தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

லூக்கா: 1:52

பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.       அல்லேலூயா.

 பெருமையை அகற்றுதல் [நீங்காத நித்திய ராஜ்யம்]

கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் தானியேலுக்கு தரிசனத்தில் சமுத்திரத்தில் உள்ள மிருகங்கள், வானத்தின் நாலு காற்றுகளால் சமுத்திரத்திலிருந்து எழும்புகிறதை தியானித்தோம். அவ்விதம் தேவன் திருஷ்டாந்தப்படுத்தியது வானத்தின் காற்றுகளால் கிறிஸ்துவின் நதியாகிய (நீதி, நியாயம்) தேவ வசனமாகிய பரிசுத்த ஆவியானவரால் நான்கு தோற்றங்களில் நம் உள்ளமாகிய (சமுத்திரத்தில்) அடித்து உள்ளத்தில் உள்ள மிருகங்கள் (உலக, மாமிசம், பிசாசு, பெருமை) இன்னும் பல துர்கிரியைகளை நீக்குவதற்காக தேவன் நம் உள்ளத்தில் சிங்காசனம் அமைக்கிறார்.     அதைத்தான்,

தானியேல்: 7:9-12

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைபோலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.                                                                     

மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

மேற்க்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (தேவனுடைய ராஜ்யம்) பலமாக நம்மளில் இறங்கி முந்தின நாளில் நாம் தியானித்த அத்தனை மிருக சுபாவங்களை சகலத்தையும் மாற்றும்படியாக,  அவருடைய சிங்காசனத்தை நம் உள்ளத்தில் ஸ்தாபிக்கிறார்  

தானியேல் 7: 10,11 அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பிரியமானவர்களே தேவன் தம்முடைய ஜனங்கள் ஒவ்வொருவர் நடுவிலும் ஆளுகை செய்வார் என்பதை தானியேலுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

கர்த்தர் நம் நடுவில் (உள்ளத்தில்) ஆளுகை செய்கிறார். எப்படியென்றால் நம் நடுவில் அவருடைய சிங்காசனம் வைக்கப்படுகிறது.     சிங்காசனம் என்பது அவருடைய நீதியும், நியாயமும் தான் அதுதான் சிங்காசனத்தின் ஆதாரம் அதில் நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்.    அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் தீர்க்காயுசை பெற்றிருந்தார்.     மரித்து உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை.    அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். நம்முடைய மற்ற வாழ்க்கை யாவும் நம்மை விட்டு அகன்று போகும்.  அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும் அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலவும் துப்புரவாகவும் இருந்தது.    அவர் உடுத்தியிருந்த உடுப்பு (வஸ்திரம்) பரிசுத்தமாயும் அவருடைய சகல எண்ணங்களும் வெண்மையாகவும் (தூய்மையுள்ளதாயும் இருக்கும்) அவருடைய சிங்காசனம் (நீதி, நியாயம்) அக்கினி ஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.    அவர் ஜனமாகிய நாம் அவர் கிரியை நம்மளில் வரும்போது எரிகிற நெருப்பமாயிருக்கிறது.

எல்லாம் தேவனுடைய வார்த்தையாக இருப்பதால் அது அக்கினியாக நதியாக ஓடுகிறது.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையானது அக்கினியானது.     அந்த அக்னியானது நதியாக ஓடுகிறது அந்த நதி எல்லா இடமும் ஓடுகிறதால் ஆயிரமாயிரம் பேர் அவரை சேவிக்கிறார்கள்.     கோடா கோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்.     நியாயசங்கம் உட்கார்ந்து புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

பிரியமானவர்களே தேவனுடைய வார்த்தையானது உள்ளத்திலிருந்து ஓடுவதால் அது எல்லா   அவயவங்களிலும் கிரியை செய்யும்.    மேலும் நம் வாய் தேவனுடைய வாயாக, நாவாக, உதடாக இருப்பதால் அந்த வாயிலிருந்து தேவனுடைய வார்த்தை எல்லா தேசங்களிலும், எல்லா இடங்களிலும், கடந்து செல்கிறது.  தானியேல் சொப்பனத்தில் பார்க்கும்போது சேவித்தவர்கள் ஆயிரமாயிரம் பேர் தான்.     இது எதைக்காட்டுகிறது என்றால் தேவனுடைய வார்த்தை உத்தமமாய் நடக்கிறவர்கள் என்னை சேவிப்பார்கள் கபடு செய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை.

என்னவென்றால் நாம் எத்தனை நேரம் தேவனை சேவித்தாலும் உத்தமமாய் சேவிக்கிறவர்கள் தான் தேவனை சேவிக்கிறார்கள். மற்றபடி மாயையை சார்ந்து பொய்யாக வார்த்தைகளை சொல்லுகிறவர்கள், நடக்கிறவர்கள், அவரை சேவிக்கவில்லை என்று நமக்கு அழகாக விளங்குகிறது.

சத்தியம் இல்லாமல் (மாயையோடு) இருப்பவர்கள் நடுவில் நியாயசங்கம் உட்காருகிறது.    அப்போது புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.    அந்த புஸ்தகம் நாம் ஒவ்வொருவரும்.   அந்த புஸ்தகம் தேவன் நம் உள்ளத்தை, நியாய சங்கம் உட்காரும் போது திறக்கிறார்.

பின்பு நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தக் கொம்பு பெருமையானவைகளை பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது.

இந்த வார்த்தையானது நாம் சிந்திப்போம் எல்லா மனுஷர்களுடைய வாழ்க்கையிலும் பெருமை என்ற ஒரு கொம்பு உயருகிறதை பார்க்கிறோம்.     நாம் கர்த்தரை தொழுதுக் கொள்ளும் போது, தேவன் நம்மை சீர்தூக்கி பார்க்கும் போது தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்கிற இருதயத்தில் உள்ள பெருமையை அகற்றிப்போடுகிறார். ஒப்புக்கொடுக்காத உள்ளங்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.

நம் உள்ளம் திறந்த புஸ்தகமாக தேவனுக்கு முன்பாகவும் நியாயசங்கத்திற்கு முன்பாகவும் காணப்படுகிறது.     தேவன் அதனை திறந்தால் யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ, அடைக்கவோ முடியாது.     தேவனுக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லை.    நாம் திறந்த புஸ்தகமாக தேவனுக்கு முன்பாக காணப்படுவோம்.

தானியேல்: 7:11-12

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

பிரியமானவர்களே இவ்விதமாக தேவன் நம் உள்ளத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ராஜரீகம் கொடுத்து, கர்த்தத்துவமும் கொடுத்து, அது நீங்காத நித்திய கர்த்தத்துவமும் கொடுத்து அழியாத ராஜ்யமாக தேவன் அவருடைய அனைத்து ஜனங்களும் அவரையே சேவிக்கும்படி செய்கிறார்.     இவ்விதமான வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டு நீங்காத நித்திய ராஜ்யம் நம்மிடத்தில் வர நாம் யாவரும் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

 -தொடர்ச்சி நாளை.