தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 20:9
கர்த்தாவே,
இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
நம்
உள்ளத்தில் புது எழுச்சி உண்டாகுதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில்
நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் எகிப்தியர்களை சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டதையும்,
இஸ்ரவேலர் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டதையும் பார்த்தோம். இவ்விதம் கர்த்தர் செய்த மகத்தான கிரியைகளை இஸ்ரவேலர்
கண்டதால் அவர்கள் கர்த்தருக்கு பயந்து அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம்
வைத்தார்கள்.
இதிலிருந்து
நாம் தெரிந்து கொள்ளலாம் கர்த்தர் எகிப்தில் செய்த சகல கிரியைகளினாலும் தேவனுடைய நாமம்
பார்வோன், அவனுடைய சேனைகள் மற்றும் எகிப்தியர்கள் மூலம் மகிமை படும்படியாகவும் தேவன்
செய்கிற அற்புதங்களையும், அடையாளங்களையும் எகிப்தியர் கண்டு கர்த்தருக்கு பயப்படும்படியாகவும்
பார்வோனை முழுமையும் எகிப்திலிருந்து அழிக்கும் படியாகவும் மேலும் இஸ்ரவேலருக்கு கர்த்தரை
பற்றும் பயம் அதிகமாகயிருக்கும்படியாகவும் அவர்கள் தேவனை அதிகமாக விசுவாசிக்கும் படியாகவும்
தேவன் எகிப்தில் பல காரியங்களைச் செய்தார் என்பது விளங்குகிறது.
சமுத்திரத்திலிருந்து
கரையேறின போது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் புகழ்ந்து பாடின பாட்டு;
கர்த்தரை பாடுவேன்,அவர்
மகிமையாய் வெற்றி சிறந்தார். குதிரையையும், குதிரை வீரனையும் கடலிலை தள்ளினார். கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர், அவர்
எனக்கு இரட்சிப்புமானவர் அவரே என் தேவன் அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன். அவரே என் தகப்பனுடைய தேவன். அவரை உயர்த்துவேன். கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம். பார்வோனின் இரதங்களையும்
அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார். அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில்
அமிழ்ந்து போனார்கள். ஆழி அவர்களை மூடிக்கொண்டது;
கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள். கர்த்தாவே,உம்முடைய வலதுகரம் பலத்தினால்
மகத்துவம் சிறந்திருக்கிறது. கர்த்தாவே,உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்துவத்தின்
மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினார். உம்முடைய
கோபக்கினையை அனுப்பினீர். அது அவர்களை தாளடியைப் போல் பட்சித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது. ஆழமான
ஜலம் நடுகடலிலே உறைந்து போயிற்று.
இவ்விதமாக இஸ்ரவேல்
ஜனங்கள் சமுத்திரத்தை கடந்து வந்தபோது தேவனை மகிமைப்படுத்தி பாடுகிறார்கள். இந்த
பாட்டாவது தேவன் இஸ்ரவேலரை எகிப்தியர் துரத்தி வரும் போது மீட்ட விதமாவது; தொடருவேன்,
பிடிப்பேன், கொள்ளயிடுவேன் பங்கிடுவேன் என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும் என்
பட்டயத்தை உருகுவேன், என் கை அவர்களை சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான் என்றால்,
நம்முடைய வாழ்வில்
பகைஞன் யார்? உலகம்,மாமிசம், பிசாசு இவை என்ன செய்கிறது, நம் உள்ளத்தில் தேவனுடைய வசனம்
முளைத்து பலன் தர விடாதபடி இவ்விதமான கிரியைகள் நெருக்குகிறது. அதனால் அதன் மேல் தேவன்
அவருடைய காற்றை வீச செய்கிறார். அதனால் உள்ளத்தின் பகைஞன் அழிக்கப்படுகிறான். தேவன் நமக்கு பழைய ஏற்பாட்டில் சமுத்திரத்தில்
எகிப்தியனை அழித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
இதைத்தான் ஏசாயா
தீர்க்கதரிசிக்கு தேவன் வெளிப்படுத்துவது.
