தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கலாத்தியர்: 4:31
இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
ஆகார் - அரபு தேசத்து சீனாய் மலை :- மாம்சத்தை புறம்பே தள்ளுதல் :-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் கழிந்த நாளும் தியானித்த வேத பகுதியில் நாம் பார்க்கும் போது மாம்ச இஸ்ரவேலராக எகிப்தின் அடிமையில் இருந்த போது தேவன் நம்மை அடிமையினின்று மீட்டு இரட்சித்து தேவனில் விசுவாசம் வைக்கவும், ஓட்டம் துவங்கமும் செய்த நம் தேவன் பிரயாணத்தில் நம்மை அவருடைய செட்டைகளில் மேல் வைத்து பாதுகாத்து வந்ததையும் அவருடைய உடன்படிக்கை கைக் கொள்ளும் படியான இருதயத்தை உருவாக்கும் படியாக இஸ்ரவேல் சபையை வைத்து நமக்கு திருஷ்டாந்தபடுத்தி, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் நாம் தேவனோடு ஐக்கியபட்டு உடன்படிக்கை எடுத்தால் அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் நீதியும் உண்மையுள்ளவருமாயிருக்கிறார் அவர்களுடைய வஸ்திரம் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் வெளுத்து தோய்க்கப்பட்டத. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று சீனாய் மலை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.
சீனாய் மலையில் தேவன் வந்திறங்குகிறதை பார்க்கிறோம். இஸ்ரவேல் சபை அமலேக்கியனை முறியடித்த பிறகு தான் தேவன் சீனாய் மலையில் இறங்குகிறார்.
சீனாய் மலையை குறித்து தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்றால்,
கலாத்தியர்: 4:22-26
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய் மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.
ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
சாராளை மேலான எருசலேமுக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். அது தான் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. நம்மைப் பெற்றெடுத்தவள் மேலான எருசலேம். அதனால் நாம் எல்லோரும் ஈசாக்கைப் போல வாக்குதத்தத்தின் சந்ததிகளாயிருக்கிறோம்.
கலாத்தியர்: 4:29-30
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
அடிமையானவள் ஆகார் அவளுடைய மகன் இஸ்மவேல் இவர்களுடைய காரியங்களை முந்தின சில மாதங்களுக்கு முன்பு தியானித்தோம்.
ஆபிரகாம் ஆகாரை அனுப்பி விடுகிறான் காரணம் சாராள். ஆனால் கர்த்தரும் அனுப்பி விட சொல்கிறார்.
இவையென்னவென்றால் மேலான எருசலேம் சுயாதினமுள்ளவள், பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் நம் மேல் இறங்கினால், நம்முடைய பழைய சரீரம், இப்பொழுது இருக்கிற எருசலேம் என்று எழுதப்பட்டிருப்பது நீங்கி புதிய சரீரமாகிய, புதிய எருசலேமாகிய கிறிஸ்து நம் உள்ளில் பரிசுத்த மணவாட்டியாக நம் தேவன் நம்மை மறுரூபப்படுத்துகிறார்.
அப்போது நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
அதைத்தான் சீனாய் மலையில் தேவன் இறங்குகிறார். சீனாய் மலை என்பது மாம்சம் என்னவென்றால் அங்கு தான் தேவன் இறங்குகிறார். ஆகார் என்பது அரபு தேசத்திலுள்ள சீனாய் மலை எப்படி என்றால் ஆகாருடைய வீட்டுக்குள் தான் மேலான எருசலேமாகிய சுயாதீனமுள்ளவர் காணப்படுகிறான்.
இவை எதற்கென்றால் எல்லாரும் மாம்சத்தில் தான் உலகில் வருகிறோம் ஆனால் ஆவியானவர் வந்து தான் மாம்சத்தை புறம்பே தள்ளுகிறார். அதே போல் சீனாய் மலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அங்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது. என்னவென்றால் தேவனுடைய வார்த்தையானது மாம்சமாகி கிருபையினாலும்,
சத்தியத்திலும் நிறைந்தவராக நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அதனால் தான்,
எபிரெயர்: 2:14,15
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
எபிரெயர்: 5:7-10
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
என்னவெனில் தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியது சீனாய் மலையில் இறங்கிய தேவன் மோசேயினிடத்தில் இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்தும் படியாகவும் வஸ்திரங்களை தோய்க்கும் படியாகவும் செய்கிறார் என்றால், சீனாய் மலை மாம்சத்தில் உலகத்துக்கு வந்த இயேசு கிறிஸ்துவை திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பது புரிகிறது. அந்த இடத்தில் தேவன் சொல்வது ஜனங்களை ஆசாரிய ராஜ்யமும், பரிசுத்த ஜாதியுமாக்குவேன். இவை எதற்கென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் தேவன் நம்மை பரிசுத்த படுத்துகிறார் என்பது நிச்சயம். அதைத்தான்,
I யோவான்: 4:2-3
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
பிரியமானவர்களே சீனாய் மலையை தேவன் இதற்கு தான் ஒப்புமைப் படுத்துகிறார். மாம்சத்தில் வந்த இயேசுவுக்கு ஆனால் பின்பு தான் மாம்சம் அடிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறது.
அதனால் நாம் எல்லோரும் மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைப் பண்ணுகிறவர்களாயிருக்க வேண்டும்.
அவர்கள் மேல் தேவ ஆவி ஊற்றப்படுகிறது. அதைத்தான்,
யோவேல்: 2:28,29
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
இவ்விதம் தேவ ஆவியினால் மாம்சம் அகற்றப்படுகிறது.
பிரியமானவர்களே இவ்விதமாக மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணி அவர் உயிர்த்தெழுந்த பின்பு, பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறும் படி காத்திருந்தவர்கள் மேல் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறார். இவ்வித ஆசீர்வாதத்தால் தேவன் நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக, ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.