தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 25:22
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
கடின இருதயம் உடைத்து ஆத்துமாவை விடுவித்தல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் நம்முடைய தேவன் எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை மீட்டெடுத்து நடத்தி வந்தபோது கர்த்தருடைய வல்லமையை கண்ணால் பார்த்த மக்கள் அதிகமாக தேவனை துதித்து மகிமைப்படுத்தினார்கள். விடுதலை பெற்றவுடன் அவர்களுடைய வாழ்க்கையில் கர்த்தருக்கு ஒப்பானவர் யாருமில்லை என்பதை உணர்ந்தவர்கள் அவ்விதமாக பாடினார்கள். இது நம் வாழ்க்கையில் நம் புஸ்தகமாகிய உள்ளத்தில் இருக்கிறது என்பதை நாம் கழிந்த நாளில் தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் கூட நாம் தியானித்தோம். என்னவென்றால் தரிசனத்தை காண்பித்த தேவன் சொல்கிறார் இந்த தரிசனத்தை மறைத்து வை. அதற்கு இன்னும் நாட்கள் செல்லும் என்று சொல்லுகிறார் என்றால், எங்கு மறைத்து வைக்க முடியும் கண்ட சொப்பனம் உள்ளத்தில் தான் மறைத்து வைக்க முடியும்.
அதற்கு இன்னும் அநேக நாட்கள் செல்லும் என்று சொல்வது மேசியா வருவதற்காக என்பது தெரிகிறது. மேசியா வருகிறார் என்றும் அவர் சங்கரிக்கப்படுவார் என்றும் தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
தானியேல்: 9:27
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
இதனை நாம் தியானிக்கும் போது சொப்பனம் உள்ளத்தில் தான் மறைத்து வைக்க சொல்கிறார். மீண்டும் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட பலியையும், காணிக்கையையும் கர்த்தர் இனி விரும்பவில்லை என்று தீர்க்கதரிசிகள் மூலம் சொல்கிறார்.
ஏனென்றால் இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் ஆனால் இஸ்ரவேலர் இருதயத்தில் பல அருவருப்புகளை வைத்து விட்டு பாகால் தெய்வங்களையும், வைத்துக்கொண்டு உலகத்தோடு வேஷம் தரித்து காணிக்கையையும், பலியையும் செலுத்தினார்கள். அதனால் தேவன் சொல்கிறார் உங்கள் பலியையும், காணிக்கையையும் நான் அங்கீகரிக்க மாட்டேன் எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்கிறார். அதனால் தாவீது தன் பாவத்தை உணர்ந்தவனாக,
சங்கீதம்: 51:16-19
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
இவற்றிலிருந்து தெரிய வருகிறது என்னவென்றால் மேசியா நமக்காக சங்கரிக்க படுவார். பாழாக்குகிறவன் (சாத்தான்) நிர்மூலமாகுமட்டும் அவருடைய இரத்தம் நம் இருதயத்தில் சொரிந்து கொண்டிருக்கும். இவ்விதமாக திருஷ்டாந்தத்திற்காக மேசியாவாகிய கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி அவரை சங்கரித்து அவர் அடக்கம் பண்ணப்பட்டு, பின் உயிர்த்தெழுந்த கிறிஸ்து நம் உள்ளில் தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கும் பொருட்டாக வேத வசனத்தின் பிரகாரம் கிறிஸ்துவை நம்மளில் எழுப்பி நமக்கு தேவனை பற்றியதான அறிவை உணர்த்தும் படியாக நம் தேவன் நம்மளில் செயல்படுகிறார். அதன் பிறகு நம்மக்குள்ளில் அவர் பிரியமாயிருக்கிறார். நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரே தரம் பலியாகிறார். அதைதான் தேவன் சொப்பனத்தை இருதயத்தில் மறைத்து வை என்பதும், தானியேலின் முடிவு காலம் மட்டும் இந்த வார்த்தைகளை புதைப் பொருளாக வைத்து வைத்து இந்த புஸ்தகத்தை முத்திரை போடு என்று சொல்கிறார். இந்த வார்த்தை என்றால் கிறிஸ்து
தானியேல்: 12:1,2
உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
பூமியின் தூளில் நித்தனை பண்ணுகிறவர்கள் என்றால் நம் சிறைப்பட்ட நம் ஆத்துமாவைக் குறித்து தேவன் சொல்கிறார். நம்மில் எகிப்து இருந்தால் நாம் பூமியின் தூளில் தான்
நித்திரையாயிருக்கிறோம். ஆனால் அவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் என்று சொல்லும்போது பரிசுத்தவான்கள்- பரிசுத்தவான்கள் எருசலேமின் தரித்திருந்தவர்கள் (கிறிஸ்துவை தரித்தவர்கள்) அவர்கள் உள்ளம் ஆஸ்தி, மேன்மை சகலத்தையும் விட்டு ஓய்ந்திருப்பார்கள். அவர்கள் தான் கிறிஸ்துவை தரித்தவர்கள்.
அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறார். சில நித்திய ஜீவனுக்கும் சிலர் நித்திய நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
அவற்றை குறித்து தான் தேவன் சொல்கிறார் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாக காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். இவ்விதமாக கிறிஸ்து மூலம் தேவ வசனம் நம் இருதய கதவை உடைத்து தேவன் நித்திரையாயிருக்கிற நம் ஆத்துமாவை விடுவித்து, அவர் தேசமாகிய கானானை நோக்கி நடத்திச் செல்கிறார். ஆனால் தேவ சத்தம் கேட்காமல் அல்லது கேட்டும் எகிப்தை அடைக்கலமாக வைத்தவர்கள் சமுத்திரத்தில் அமிழ்ந்து போகிறார்கள். அதுதான் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தினால் அழிந்து போகிறான் என்று ஆண்டவருடைய வார்த்தை கூறப்படுகிறது.
ஆனால் தேவன் தானியேலிடம் இந்த வார்த்தைகளை புதைப் பொருளாக வைத்து முத்திரை போடு என்றும், நம் உள்ளத்தை கிறிஸ்து திறப்பார் என்பதற்காக தேவன் இப்பூமியில் கிறிஸ்துவை அனுப்பி அவர் மரித்த பிறகு கல்லறையின் மேல் முத்திரை போட்டு அவர் அந்த முத்திரையை உடைத்து உயிர்த்தெழுந்ததை பார்க்கிறோம். இவை தேவன் காட்டுகிற திருஷ்டாந்தம்.அவை நமக்கு எகிப்து பார்வோனுடைய கடின இருதயத்தை உடைக்க கிறிஸ்து யூத ராஜசிங்கமாக வெளிப்படுகிறதை பார்க்கிறோம்.
இவ்விதமாக தேவன் நம் ஆத்துமா தூளில் நித்திரையாக இருந்தால் நித்திய ஜீவனுக்கென்று எழுப்புகிறார்.
இவ்விதமாக நித்திய ஜீவனுக்கென்று எழும்பினவர்கள் இஸ்ரவேலராக தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.
இஸ்ரவேலர் விடுதலையான போது,
யாத்திராகமம்: 15:21
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
இவ்விதமாக நம் விசுவாச ஓட்டத்தில் வெற்றி பெறுவோம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.