தேவனுக்கு தினந்தோறும் ஆராதனை:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Sep 09, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 86:3

ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

தேவனுக்கு தினந்தோறும் ஆராதனை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் இஸ்ரவேல் சபையுடைய யாத்திரையில் சூர் வனாந்திரத்தில் வந்த போது ஜனங்களுக்கு தண்ணீர் இல்லாதிருந்தது அவர்கள் பின் மாராவில் சேர்ந்தார்கள். அப்போது மாராவின் தண்ணீர் அவர்களுக்கு கசப்பாயிருந்தது அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்தான். அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தை காண்பித்தார்.    அவன் அதை தண்ணீரில் போட்டவுடனே மதுரமாயிற்று.

இவற்றால் நமக்கு தெரியவருவது நம் வாழ்க்கை கசப்பான வாழ்க்கையாக இருந்தால் மதுரமாகிய (கிறிஸ்து) வசனம் நம் வாழ்வில் வந்தால் மதுரமாகி விடும். வற்றாத ஜீவ நதியாக நம் உள்ளத்தில் அவர் ஜீவ தண்ணீர் பொழிந்து கொண்டிருப்பார். நமக்கு தாகமிராது, பசியிராது, வெயிலோ, உஷ்ணமோ படாது எப்படியென்றால் பாவத்தின் அடிமை (எகிப்து) யிலிருந்து மீட்கப்பட்டவர்கள் கட்டளையிட்டிருக்கிற கற்பனை நியமங்கள், நியாயங்களின் படி நடந்து வெண் வஸ்திரம் தரித்து சிங்காசனத்திலிருக்கிறவரை ஆட்டுக்குட்டியானவரை தொழுதுக் கொள்ள வேண்டும்.

இவ்விதம் நாம் தேவனுக்கு கீழ்ப்படிவோமானால் அங்கு பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்ததை பார்க்கிறோம். இஸ்ரவேல் சபை எங்கு வருகிறார்கள் என்றால்,

யாத்திராகமம்: 15:27

பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

ஏலீமை விட்டுப் புறப்பட்டு எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ஏலீமுக்கு சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்தரத்தில் சேர்ந்தார்.                                                                                                அவர்கள் சேர்ந்த இடம் சீன் வனாந்தரமாக இருந்தது.      அதனால் அவர்களுக்கு சரியான ஆகாரம் கிடைக்கவில்லை.       ஏனென்றால் வந்து சேர வேண்டிய இடம் வந்து சேரவில்லை இரண்டு மாதமும் பதினைந்து நாளும் ஆகிறது. இவற்றை தேவன் திருஷ்டாந்தப்படுத்தியது என்னவென்றால் நாம் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்த பிறகு நம் விசுவாச யாத்திரையில் சரியான இடத்தில் தேவனை மகிமைப்படுத்த போய் சேராமல் சரியான சத்தியத்திற்குள் வராமல் இருப்போமானால் நம் வாழ்க்கை வறுமை உடனே வாழ்க்கையில் கஷ்டம் வரும் அவற்றை தான் இங்கு தேவ வசனம் சொல்லுகிறது.

யாத்திராகமம்: 16:2,3

அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

இவ்விதமாக தான் அநேகர் நினைப்பார்கள் மூழ்கி ஞானஸ்நானம் பெற்று விட்டால் இனி கஷ்டமில்லை நன்றாக வாழலாம், சாப்பிடலாம், சுகபோகமாக ஜீவிக்கலாம் என்றெல்லாம் நினைப்பார்கள்.      ஆனால் அது தவறான கருத்து ஞானஸ்தானம் பெற்று, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் அவருடைய கட்டளை, கற்பனை நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் நடந்தால் அவர்கள் பாக்கியவான்கள், பரிசுத்தவான்களாக மாறுவார்கள்.      இவ்வுலக சுக போகமெல்லாம் விட்டு தேவனுக்காக பாடநுவிப்பார்கள் ஏனென்றால் தேவனுடைய ராஜ்யம் புசிப்பம், குடிப்புமல்ல, அது நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகிய சந்தோசமாயிருக்கும்.       அவர்கள் பரலோக வாழ்க்கையை மேன்மையாக எண்ணுவார்கள் அதனால் இஸ்ரவேல் சபைக்கு தேவன் சொல்லுகிறது என்னவென்றால்,

யாத்திராகமம்: 16:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

ஆனால் இந்த அப்பம் வானத்திலிருந்து தான் தேவன் வருஷிக்கப் பண்ணுகிறார். ஆனால் தினம் தினம் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.       இதன் அர்த்தம் என்னவென்றால் வானத்திலிருந்து இறங்கிய அப்பம் அன்றன்று நாம் தேவ சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.      இந்த அப்பம் நியாயப்பிரமாணத்தை குறித்த வார்த்தைகள் என்பது தெரிகிறது.

ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் ஆறாம் நாளிலோ அவர்கள் நாள்தோறும் சேர்கிறதைப் பார்க்கிலும் இரண்டதனையாக சேர்த்து அதை ஆயத்தம் பண்ணி வைக்க கடவார்கள் என்றார்.

ஏனென்றால் ஏழாம் நாள் ஓய்ந்திரு என்று சொன்னதால் ஏழாம் நாளுக்கு வேண்டிய அப்பத்தை ஆறாம் நாளில் இரண்டந்தனையாய் சேர்க்க சொன்னதை பார்க்கிறோம்.       ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (அப்பம்) அவர் உலகத்தில் வருவதற்கு முன்பாக சொன்னது.      ஆனால் அவர் உலகத்தில் வந்த பிறகு ஏழாம் நாளில் அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ததை நாம் சுவிசேஷப் பகுதியில் வாசிக்க முடிகிறது.       நம் தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்த படியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார் இதன் கருத்து என்னவென்றால் அதிலே ஓய்ந்திருந்தார் என்றால் அந்த கிரியைகளில், அந்த கிரியைகளில் என்றால் கிறிஸ்து.  அந்த ஏழாம் நாள் கிறிஸ்து, தேவன் அதை பரிசுத்தமாக்கினார்.      அதுதான் ஏழாம் நாள் பரிசுத்த நாள் என்னப்படுகிறது.

அதைத் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் ஜீவ அப்பம் நானே. அதனால் இப்போது எல்லா நாளும் (தினந்தோறும்) தேவனுக்கு ஆராதனை செலுத்துகிற நாட்களாகி விட்டது.      அதனால் தினந்தோறும் ஆராதனை செய்யவேண்டும் தினந்தோறும் பரலோக மன்னாவை புசிக்க வேண்டும்.

எப்படியெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பஸ்கா ஆட்டுக்குட்டியாக பலியானதினால் நம் ஜீவ அப்பம் அவர் தான்.       அதை தான்  பழைய ஏற்பாட்டில் வானத்திலிருந்து இறங்கிய அப்பம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

லூக்கா: 24:46-53

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.                                                   

என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.      நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.

நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள்.      ஆமென்.

இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நாம் நாள்தோறும் தேவனை ஆராதனை செய்து புகழ்ந்து துதித்து மகிமைப்படுத்த வேண்டும்.      யாவரும் ஒப்புக் கொடுப்போம்.               

ஜெபிப்போம்.      கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                      

-தொடர்ச்சி நாளை.