ஏசாயா: 40:1
என் ஜனத்தை
ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப்
பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
பிரியமானவர்களே
இந்த வசனமாவது ஒரு மனுஷன் (ஆத்துமா) விடுவிக்கப்படுவதை காட்டுகிறது. மற்றபடி உலகத்திலுள்ள எருசலேமின் யுத்தம் அல்ல
என்று நினைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் பரலோகம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கம்
பண்ணுகிறார். மேலும் நம் வாழ்வில் உள்ளத்தில் புதிய எருசலேம் வருவதற்காக பழைய வாழ்க்கையோடு
ஒரு யுத்தம் உண்டு. இந்த யுத்தம் செய்கிறவர்
நம் கர்த்தர் அந்த யுத்தம் தான் போர் முடிந்தது என்றும். அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும் எல்லா
பாவங்களினிமித்தம் கர்த்தரின் கையில் இரட்சிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும் தேவன்
சொல்கிறார் என்றால், இவ்விதம் நம் உள்ளம், ஒரு புது வாழ்வு, புது உணர்வு வந்தால் நமக்கு
ஆறுதலும், தேறுதலும் உண்டாகும்.
இதைத்தான் என்
ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதற்கு பின்பு தான் கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்க
வாய்ப்பு உண்டு; அதை தான் அவருக்கு வழியை செவ்வைப்படுத்துங்கள். அப்போது
பள்ளமெல்லாம் உயர்த்தப்படும் சகல மலையும், குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி
கரடுமுரடானவைச் சமமாக்கப்படும்.
இவ்விதம் நம்
வாழ்க்கையில் உள்ள ஆவிக்குரிய வாழ்க்கை நேராக்கபடும் என்பதை காட்டுகிறது. அவற்றை இஸ்ரவேல் சபையார்,
யாத்திராகமம்: 15:10
உம்முடைய காற்றை
வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம் போல அமிழ்ந்து
போனார்கள்.
ஏசாயா: 40:7,8
கர்த்தரின்
ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
புல் உலர்ந்து
பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
பிரியமானவர்களே
மேற்கூறிய வசனத்தின் கருத்து தான் கர்த்தர் எகிப்தியனை அழித்து இஸ்ரவேலே மீட்டு எடுக்கிறார்.
என்னவென்றால்
நம் உள்ளத்தில் உள்ள உலக மேன்மையை அழித்து நம் கிறிஸ்து என்றென்றைக்கும் (நீதி) நிலைத்திருக்கும்.
மேலும் இந்த
காரியங்களைக் குறித்து தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட சொப்பனம் பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின்
முதலாம் வாரத்தில் தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையில் தன் தலையின் மேல் தோன்றின
தரிசனங்களையும் கண்டான். அந்த சொப்பனத்தை எழுதி விவரிக்கிறான்.
வானத்தின் நாலு
காற்றுகளும், பெரிய சமுத்திரத்தின் மேல் அடித்தது,
அப்பொழுது வெவ்வேறு
ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின இந்த நாலு பெரிய மிருகங்கள்
1) சிங்கத்தைப்
போல் இருந்த மிருகம்.
2) கரடிக்கு
ஒப்பாக இருந்த மிருகம்.
3) சிவிங்கியை
போலுள்ள மிருகம்.
4)கெடியும்,
பயங்கரமும் மகா பலத்த பத்து கொம்புள்ள மிருகம்.
பிரியமானவர்களே இதன் விளக்கம் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் தியானிப்போம். இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம் வாழ்விலும், நம் உள்ளத்தில் உள்ள பகைஞர் அழிக்கப்பட்டு புதுவாழ்வு, புது உணர்வு தேவன் நமக்குத் தந்து இஸ்ரவேலரை போல நம் நாவில் புது பாடல் எழும்ப நாம் யாவரும் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர்
யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.