பலிபீடம் பரிசுத்தப்படுதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Sep 21, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 26:6,7

கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.         

அல்லேலூயா.

பலிபீடம் பரிசுத்தப்படுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளின் முந்தின நாள் நாம் தியானித்த வேத பகுதியில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளில் வாசம் பண்ணும் படியாக எழுந்தருளி வரும் போது பரலோகத்தில் அவருடைய ஆலயம் திறக்கப்படுகிறது.      ஆலயம் திறக்கப்படும் போது அங்கிருந்து புகை எழும்புகிறதை நாம் தியானித்தோம்.

அந்த புகை எங்கிருந்து தொடங்குகிறது என்றால் நம் உள்ளத்திலிருந்து ஏனென்றால் பாபிலோன் மகா வேசியானவள் நம் உள்ளத்தை அவளுடைய மகா நகரமாக (வேசியின் நகரமாக) வைத்திருப்பாள். அதெப்படியெனில் உலகம் தான் பாபிலோன்.       அந்த உலக ஆசை, இச்சை, பாவ, மோகம் இவையாகிய பல ஆசைகள் நம் உள்ளத்தில் அனுதினம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

கிறிஸ்துவின் வசனம் வளர்ந்து பெருகுவதற்கும் மாறாக உலக மோகங்கள் பெருகிக் கொண்டிருக்கும்.       பல ஆசையான உலக சிற்றின்பங்களில் சிக்கித் தவிப்போம்.       அது பெருக பெருக வாழ்க்கையில் சமாதானம் அற்றுப் போய் கொண்டிருக்கும் அந்த சமாதானம் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தெரியாதவர்களாகவே திகைப்போம்.      இவ்வித காரியங்கள் நடக்கும் போது தேவன் நான்கு திசையிலுமிருந்து காற்று வீசும் படி செய்கிறார். இந்த காற்றை பற்றி தானியேல் தீர்க்கதரிசியினுடைய புஸ்தகத்தில் கழிந்த சில நாட்களுக்கு முன் தியானித்தோம்.       காற்று சமூகத்தின் மேல் அடித்தது அந்த சமுத்திரம் துன்மார்க்கமான நம் உள்ளம் (பல ஆசைகளால் சிக்கியிருக்கிற நம் உள்ளம்) சமுத்திரத்தில் காற்று அடிக்கும் போது நான்கு வகை மிருகங்கள் எழும்புகிறதை தியானித்தோம்.

பின்பு அங்கு சிங்காசனங்கள் வைக்கப்பட்டதும், நம்முடைய பிதாவாகிய தேவனும், ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனமும் மற்றும் இருபத்து நான்கு மூப்பர்களுடைய சிங்காசனத்தையும் குறித்து நாம் தியானித்தோம்.      மேலும் அவருக்கு முன்பாக சேவித்தவர்களும், நியாயத்தீர்ப்புக்கு நின்றவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்று தியானித்தோம்.

பிரியமானவர்களே இதனை வாசிக்கும் போது கழிந்த சில வாரங்களுக்கு முன்பாக தியானத்தை சிந்தித்தால் நலமாயிருக்கும்.

நியாய சங்கம் உட்காருகிறது புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது அந்த புஸ்தகம் நாம் ஒவ்வொருவரும்,

தானியேல்: 7:11

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அந்த மிருகம் தான் வலுசர்ப்பம் (பாபிலோன் வேசி) இது தானியேல் தீர்க்கதரிசிக்கு கொடுத்த இரா தரிசனம்.

தானியேல்: 7:13,14

இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

இந்த ராஜ்யம் தான் தேவனுடைய ராஜ்யம், நம் உள்ளில் ஸ்தாபிக்கப்படுகிறது இதற்காக பாபிலோன் மகா வேசி (வலு சர்ப்பம்) தேவன் அதின் உடலை அழித்து அக்கினிக்கு இரையாக்கும் போது அங்கிருந்து புகை எழும்பிக் கொண்டிருக்கிறது.      இந்த புகை என்றென்றைக்கும் எழும்புகிறது.      எப்படியெனில் அனுதினம் நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிற நம் தேவன் இதனை எல்லாருடைய உள்ளத்திலும் குறிப்பாக தேவனுக்காக முழுமனதோடு ஒப்புக் கொடுக்கிறவர்களுடைய உள்ளத்திலும் இதனை செய்கிறார்.

அதை தான் பத்மூ தீவில் தேவன் தம்முடைய ஊழியகாரர்களுக்கு தெரிவிக்கும் படி யோவானுக்கு வெளிப்படுத்துகிறார்.

இதை பழைய ஏற்பாட்டு மக்களுக்கு இதனை செய்யவில்லை.     தேவன் தானியேலிடம் சொல்லுகிறார் இது சம்பவிக்க இன்னும் அநேக நாட்கள் செல்லும் நீ அதனை முத்திரை போடு என்று சொல்லுகிறார்.      அதை தான் யூதா கோத்திரத்து சிங்கம் புஸ்தகத்தை திறப்பதற்கு பாத்திரவான் என்று சொல்லி சிங்காசனத்திலிருந்தவருடைய கையிலிருந்து அந்த புத்தகத்தை வாங்குகிறார்.      அந்த புஸ்தகம் நாம் ஒவ்வொருவரும்.      இந்த புஸ்தகம் திறப்பதற்கு பாத்திரவான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் மாத்திரம் தான் நம் இருதய முத்திரையை உடைத்து இருதய கதவைத் திறக்கிறார்.       இந்த இருதயமாகிய உள்ளத்திலிருந்து இந்த மேற்கூறிய புகை எழுகிறது.

இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இருதயமாகிய புஸ்தகத்தை திறந்து நம்மளில் இருக்கிற சகல காரியங்களையும் சோதித்து அறிந்து நம்மை உலக ஐக்கியத்தை விட்டு ஒவ்வொன்றாக உடைத்து, நம்மை கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்படுத்தி கிறிஸ்து நம்முடைய பலிபீடமாக நம்மளில் ஆளுகை செய்கிறவராக வெளிப்படுகிறார்.      அப்போது தான் நம் ஆத்துமாவுக்கு ஒரு இரட்சிப்பை அருளிசெய்கிறார் அதற்குப் பிறகு நம் உலகத்திற்கு ஒரு முடிவு வர வேண்டும்.      எந்த உலக சிற்றின்பங்கள், ஆசை, மோக, இச்சை, பொருளாசை இவைகள் உள்ளத்தில் இருந்தால் நாம் நிர்வாணிகளாக இருக்கிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதைத்தான்,

வெளிப்படுத்தல்: 16:15

இதோ, திருடனைப்போல் வருகிறேன்.      தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

இதைத் தான் தேவன் சீனாய் மலை (கிறிஸ்து) இரத்தத்தால் தோய்த்த வஸ்திரம் இஸ்ரவேலருக்கு இருக்க வேண்டும் என்றும், பலிபீடத்தின் மேல் நிர்வாணம் காணப்படக் கூடாது என்று திருஷ்டாந்தப்படுத்திக் கூறுகிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.     இவ்விதமாக நம் பலிபீடம் பரிசுத்தத்தோடு காத்துக் கொள்ளும் படியாக நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.       

கர்த்தர் யாவரையும் தாராளமாக ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.