தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 47:8
தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார், தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பாராக.
இஸ்ரவேல் சபை அமலேக்கியனை அழித்து கிறிஸ்து சிங்காசனத்தில் உட்காருகிறார்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் இஸ்ரவேல் சபைக்கு எதிராக அமலேக்கு யுத்தத்துக்கு வந்ததை நாம் தியானித்தோம். காரணம் இஸ்ரவேல் சபை தேவனை பரீட்சைப் பார்த்ததால் தேவன் அமலேக்கை இஸ்ரவேலோடு யுத்தம் செய்ய அனுமதிக்கிறார். காரணமென்னவென்றால் நம் முற்பிதாக்கள் செய்கிற தவறுகள் தலைமுறைகள் அனுபவிப்பார்கள் என்று பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. அன்றைக்கு முற்பிதாக்களின் முதல் பரீட்சை பார்த்தல் தலைமுறை தலைமுறைதோறும் அமலேக்கியன் சிங்காசனத்துக்கு எதிராக இருப்பான். அதனால் தேவன் அந்த சிங்காசனம் என்றைக்கும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து ஆளுகை செய்ய வேண்டும். எல்லா தலைமுறைகளின் உள்ளத்திலும் கிறிஸ்துவின் ஆளுகை உண்டு என்பதை தேவன் நமக்கு வேத வசனம் மூலம் விளக்கிக் காட்டுகிறார், அதற்காகவே மோசே ஆரோனிடம் ஒரு ஒமர் அளவு மன்னாவை தேவ சந்நிதியில் எடுத்துவை அது உங்கள் சந்ததியாருக்காக; காப்பாற்றுவதற்காக என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மன்னா வனாந்திரத்தில் வைத்து இஸ்ரவேல் சபைக்கு கொடுத்த மன்னா. இந்த மன்னா தான் (கிறிஸ்து) ஆனால் இந்த மன்னா புசித்தவர்கள் நடுவில் கிறிஸ்து உண்டு. ஆனால் திருஷ்டாந்தத்தோடு எடுத்துக் காட்டுகிறார் என்றால் தலைமுறைகள் இதை சுதந்தரிப்பார்கள். என்றென்றைக்கும் தாகம் தீர்க்கும் ஜீவ நதியாக கிறிஸ்து கன்மலையாக வெளிப்படுகிறார். ஆனால் இஸ்ரவேலருக்கு தண்ணீர் குறைவுப்பட்டதால் கன்மலையை அடிக்க சொல்கிறார் (திருஷ்டாந்தம்)ஆனால் நமக்கோ அவர் அடிக்கப்பட்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்து. நம்மளில் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவராக இறங்கி அமலேக்கின் சகல காரியங்களை அழித்து அவரே சிங்காசனத்தில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார். இது என்னவென்றால் சாமுவேல் மூலமாக கர்த்தர் சவுலை இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆனால் சாமுவேல் சவுலிடம் சொல்கிறான்,
1 சாமுவேல் 15:2, 3
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல் இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை தொகை பார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம் பேருமாயிருந்தார்கள். ஆனால் சவுல் ஆவலா துவக்கி எகிப்திற்க்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லை மட்டும் இருந்த அமலேக்கியனை மடங்கடித்து,
1 சாமுவேல் 15:8, 9
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்.
இதனை பார்த்த கர்த்தர் சாமுவேலிடம் சொன்னது, நான் சவுலை ராஜாவாக்கினது மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னை விட்டு திரும்பி என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான், என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து இரா முழுவதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். இவ்விதம் தான் நம்மளில் அநேகர் நாம் முதல்தரமான நம் இருதயத்தில் இருக்கிற காரியங்களை அழித்துவிடாமல், மேல் அளவில் கிறிஸ்தவன் என்று சொல்லும்படியாக அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்து போடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் உலகத்தின் விலையுயர்ந்ததும், மேன்மையாக எண்ணுகிற காரியங்களை அழிக்க மாட்டார்கள். இவ்விதம் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமல் சவுலைப் போல ஏமாற்றுகிறார்கள். ஆனால் கர்த்தரை சவுலுக்கு ஏமாற்ற முடியவில்லை. எப்படியென்றால் சவுல் செய்த காரியத்தை சாமுவேலிடம் சொல்லுகிறார் அதுபோல் நாமும் தேவனை ஏமாற்றி வர முடியாது.
அதனால்தான் தேவனாகிய கர்த்தர் எல்லா காரியங்களையும் அமலேக்கின் சகல காரியங்களையும் சிலுவையில் கிறிஸ்துவோடு அறைந்து அவரை உயிர்த்தெழ வைத்து பின்பு அவர் ஆவியால் நம்மை உயிர்ப்பித்து, நம்மை தேவனோடு கிறிஸ்து மூலம் ஐக்கியப்படுத்துகிறார். அதனால் நம் இருதயத்தில் எந்த பொல்லாத சிந்தனையோ, பொன்னோ, வெள்ளியோ, விலையுயர்ந்த பொருட்களோ, பிள்ளைகளோ, குழந்தைகளோ, உற்றார், உறவினரோ, உத்தியோகமோ, பதவியோ, குடும்பமோ மற்றும் உலக வித மேன்மையான காரியங்கள் எல்லாவற்றையும் நாம் கிறிஸ்துவோடு நம் எல்லா மாம்ச சிந்தைகளையும் சிலுவையில் அறைந்து, கிறிஸ்துவின் நீதியாகிய வசனத்தோடு மாத்திரம் ஜீவிக்க வேண்டும். அப்போது அமலேக்கின் கிரியைகளை தேவன் அழித்து என்றென்றைக்கும் கிறிஸ்துவின் சிங்காசனம் நம்மில் நிலைத்திருக்கும். இவ்விதமாக நாம் மாறும்படியாக யாவரும் ஒப்புக் கொடுப்போம், ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக
-தொடர்ச்சி நாளை.