தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 16:7
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
இஸ்ரவேல் தேவனோடு ஐக்கியப்படுவதன் கருத்து:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்தான வேதபகுதியில் கர்த்தர் எகிப்தியர் (மாம்சம்) இஸ்ரவேலரை (ஆவியை) தொடாதபடி இரண்டிற்கும் இடையே மதிலாக ஜலம் வெளிப்படுவதை பார்த்தோம். எப்படியெனில் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேலரை தேவன் பாதுகாக்கிறது எப்படியென்றால் அவர்கள் சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையில் நடந்து போகும்போது அவர்கள் வலப்புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது இஸ்ரவேலர் யாத்திரையில் தேவனுடைய வசனம் தான் ஜலம் (கிறிஸ்து) அவர்களுக்கு வலது புறமும், இடது புறமும் மதிலாக நிற்கிறது.
அப்பொழுது எகிப்தியர் அவர்களை தொடர்ந்து பார்வோனுடைய சகல இரதங்களோடும், குதிரைகளோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.
இருதரத்தாரும் சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். இது எவற்றை காட்டுகிறது என்றால் எல்லோரும் சமுத்திரத்தின் வழியாக தான் பிரவேசிக்க வேண்டியிருக்கிறது. சமுத்திரம் என்பது உலகமாகிய துன்மார்க்கம் ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை கர்த்தர் அக்கரை சேர்க்கிறார். மற்றவர்கள் அந்த துன்மார்க்கத்தினால் அழிந்து போகிறார்கள்.
அது போல் நம் உள்ளத்திலும் தேவன் துன்மார்க்கமாகிய உலகத்தை மாற்றி முழுமையும் தேவனுடைய ஆவியினால் நிரப்புகிறார். இவை எப்பொழுது சம்பவிக்குமென்றால்,
யாத்திராகமம்: 14:24-28
கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,
அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.
கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள் மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
நாம் தேவனோடு உள்ள ஐக்கியத்தில் தடையாக வருவது பார்வோனும் அவனுடைய சேனையும் இது என்னவென்றால் உலக வாழ்க்கையாகிய ஆடம்பரம், உலக கல்வி, உலக மேன்மை, உலக ஐசுவரியம், சம்பத்து இவையெல்லாம் நம் உள்ளத்தில் இருந்தால் தேவனோடு முழுமனதோடு ஐக்கியப்படுவதற்கு இவைகள் தடையாக இருக்கும். அப்பொழுது நாம் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவனுடைய பாதத்தில் இருப்போமானால் கர்த்தர் அந்த வேளையில் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து அவர்கள் சேனையை கலங்கடித்து,
இந்த காரியங்களை எல்லாம் நம் உள்ளத்திலிருந்து மாற்றி விடுகிறார். இவைகள் எல்லாம் இஸ்ரவேலை விட்டு ஓடி போகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.
இவைதான் கர்த்தர் இஸ்ரவேலருக்காக துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார். அப்படியே தேவன் துன்மார்க்கர் நம் உள்ளத்தில் இல்லாதபடி கவிழ்த்து போடுகிறார்.
அதோடு கூட அத்தனை உலக பெருமை,அந்தஸ்து, மேன்மை, செல்வம், சம்பத்து எல்லாமே அழித்துவிட்டு இஸ்ரவேலை மட்டும் விடுவிக்கிறார்.
இவை எதனால் சம்பவிக்கிறது என்றால் கையில் உள்ள கோலால் (வசனம்) இந்த வசனத்தால் மாம்சத்தை அழிக்க வேண்டும் அந்த வசனம் நமக்கு எப்போதும் இரட்சிப்பாக நிற்கும்.
யாத்திராகமம்: 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
பின்பு இஸ்ரவேலர் தேவனோடு ஐக்கியப்பட முடியும்.
நீதிமொழிகள்: 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.
நீதிமொழிகள்: 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
நீதிமொழிகள்: 28:28
துன்மார்க்கர் எழும்பும் போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
பிரியமானவர்களே நம்முடைய தேவன் எகிப்தியரை சமுத்திரத்தில் கவிழ்த்து போடுகிறதை பார்க்கிறோம். இவை எதற்கென்றால் இஸ்ரவேலருடைய உள்ளத்தில் துன்மார்க்கமான எகிப்தின் கிரியைகள் பெருகிக் கொண்டே இருப்பதால் அதனை முழுமையும் அழித்து போடுகிறார், எப்படியென்றால்,
நீதிமொழிகள்: 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
நம் உள்ளத்தில் எழும்புகிற துன்மார்க்கத்தை குறித்து தேவன் சொல்கிறார்.
சங்கீதம்: 37:34-36
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்.
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சை மரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
சங்கீதம்: 37:39,40
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
இவ்விதமாக தேவன் இஸ்ரவேலை எகிப்தில் சிவந்த சமுத்திரத்தின் நடுவிலிருந்து விடுவித்து இரட்சிக்கிறார். இவை தெளிவான திருஷ்டாந்தம் எதற்கென்றால் நம் உள்ளத்தில் உள்ள கடின இருதயமும் அவற்றின் பொல்லாத எண்ணங்களும் மேலும் உலக மாமிச இச்சை இவற்றை நம் ஒவ்வொருவரிலும் தேவன் அழித்து நம்மை விடுவித்து இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். அப்பொழுது தேவனோடு மாத்திரம் ஐக்கியப்படுவோம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.