தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா: 42:10

சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

வானத்தின் நாலு காற்றுகள்:- விளக்கம் உள்ளத்தில் மிருகங்கள் அழித்தல்:- ( மாம்ச கிரியை )

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் இஸ்ரவேலை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து இரட்சித்தப்போது தேவனைத் துதித்து பாடினதை நாம் வாசிக்க முடிகிறது.     எகிப்தியர் எல்லோரும் செத்துக் கிடக்கிறதை கண்டபோது அவர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் துதிப்பாடல் எழும்புகிறது.

அது வரையிலும் பலவித கண்ணியிலும் நெருக்கத்திலும் வாழ்ந்த இஸ்ரவேல் சபைக்கு ஒரு அருமையான மீட்பை தேவன் கட்டளையிட்டார்.     அதுபோல் நம் வாழ்விலும் உள்ளத்தில் உள்ள பல தோற்றங்கள் (தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள்) இவற்றை தேவனுடைய காற்றை வீசப்பண்ணி அதை அழித்து தேவனுடைய நீதி என்றென்றைக்கும் நம் உள்ளத்தில் ஜீவன் பெற்று நிலைத்திருக்கும்படி செய்கிறார்

கர்த்தர் தானியேலுக்கு கொடுக்கப்பட்ட சொப்பனத்தில் நான்கு விதமான வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் எழும்புகிறதை பார்க்கிறோம்.    இது எங்கிருந்து எழும்புகிறது என்றால், சமுத்திரத்திலிருந்து சமுத்திரம் என்றால் நாம் சரியான இரட்சிப்பு இல்லாமல் இருக்கிற நம்முடைய உள்ளங்கள் இந்த சமுத்திரம்.உலகத்தாருடைய உள்ளம்.     அதைத்தான் பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்தில் தானியேல் கண்ட சொப்பனம் தேவன் இவ்விதமாக சொப்பனம் கொடுத்து நம் ஆத்துமாவை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.     என்னவென்றால் வானத்தின் நாலு காற்றுகளும் சமுத்திரத்தின் மேல் அடித்தது.    இந்தக் காற்றானது நான்கு சுவிசேஷத்தின் கிறிஸ்துவின் வசனம்.     

இந்த வசனம் நம் உள்ளில் வரும்போது, நம் இருதயத்தில் மாற்றங்கள் உண்டாகும்.

வெளிப்படுத்தல்: 14:6,7

பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.

நித்திய சுவிசேஷத்தை உடையவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் சத்தம் பெரு வெள்ளத்தின் இரைச்சலை போன்ற சத்தம் அவர் எப்போதும் நம்மை நியாயத்தீர்ப்புக்குள் நடத்துகிறவர்.     அவருடைய நியாயத்தீர்ப்பு நம் ஆத்துமாவில் நடக்கும் நாம் எப்படி தேவனை தொழுது கொள்கிறோமோ? இல்லை வேறே தேவர்கள் நம் ஆத்மாவில் கிரியை செய்ய இடம் கொடுக்கிறோமா? என்பதை எல்லாம் நம் உள்ளத்தில் நன்றாக நியாயத்தீர்ப்பு செய்து தான் ஆத்துமாவுக்கு சந்தோஷம் தருகிறார்.     அதனால்தான் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாயிருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.     வேறு தேவர்களுக்கு, தேவ இரட்சிப்பை பெற்றவர்கள் இடம் கொடுக்கிறார்களா என்பதை தேவன் உற்று கவனிக்கிறார்.

சங்கீதம்: 53:1-4

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை. அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தேவன் தங்கள் இருதயத்தை சீர்திருத்தும்படியாக வானத்தின் நாலு காற்றுகளை அடிக்க வைக்கிறார். அதில் சமுத்திரமாகிய உள்ளத்திலிருந்து புறப்படுகிறது,

தானியேல்: 7:4-8

முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக் கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.

அதின் பின்பு, சிவிங்கியைப் போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின் மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.

அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்று பிடுங்கப்படது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.

மேற்கூறிய வசனங்கள் நான்கு வகை மிருகங்கள் மனஷனுக்குள்ளிருக்கிறதால் நித்திய சுவிசேஷத்தை உடையவராக வானத்தில் பறந்து வந்து நான்கு காற்று சுவிசேஷத்தின் வசனமாக நம் உள்ளில் அடித்து ஒவ்வொரு மிருகங்களாக ( நம் மாமிச, உலக இச்சை, பெருமை இப்படிப்பட்ட சுபாவங்கள் ) தேவனால் வெளியாக்கப்படுகிறது.

இவற்றை தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். ஆனால் சுவிசேஷத்தை உடைய இயேசு கிறிஸ்து இதின் சுபாவத்தை நம்மளில் இருந்து அகற்றி தேவனுடைய வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளிச் செய்கிறார்.

இந்த நாலு காற்றும் ( கிறிஸ்து ) நம் துன்மார்க்க இச்சையாகிய உள்ளத்தில் பலமாக இறங்கி வந்து நம்மை விடுவிக்கிறார்.     விடுவித்து ஆத்தும இரட்சிப்பை தருகிறார்.

இதனைக் குறித்து தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்துகிறார்.    மேலும் யோவானுக்கு பத்மு தீவில் வெளிப்படுத்துகிறார்.     இதன் கருத்துக்கள் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் தியானிப்போம்.    இவ்விதம் தேவன் நம்மை விடுவிக்கும் படியாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.             ஜெபிப்போம்.       கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார். 

-தொடர்ச்சி நாளை.