தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 132:13,14
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
பாபிலோன் மகா வேசி:- உள்ளத்திலிருந்து மாறுதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதிகளில் நம் தேவன் நம் உள்ளத்தில் எழுந்தருளி வருகிறதையும், எழுந்தருளும் போது நம் ஆத்துமா மீட்பைடையும் என்பதையும் நம் ஆத்துமாவை சிறை பிடித்து வைத்திருக்கிற பாபிலோன் வேசியின் கிரியைகளை பலத்த இடி முழக்கத்தோடும், மின்னலோடும், எக்காள சத்தத்தோடு வந்து நம் இருதயமாகிய ஆலயம் திறக்கிறார் என்பதையும் அதில் உலக, மோக, இச்சை, துர்கிரியைகள் அடங்கிய பாபிலோன் வேசியானவளை கர்த்தர் நியாயந்தீர்க்கும் போது அவருடைய அக்கினி அவளை சுட்டெரிக்கும், அப்பொழுது அந்த புகை என்றென்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும். அப்பொழுது பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டமாகிய பரிசுத்தவான்கள் போடுகிற ஆரவாரமாகிற அல்லேலூயா, இரட்சணியமும், மகிமையும், கனமும், வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும், நியாயமுமானவைகள்.
வெளிப்படுத்தல்: 19:2,3
தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
இவ்விதம் நம் ஆத்தும மீட்பை சுதந்தரித்துக் கொள்வது தான் நம் தேவனுடைய பலிபீடமாக எழும்புகிறோம். அதற்கு பிறகு நாம் எப்போதும் தேவனுக்கு துதி செலுத்த கடவோம்.
இந்த பாபிலோன் வேசி இருக்கும் வரையும் நம் தேவனுக்கு செலுத்துகிற மகிமையெல்லாம் அவளுக்கு போய்விடும். என்றைக்கு அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கிறாரோ, அந்த நாளிலிருந்து நம் ஆத்துமா இரட்சிப்பை பெற்று, அவர் தங்குகிற வாசஸ்தலமாக்கி பொல்லாத எண்ணங்களாகிய சகல பிசாசின் கிரியைகளை அகற்றி நம்மை சுத்திகரித்து நம் இரட்சிப்பை நம்மளில் அனுதினம் விளங்க செய்து கொண்டிருப்பார். அப்போது நம்முடைய தேவன் நம்மளில் மகிமைப்பட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அழியாத ராஜ்யத்தை நம்மளில் ஸ்தாபிப்பார். அதைத்தான்,
வெளிப்படுத்தல்: 18:1-4
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
பிரியமானவர்களே முன் குறிக்கப்பட்ட வசனம் என்னவென்றால் உலகம் பாபிலோன் அதின் கிரியைகள்; உலக மேன்மையான காரியங்கள் மேலும் துர் இச்சைக்கு ஏற்ற காரியங்கள், அலங்கார உடுப்புகள் பலவர்ண அங்கிகள், தேவனுக்கு அருவருப்பாகிய பொன், வெள்ளி, கல், இவை போன்ற விலையேறப் பெற்ற பொருட்கள் மேலும் அலங்கார பொருட்கள் இன்னும் இவை போன்ற காரியங்கள் உலகத்தில் மக்கள் உள்ளங்களில் வேண்டும் என்ற மனப்பான்மையோடு உள்ளம் நிறைந்து, தேவனை மறந்து அந்த காரியங்களுக்கு தங்களை தாழ்த்திக் கொடுக்கிறதால் இவைகளை விற்பதற்கு அநேக வர்த்தகர்கள் உலகில் எழும்புகிறார்கள். தேவன் செய்யக்கூடாது என்று விலக்கின இவ்வித காரியங்களை உலக மக்களும், தேவனை அறிந்தும், குருடராயிருக்கிறதினால் அநேகர் தங்கள் சம்பாத்தியத்தை இதற்கென்று செலவழிக்கிறார்கள். அதனால் இப்பூமியில் வர்த்தகர்கள் பெருகிறார்கள். அவர்கள் பெருகுவது மாத்திரமல்ல செல்வ செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களாகிறார்கள்.
வெளிப்படுத்தல்: 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
இந்த பாபிலோன் மகா வேசியானவள் (வலுசர்ப்பம்) இவள் மனுஷருடைய உள்ளத்தில் பண ஆசை, அலங்காரங்கள், மோகம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பொருளாசை இன்னும் பல பொல்லாத எண்ணங்கள், தேவனுடைய சத்தம் கேட்டும்,
கீழ்படியாதவர்களில் உள்ளத்தை வஞ்சித்து வைத்து நடை போடுவாள். மேலும் பாதாள அறைக்கு கொண்டு போய், மரண அறைகளில் கொண்டு விட்டு வீழ்த்தி விடுவாள். இவள் தந்திரத்தில் அநேக கர்த்தரின் ஊழியகாரர்கள், தீர்க்கதரிசிகள், மேலும் விசுவாசிகளை வீழ்த்தி விடுகிறாள். அவர்கள் தாங்கள் தவறான பாதைகளில் நடக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் தாங்கள் சரியான பாதையில் நடக்கிறோம் என்று சிந்தித்து, அவ்விதமே தங்களை பாதாள வழிக்கு நேராக தங்கள் ஆத்துமாவை நடத்தி செல்வார்கள். கடைசியில் தங்கள் வாழ்க்கை முடிவடைந்த பிறகு தான் அவர்களுக்கு தெரியும். அதனால் இதனை வாசிக்கிற தேவனுடைய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை நாம் நன்றாக சோதித்து சிந்தித்து செயல்படுங்கள். சத்தியம் என்ன என்பதை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இவள் அநேகரை காயப்படுத்தி ஆத்துமாவை கொலை செய்கிறாள். அதனால் தான் தேவன் அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் படியாக மனுஷனுடைய இருதய கதவை திறந்து வாசிக்க தகுதி உள்ள ஒரு யூத ராஜ சிங்கம் அங்கு வந்ததை பார்க்கிறோம். அவர் நம் உள்ளத்தில் மரித்து உயிர்தெழுந்தால் மாத்திரமே கர்த்தர் இவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்க முடியும். அதனால் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்லுகிறார்.
மேலும் பாபிலோன் வேசியின் கிரியைகளை அடுத்த நாளில் தியானிப்போம். ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.