தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளிப்படுத்தல்: 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
பன்னிரண்டு நீரூற்றுகள் (பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி):-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தர் நம் மனதை திறந்து வேத வாக்கியங்களின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் படிக்கு ஆத்துமா உயிர்ப்பிக்கபட்டவர்கள் நடுவில் செய்கிறதை பார்த்தோம். மேலும் நம் பிதாக்களி ன் நாட்களில் அந்த ஆத்துமா உயிர்ப்பு இல்லாததால் அவர்கள் வனாந்தரத்திலே மன்னாவை புசித்தும் அவர்கள் மரித்தார்கள். ஆனால் நாமோ என்றென்றைக்கும் பிழைக்கும்படி வானத்திலிருங்கின அப்பம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் மாம்சமும் இரத்தமும் தந்து நம்மை என்றென்றைக்கும் பிழைத்திருக்கும் படியாக கிருபை செய்கிறவராக காணப்படுகிறார்.
மேலும் கழிந்த முந்தின நாளில் இஸ்ரவேல் சபை ஏலீமுக்கு வருகிறதை நாம் வாசித்தோம்.
ஏலீமில் பன்னிரண்டு நீருற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தது. இதனை நாம் தியானிக்கும் போது ஏலீம் பன்னிரண்டு நீருற்று உள்ள ஒரு இடமாக இருந்தது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தியது. அவர் தான் தேவாலயம், அந்த தேவாலயத்தில் பன்னிரண்டு வாசல்கள் உண்டாயிருந்தது அந்த வாசல்கள் தேவ மகிமை அடைந்திருந்தது. அதுதான் தேவ மகிமையை அடைந்த மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர். அதற்கு திருஷ்டாந்தபடுத்தியது தான் பன்னிரண்டு நீரூற்று. இந்த பன்னிரண்டு தேவ மகிமையை அடைந்த நீரூற்றும் பன்னிரண்டு கற்களாக வெளிப்படுகிறதை பார்க்கிறோம். அதைத்தான்,
வெளிப்படுத்தல்: 21:9-14
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப் போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியனவர் தேவ மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் இதற்கு பன்னிரண்டு பிரகாசமுள்ள கற்கள் (ஜீவ ஊற்று) அதற்கு பன்னிரண்டு வாசல் (ஜீவ வசனம்) வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்கள் இருந்தார்கள். அந்த தூதர்கள் இஸ்ரவேல் கோத்திர பிதாக்கள். ஒவ்வொரு வாசலிலும் பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்கள் (பெயர்கள்) எழுதப்பட்டிருந்தன அந்த மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிலிருந்தன. அந்த அஸ்திபாரம் கற்கள் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்கள் அந்த கற்களின் மேல் அப்போஸ்தலராகிய சீஷர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.
பத்மு தீவில் பரிசுத்த ஆவியானவர் எவ்வித மகிமை அடைந்திருக்கிறார் என்று தேவன் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் சிந்தித்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அன்றைக்கு இஸ்ரவேல் சபை ஏலீமில் பாளயமிறங்கியது அங்குள்ள பன்னிரண்டு நீரூற்றுகளும், பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டிக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.
மேலும் இஸ்ரவேல் சபை ஊற்றில் பாளயமிறங்கினார்கள்
தண்ணீர் குடித்தார்கள். ஆனால் இந்த நாட்களில் நம் உள்ளத்தில் தேவன் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் பன்னிரண்டு வித கனிகளை தருகிறார். ஜீவ ஊற்றாக உள்ளத்திலிருந்து புறப்படுகிறது. இதற்குதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பன்னிரண்டு சீஷர்களை தெரிந்துகொண்டார். மேலும் பந்தியமர்த்தி பன்னிரண்டு கூடை நிறைய அப்பமும், மீனும் மீதி எடுக்க வைத்தார் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் பரிசுத்த நகரத்திற்கு அஸ்திபாரம் போடப்படும் படியாக செய்கிறார்.
மேற்கூறிய எல்லா அனுபவங்களும் நிறைந்து ஜெயித்த கிறிஸ்து பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியாக பரலோகத்தை விட்டு இறங்கி நம் உள்ளத்தில் வருகிறார். அதைத்தான்,
வெளிப்படுத்தல்: 22:1
பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
பிரியமானவர்களே ஏலீமில் பன்னிரண்டு நீரூற்று எதற்கு திருஷ்டாந்தபடுத்தியது என்றால் பரிசுத்த நகரத்திற்கு இந்த நகரமாக தேவன் நம்மை ஆசீர்வதித்தால் தேவனும் ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனம் நம் உள்ளத்தில் அமைக்கிறார். அவ்விதம் சிங்காசனம் அமைத்தால் பன்னிரண்டு விதமான கனிகளும் மற்றும் எந்த வியாதியும் நம்மில் நிற்காது. எந்த சாபமும் நம்மை பின்தொடராது. யாவரும் இவ்வித ஆசீர்வாதத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.