங்களும் நம் எல்லாருடைய உள்ளத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கோபகலசம் என்று சொல்லும் போது தேவன் கோபத்தோடு தம்முடைய வார்த்தையே நம்மில் அனுப்புகிறார்.

முதலாம் தூதன் ஊற்றுகிறான் கோபகலசத்திலுள்ளதை பூமியில், அப்பொழுது மிருகத்தின் முத்திரையை தரித்தவளும் அதன் நாமத்தை வணங்குகிறவர்களுக்கு பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று. 

இரண்டாம் தூதன் கலசத்திலுள்ளதை சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டு போயின.

மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும் நீருற்றுகளிலும் ஊற்றினான்.       உடனே அவைகள் இரத்தமாயின.

பிரியமானவர்களே முந்தின தேவ வசனம் எல்லாமே கர்த்தர் மனுஷனுடைய இருதயத்தை சோதித்து அறிந்து, அவரவர் இருதயத்தின் நிறைவுக்குதக்கதாக தேவனுடைய கோப கலசத்தை ஊற்றுகிறார்.      நம் இருதயம் (உள்ளம்) பூமியாக இருந்தால் கொடிய புண் உண்டாகிறது என்றும், சமுத்திர வாழ்க்கை துன்மார்க்கம் இருந்தால் ஆத்துமா செத்து விடுகிறது என்பதையும் செத்தவனுடய இரத்த போலாகவும், அப்போது அத்தனை கிரியைகளும் செத்த கிரியைகளாகவும், அடுத்ததான கோப கலசம் ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றப்படுகிறது.      அவ்விதம் ஊற்றபடும் போது சுத்தமில்லாத ஆராதனை செய்தவர்கள் முழுமையும் ஆத்துமா பாவங்களால் நிறையப்படுகிறது.

காரணமென்னவென்றால் பரிசுத்தவான்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை கொலை செய்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது அப்படி அவர்கள் இரத்தத்தை இவர்கள் சிந்தின படியால் அந்த இரத்தத்தையே குடிக்க கொடுக்கிறார்.      இவ்விதமாக மனதிரும்பாத பட்சத்தில் தேவன் மனுஷர்களுடைய வாழ்க்கையை கசப்பாக்குகிறார்.  இவ்விதமாக,

வெளிப்படுத்தல்: 16:7

பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.

ஆகையால் இதனை வாசிக்கிற பிரிய ஜனமே தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தப்புவிக்கப்பட்டு சத்தியத்தை ஏற்றுக் கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.       ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.       

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.

-தொடர்ச்சி நாளை.