தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

II கொரிந்தியர்: 2:15

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,  நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

எகிப்திலிருந்து மீட்கப்பட்டால் கர்த்தருக்கு ஒப்பானவர் யாருமில்லை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் நீங்காத நித்திய கர்த்தத்துவம் அணிந்த கிறிஸ்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எவ்விதம் நம் உள்ளில் என்றென்றைக்கும் அழியாத நித்திய ராஜ்யம் ஸ்தாபித்து ராஜரீகம் செய்கிறார் என்பதை நாம் தியானித்தோம்.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களில் தானியேலுக்கு தேவன் சொப்பனம் கொடுத்து கர்த்தர் சொல்கிறார்.

தானியேல்: 8:26 

இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

கர்த்தர் இந்த தரிசனத்தை தானியேலிடம் மறைத்து வைக்க சொல்கிறார்.    காரணம் இது சம்பவிக்க அநேக நாள் செல்லும் என்றார்.    மேலும்,        

தானியேல்: 12:4

தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

பின்பு தானியேல் ஆற்றின் இரண்டு கரையிலும் இரண்டு பேர் நிற்கிறதை காண்கிறான்.

தானியேல்: 12:6-7

சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.

 அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.

நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்:   என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த முத்திரையை உடைப்பதற்கு தகுதியுள்ளவர் அவர் காலம் செல்லும் அந்த காலம் வரையும் இது புதைப் பொருளாக வைக்கப்பட்டிருக்கும்.

இது எவற்றை காட்டுகிறது என்றால் நாம் ஒரு புஸ்தகம்.    .முத்திரிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதன் முத்திரை உடைப்பதற்கு தகுதியானவர் வரும் காலம் வரையும் தரிசனம் மறைக்கப்பட்டிருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.      அதை தான் தேவன் பத்மு தீவில் யோவானுக்கு வெளிப்படுத்தினார்.

வெளிப்படுத்தல்: 4:2-7

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ,  வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது,  அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.


வீற்றிருந்தவர்,  பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன;  தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது;  அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன,  அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும்,  இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும்,  மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும்,  நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

பிரியமானவர்களே முந்தின தேவ வசனத்தில் எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் எல்லாம் நம் உள்ளத்தை திறக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய உள்ளத்தில் பிரவேசித்து சிங்காசனம் அமைத்து நம்மளில் இருந்து பிரகாசிக்கிற தேவனாயிருக்கிறார்.

இவ்விதமாக கிறிஸ்து நம் உள்ளத்தில் பிரவேசித்தால் உள்ளத்தில் இருக்கிற எல்லா அசுத்தங்களையும் அழித்து விடுவார்.

யாத்திராகமம்: 15:11-18

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்;  உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.

ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும்.     கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்து போகும் வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

நீர் அவர்களைக் கொண்டுபோய்,  கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும்,  ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார்.

வெளிப்படுத்தல்: 4:8

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன.  அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

இவையெல்லாம் நம் ஆத்துமா பெலன் அடைந்து தேவனை துதிக்கும் தொனியாக இருக்கிறது. இது எப்படி வருமென்றால் நம் இருதயத்தில் உள்ள மிருகங்கள் அழிக்கப்படும் போது தான் நம் ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவனை அடையும்.

இவற்றை எகிப்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

யாத்திராகமம்: 15:12,13

நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.

பெலிஸ்தியர், ஏதோம், மோவாப், கானான் இவ்வித ஜாதிகளின் கிரியை தேவன் கரைய பண்ணுகிறார்.

பயமும், திகிலும் அவர்கள் மேல் விழும் கர்த்தாவே உமது ஜனங்கள் கடந்து போகும் வரை கடந்து போகும் வரையும், நீர் மீட்ட ஜனங்கள் கடந்து போகும் வரையும் அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப் போல் அசைவற்றிருப்பார்கள்.

நீர் அவர்களை கொண்டு போய் கர்த்தராகிய தேவரீர் வாசம் பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும் ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

கர்த்தர் சதா காலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார்.

பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும்,  குதிரை வீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்து;  கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்ப பண்ணினார். இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையில் நடந்து போனார்கள் என்று பாடினார்கள்.

இவ்விதம் இஸ்ரவேலர் பாடினார்கள் என்றால் நம் வாழ்க்கையில் நம் ஆத்துமாவுக்கு விரோதமாக எழும்புகிற எல்லா துஷ்ட மிருகங்களும் பயப்படத்தக்க அளவில் தேவன் நம்மை அவருடைய வலது கரத்தினால் இரட்சித்து தம்முடைய புயத்தினால் ஆளுகை செய்து அத்தனை தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நம்மளில் இருந்து அகற்றி பரிசுத்த ஸ்தலமாகிய கிறிஸ்துவில் நம்மை நாட்டுவார்.

பிரியமானவர்களே நாம் யாவரும் நாட்டபட்ட அனுபவத்தை கண்டடைய வேண்டும்.      ஜெபிப்போம்.

ஒப்புக் கொடுப்போம் கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                      

-தொடர்ச்சி நாளை.